Published:Updated:

விறுவிறுப்பு குறைந்துபோன விழுப்புரம் ரியல் எஸ்டேட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விறுவிறுப்பு குறைந்துபோன  விழுப்புரம் ரியல் எஸ்டேட்!
விறுவிறுப்பு குறைந்துபோன விழுப்புரம் ரியல் எஸ்டேட்!

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப் ஜெ.முருகன், அ.அச்சனந்தி.

பிரீமியம் ஸ்டோரி
விறுவிறுப்பு குறைந்துபோன  விழுப்புரம் ரியல் எஸ்டேட்!

ந்தாண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் வரைக்குமே ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டு, ஏராளமான மனைகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இன்று விறுவிறுப்பு குறைந்து காணப்படுகிறது விழுப்புரம் ரியல் எஸ்டேட்.

விறுவிறுப்பு குறைந்துபோன  விழுப்புரம் ரியல் எஸ்டேட்!

‘‘மனை விற்பனை முடங்கிப் போயுள்ளது!’’

விறுவிறுப்பு குறைந்துபோன  விழுப்புரம் ரியல் எஸ்டேட்!தாமோதரன், ரியல் எஸ்டேட் முகவர்

“ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்த காலத்தில் விழுப்புரத்தைச் சுற்றி எங்கு புதிதாக மனைகள் போட்டாலும் உடனுக்குடன் விற்றுவிடும் நிலை இருந்தது. ஆனால், உச்சத்தை எட்டிய உடனேயே வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டது. பல கோடிகள் மீட்கப்பட முடியாமல் தற்போது மண்ணில் புதைந்து போயுள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வு, விளைநிலங்களை மனைகளாக்கி விற்க ஐகோர்ட் தடை போன்ற பிரச்னைகள் தொழிலை மேலும் முடக்கிப் போட்டுள்ளது.

மனைகளின் விலைகளில் கடந்த இரண்டு, மூன்றாண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படியான ஏற்றம் இல்லை. சில இடங்களில் பழைய விலையே தொடர்கிறது. சில இடங்களில் வீழ்ச்சியும் கண்டுள்ளது. புதுவை சாலையிலும், திருச்சி சாலையிலும் மட்டும் விலை குறையாமல் இருக்கிறது. புதியதாக வீடு கட்டப் போகிறவர்களின் தேர்வாக இந்த இரண்டு பகுதிகளும் உள்ளன. புதுச்சேரி சாலையில் சதுர அடி 1,000 ரூபாய் வரையும், திருச்சி சாலையில் சதுர அடி அதிகபட்சம் 2,000 வரையும் போகிறது.

சென்னை சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் முண்டியம்பாக்கம், டோல்கேட் இருக்கும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளில் மனைகள் ஓரளவு விற்பனையாகின்றன. இந்தப் பகுதிகளில் சதுர அடி 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. மாம்பழப்பட்டு சாலையில் கமலா நகர், விஏஓ நகர் போன்றவைகள் முன்பு இருந்ததைவிட விலை குறைந்து விற்பனையாகின்றன. பல ஆண்டுகளாக போட்ட முதல்  முடங்கிப்போயுள்ளதால், ‘குறைந்த லாபம் வந்தாலும் பரவாயில்லை; முதலுக்கு மோசம் வராமல் இருந்தால் போதும்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.”

‘‘ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வழிகாட்டி மதிப்பு!’’

விறுவிறுப்பு குறைந்துபோன  விழுப்புரம் ரியல் எஸ்டேட்!பாஸ்கரன், இ.எஸ்.புரோமோட்டர்ஸ்

“விழுப்புரத்தைப் பொறுத்தவரை, ரியல் எஸ்டேட் பிசினஸ் டல்லாகத்தான் இருக்கிறது. சதுர அடி 200 ரூபாய் போகும் இடத்தில் அரசின் வழிகாட்டி மதிப்பு 600 ரூபாயாக இருக்கிறது. 1200 சதுர அடி கொண்ட மனை ஒன்றை வாங்கினால், அதற்கு நிகராக அரசுக்கு முத்திரை வரி செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மனை வாங்கும் எண்ணம் இருந்தாலும் இதன் காரணமாகவே தயங்குகிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள், அரசு என அனைத்துத் தரப்பினருமே இழப்பைச் சந்திக்கிறார்கள். அனைத்து இடங்களையும் ஆராய்ந்து ஏரியாவுக்குத் தகுந்தாற்போல வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். கம்பன் நகர், கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் மனைகளின் மதிப்பு சதுர அடி 2,500 ரூபாய் வரை கணிசமாக உயர்ந்திருக்கிறது. நன்றாக வளர்ச்சி அடைந்து வரும் அரசு பேருந்துக் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளில், சதுர அடி 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை செல்கிறது.”

படங்கள்: தே.சிலம்பரசன்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு