Published:Updated:

தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!
தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப் உ.சுதர்சன் காந்தி

பிரீமியம் ஸ்டோரி

“தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது சாரல் இன்பச் சாரல்...’’ என துள்ளிக் குதித்து ஆனந்தமாக தொழில் செய்த ரியல் எஸ்டேட் உலகம் இன்றைக்கு என்ன செய்தால் பிழைப்பை ஓட்டலாம் என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது. தேனியில் ரியல் எஸ்டேட் தொழிலில் என்ன பிரச்னை, அங்கும் ஏன் ரியல் எஸ்டேட் டல் அடிக்கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம். 

தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!
தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!

உள்கட்டமைப்பு வசதிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில், பத்திரப் பதிவுத் துறையில் இருந்து சரியான முறையில் உத்தரவு இல்லை என்பதாலும், பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள் பதிவு குறித்த தெளிவான அரசாணை வெளியிடாத காரணத்தினாலும் தமிழ்நாடு முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி இருக்கிறது. இது தேனியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தத் தொழிலில் உள்ளவர்களின் நிலையும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. சராசரியாகப் பார்த்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் மனை வாங்கும் கனவு வெறும் கனவாகவே போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

பத்து வருடங்களாக தேனியில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருக்கும் ஜெகதீசனிடம் பேசினோம். ``தேனியில் முன்பெல்லாம் ஒரு நாளில் 100 பத்திரங்கள் வரை பதியப்படும். ஆனால், தற்போது ஒரு நாளில் வெறும் 10 பத்திரங்கள் வரை மட்டுமே பதியப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ‘டிடிசிபி அனுமதி பெறாமல் நிலத்தை பத்திரப் பதிவு செய்யக்கூடாது’ என்ற உத்தரவுதான் இன்றைய நிலைக்கு காரணம். இதனால், அவசரத்துக்கு நிலம் வாங்க விற்க நினைப்பவர்களால்கூட  நிலம் வாங்க முடியாமல் போகிறது. இதனால் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படுகிறது. அரசு நன்செய் நிலத்தை விற்கக்கூடாது, புன்செய் நிலத்தைப் பதியக் கூடாது,  தரிசு நிலங்களைப் பதியக் கூடாது என எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மொட்டையாகப் பதியக் கூடாது எனக் கூறியதால் மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

பதிவுத் துறைக்கும், எந்த சார்நிலை பதிவு அலுவலருக்கும் எந்தவொரு அரசாணையோ, விதிகளோ அனுப்பவில்லை. இதனால் பலர் இந்தத் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்கென்று தமிழக அரசு தனியே ஒரு சட்ட மசோதா நிறைவேற்றவேண்டும்.

தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!

நிலங்களின் விலையை மத்திய மதிப்பு நிர்ணயக் குழுவே அதிகபடுத்திக்கொள்கிறார்கள். சரியான முறையில் விலை இல்லாததால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தரிசு நிலங்களை ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அனுமதி கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்களை மனை இடங்களாக மாற்றக்கூடாது என்பது வரவேற்கத்தக்கது.  விவசாயம் உயிர் போன்றது என்றால், மற்ற உள்கட்டமைப்பு தொழில்கள் உடல் போன்றது. தரிசு நிலங்களை மனை நிலங்களாக மாற்றினால், இரண்டு வகையிலும் அரசு பயனடைய முடியும். தங்கம் போன்ற சொத்துகள் பாதுகாப்பற்றது. எனவே, நிலங்களை வாங்க முன்வரும் மக்கள் இத்தகைய காரணத்தினால் வாங்க முடியாமலே போகிறது. இந்தச் சூழலில் வழிகாட்டி மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உருவாகிறது.

தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!


தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நிலங்களின் விலையை சார்பதிவு அதிகாரிகளே அதிகமாக நிர்ணயித்துக் கொள்கிறார்கள். எந்தவொரு முறையான முன் அறிவிப்பும் இல்லை. 1992-ல் இருந்து அதிகமான விளை நிலங்கள் மனை இடங்களாக மாற்றப்பட்டன. இதற்குமுன் பதிந்த பத்திரங்களை இப்போது பதிய வழிவகை செய்யவேண்டும் என்பது ஒரு கோரிக்கை. விளை நிலங்களை மனைகளாக மாற்ற என்னென்ன நெறிமுறைகள் என்பதைத் தெளிவாகக் கூறினால், ரியல் எஸ்டேட் புரமோட்டர் களுக்கும் எளிதாக இருக்கும்.

தேனியில் ரியல் எஸ்டேட் தொழிலை சார்ந்து அனைத்துத் தொழில்களும் உள்ளன. இப்போது ரியல் எஸ்டேட் முடங்கி இருப்பதால், மற்ற தொழில்களும் ஸ்தம்பித்து இருக்கின்றன. வழிகாட்டி மதிப்பினால்       2012-ல் இருந்து நிலங்களின் விலை அதிகரித்து, தொழிலின் போக்கானது 40 முதல் 100 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதனால் மக்களுக்கு நிலம் வாங்கும் எண்ணம் மறைந்துவிடுகிறது.

வியாபார ரீதியாக விளை நிலங்களை மனைகளாக மாற்ற லே - அவுட், அப்ரூவல் என விதிமுறைகளைக் கொண்டு வந்தது வரவேற்கத் தக்கது. சொத்து விற்க, வாங்க உள்ளாட்சி அமைப்பு மூலம் நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தால், எளிதாக இருக்கும்.  ஒரு நிலத்தின் மதிப்பை சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் சென்று, நிறை குறைகளைக் கேட்டறிந்து நிர்ணயிக்க வேண்டும்.  அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அரசின் கவனக்குறைவினாலும் மிகப் பெரிய சீரழிவை தேனி சந்திக்கப் போகிறது. ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில், வாங்குபவர் களும் விற்பவர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் ஆயிரம் காரணங்களைச் சொல்லி அதனை முடக்குகிறது. வழிகாட்டி மதிப்பீட்டை முறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அரசு கவனம் செலுத்தினால்தான் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

படங்கள் : வீ.சக்தி அருணகிரி

தேங்கிய நிலையில் தேனி ரியல் எஸ்டேட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு