வீதிகள்தோறும் அழகுற அமைந்த கோயில்கள், புறநகர் பகுதிகளில் நடக்கும் விவசாயம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எப்படி பார்த்தோமோ, அப்படியேதான் இருக்கிறது காஞ்சிபுரம். பெரிய அளவில் எந்தத் தொழிலும் வளர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. சென்னையில் உள்ள துணிக் கடைகள், நகைக் கடைகள் என ஒவ்வொன்றாக காஞ்சிபுரத்தில் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் காஞ்சிபுரம் வளர்ச்சியடையும் என நம்புகிறார்கள். ஆனால், ரியல் எஸ்டேட் நிலவரத்தைப் பொறுத்தவரை தொழில் முடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

காஞ்சிபுரம் களநிலவரங்களை அறிய வலம் வந்தோம்.

காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் செய்துவரும் இளங்கோவிடம் பேசினோம். “காஞ்சிபுரம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய கம்பெனிகள் எதுவும் வரவில்லை. ஏற்கெனவே இருந்த கம்பெனிகள் சிலவற்றை மூடிவிட்டார்கள். போதிய வருமானம் இல்லாததால், நெசவுத்தொழிலும் நலிவுற்று இருக்கிறது. கடந்த வருடம் பெய்த மழையில் காஞ்சிபுரம் நகரத்தில் ஒரு சில இடங்களிலும், சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலான இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டன. மழைநீர் தேங்கிய இடங்களில் எல்லாம், ரியல் எஸ்டேட் வியாபாரம் தேங்கிவிட்டது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, வேலூர், செங்கல்பட்டு, வந்தவாசி செல்லும் பிரதான சாலைகள், புறவழிச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் ஆகிய இடங்களில் ஓரளவுக்கு விற்பனையாகி வந்த வீட்டுமனைகளும் தற்போது விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. நகரத்தில் உள்ள நிலங்கள் மட்டுமே மறுவிற்பனை செய்ய முடியும் வகையில் உள்ளன. கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள நிலங்கள் தேக்கமடைந்துள்ளன.

பதிவுத் துறையில், அரசு வழிகாட்டி மதிப்பு முறையில் குளறுபடி செய்கிறார்கள். ரியல் எஸ்டேட் முடங்குவதற்கு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். மாவட்டப் பதிவாளர் நினைத்தால் 500 ரூபாய் வழிகாட்டி மதிப்பு இருக்கும் இடத்துக்கு 200 ரூபாயும் போடமுடியும், 1,000 ரூபாயும் போட முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் முறைகேடுகள் அதிகரித்துவிட்டன. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்கும்போது, ‘அது எங்களோட விருப்பம்; எப்படி வேண்டுமானாலும் போடுவோம்’ என்று கறாராகப் பேசுகிறார்கள். பாண்டிச்சேரியில் வழிகாட்டி மதிப்பை 25% குறைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு நிலம் வாங்குவதிலும் விற்பதிலும் சிக்கல் இல்லை. அதுபோல் தமிழகத்தில்

வழிகாட்டி மதிப்பை 25% குறைக்க வேண்டும்.

நிலத்தில் குறுகிய கால முதலீடு என்பது பலன் அளிக்காது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்காக நிலங்களில் முதலீடு செய்யக் கூடாது. அவசரத்துக்கு நிலங்களை விற்க முடியவில்லை என்பதால் குறைந்த விலைக்கே விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீடுகட்டி வாடகைக்கு விடும்போது, முதலீடு செய்த பணத்துக்கான வட்டியைக்கூடப் பெறமுடிய வில்லை. இதனால் சொந்த வீடுகட்டி குடியேற நினைப்பவர்கள் மட்டும் நிலத்தை வாங்கலாம்” என்கிறார்.

என்.கே.எஸ் புரமோட்டர்ஸின் வடிவேல், “காஞ்சிபுரம் பகுதிகளில் வீட்டுமனைகளே குறைந்த விலையில் கிடைப்பதால், அபார்ட்மென்ட் வாங்க யாரும் விரும்புவதில்லை. காஞ்சிபுரம் தொன்மையான நகரம் என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாடுகளும் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் வராததற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். மாநில தொல்லியல் துறை சார்பாக சில கோயில்கள் உள்ளன. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 மீட்டருக்கு மேல் கட்டடம் கட்ட முடியாது. அப்பகுதிகளில் கட்டடம் கட்ட வேண்டுமானால் உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. காரை பகுதியில் எல்&டி கம்பெனி மற்றும் வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி ஆகியவைப் புதிதாக வந்திருக்கின்றன. இதனால் இப்பகுதியில் கடந்த ஆண்டுவரை ஓரளவு நிலங்கள் விற்பனையாகி வந்தன. ஆனால், அந்த இடத்திலும் இந்த வருடம் விற்பனை முற்றிலுமாக குறைந்துவிட்டது. காஞ்சிபுரம் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்ற ளவுக்கு வெளியே உள்ள நிலங்கள் பெரும்பாலும் பஞ்சாயத்து அப்ரூவல் நிலம் என்பதால், அந்த இடங்களில் தற்போது முற்றிலுமாக விற்பனை இல்லை. டிடிசிபி அப்ரூவல் நிலங்களையும் யாரும் வாங்க முன்வருவதில்லை” என்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவு அலுவலக வட்டாரத்தில் பேசினோம். “மாவட்டப் பதிவு அலுவலகத்தில் மாதம் 7000 என்ற அளவில் பத்திரம் பதிவாகும். கடந்த இரண்டு மாத காலமாக 4600 என்ற அளவில் மட்டுமே பத்திரங்கள் பதிவாகி இருக்கின்றன. டிடிசிபி அனுமதி இல்லாத நிலங்களில் பதிவு தவிர்க்கப்பட்டதால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2014-க்கு முன் வருடத்துக்கு சுமார் ஒரு லட்சம் பத்திரங்கள் பதிவாகும். 2014-2015 ஆண்டில் 92,000 பத்திரங்களும், 2015-16-ம் ஆண்டில் 84,000 பத்திரங்களும் பதிவாகி இருக்கின்றன. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை, அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதி மற்றும் கிராமங்களில் உள்ள பகுதிகளில் உள்ள அனுமதி இல்லாத வீட்டு மனைகள்தான் விற்பனையாகிக் கொண்டிருந்தன. 600-1000 சதுரஅடியில் உள்ள பட்ஜெட் பிளாட் எதையும் விற்க முடியவில்லை. கிராமப் பஞ்சாயத்து தலைவர் அப்ரூவல் என்ற ஒன்று கிடையாது. ஆனால், இப்போது இதற்குத் தடை என்பதால் பத்திரப்பதிவு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.

கட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்.