ரூ.500, ரூ.1,000 செல்லாது என்கிற மோடி அரசின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, பினாமி சட்டமும் முழுவேகத்தில் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதிக மதிப்பிலான பணம் செல்லாமல் ஆகியிருப்பதன் மூலம், ரியல் எஸ்டேட் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பினாமி சட்டத்தையும் முழுவீச்சில் அமல்படுத்தினால், ரியல் எஸ்டேட் துறை மேலும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, ரியல் எஸ்டேட் துறை இனி என்ன ஆகும் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் நடந்த முக்கியமான மாற்றங்களை நாம் அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ளவேண்டும்.

2005-க்கு பிறகு இந்தியா முழுவதுமே ரியல் எஸ்டேட் சூடு பிடித்தது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் காரணமாக வேலை வாய்ப்புகள் பெருகத் துவங்கின. அதனால் நடுத்தர வர்க்கத்தினர் என்று சொல்லக் கூடியவர்களால் முக்கிய நகரங்களில் வீடு வாங்குவது சாத்தியமாயிற்று. வீட்டு மனை வாங்க வங்கிகள் நிதி உதவி செய்தன. இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே முழுக் கடனையும் திருப்பி செலுத்திவிட்டு, அதே நபர் மற்றொரு வீட்டை வாங்கக்கூடிய அளவுக்கு பலருக்கும் நிதி ஆதாரம் இருந்தது.

இதனால் நிலத்தில் ஆரம்பித்து, சிமென்ட், ஸ்டீல், மணல், உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. இவை மட்டுமல்லாமல், சிமென்ட், ஸ்டீல் போன்றவற்றை தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. 2008 - 2011 ஆண்டுகளில் மூலப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டபோது, வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தன. குறிப்பாக, மின்சாரம், கட்டுமானம் மற்றும் ஸ்டீல் துறைக்கு வங்கிகள் கடனுதவி செய்தன.

ஆனால், 2011-க்குப் பிறகு சந்தைப் பொருட்களின் விலை உலக அளவில் சரியத் துவங்கியபின், இந்தியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களால் ஏற்றுமதியும் செய்ய முடியவில்லை; அதற்கான விலையும் இல்லாமல் போயிற்று. நிறுவனங்கள் தள்ளாடத் துவங்கின. நிறுவனங்களுக்குச் செலவுகள் அதிகரித்தும் வருமானம் குறைந்தும் நிலைமை தலைகீழாக மாறியது. வேலைவாய்ப்பும் குறைந்தது. வங்கிகளுக்கு, நிறுவனங்களால், கடனைத் திருப்பித் தருவதற்கான சூழ்நிலை இல்லாததால், வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 2009, 2010-களில் ரூ.46-ஆகக் காணப்பட்டது, 2013-ல் ரூ.67-ஆக சரிந்தது. கச்சா எண்ணெய் விலையும் 100 டாலருக்கு மேல் வர்த்தகமானது. பணவீக்கம் கூடியது. இதை கட்டுக்குள் கொண்டுவர, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனது.

ஆக மொத்தத்தில் வங்கிகளால், தாங்கள் கொடுத்த பணத்தை இன்றுவரை வசூலிக்க முடியவில்லை. ஆர்.பி.ஐ.-ன் நெருக்குதலுக்கு ஆளாகி, தற்போது புதிய கடன்களை வழங்க போதிய நிதி வசதி இல்லாமல், வாராக் கடன்களுக்கு நிகராக நிதி ஒதுக்கி வருவதால், வங்கிகளின் லாபம் குறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் ஒரு சில நிறுவனங்கள், பெரிய அளவிலான முதலீடுகளில் நிலங்களை அதிக விலைக்கு வாங்கிவிட்டபடியால், தற்போதைய தேக்க நிலையை சமாளிக்க முடியாமல், அதாவது விற்பனை விலையைக் குறைக்க முடியாமலும், அதேசமயம், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் தரமுடியாமலும், சிக்கலுக்கு உள்ளாகி உள்ளன. சில நிறுவனங்கள் பாதி முடித்த நிலையில், ஏற்கெனவே வீடு வாங்க பதிவு செய்தவர்களுக்கு, குறித்த காலத்தில் ஒப்படைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் கடந்த நான்கு வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் நிலங்கள் மற்றும் ஃப்ளாட் விற்பனையில் தொய்வு காணப்படுகிறது.

2008-க்குப் பிறகு இந்தியாவில், ரியல் எஸ்டேட் துறையில் உடனடியாக இதன் தாக்கம் உணரப்படாததற்குக் காரணம், அரசு செய்த உதவிதான். அரசு இத்தனை உதவி செய்தும் 2011-க்குப் பிறகு ரியல் எஸ்டேட் மீது செய்யப்படுகிற முதலீட்டிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் (அதாவது, வாடகையினாலோ அல்லது வேறு வகைகளினாலோ) தொடர்ந்து சரிந்து வருகிறது. (பார்க்க மேலே உள்ள வரைபடம்).
இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதாவது, சப்ளை வெகுவாக அதிகரித்தது. இரண்டாவது, வேலைவாய்ப்பு குறைந்ததால், வருமானமும் குறைந்தது. நம் நாட்டில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுடைய தனி நபர் வருமானம் குறையும்போது, வாடகை கொடுப்பதும் குறைகிறது.

மேலும், இன்றையத் தேதியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் வாடகைக்கு வராமல் பூட்டி வைத்திருக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக, வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனுதவி செய்யும் காலத்தில், இந்தத் துறையிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிப்பதும், எப்போதெல்லாம் கடன் தருவது குறைகிறதோ, அப்போதெல்லாம் குறைவதுமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இனி ரியல் எஸ்டேட் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

* பணப் பரிவர்த்தனை மிகவும் குறைவதால், கிரயத்தொகை முழுவதையும் காசோலையில்தான் செலுத்தவேண்டி வரும். வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை விலைக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் விற்பதில் காலதாமதம் ஏற்படும்.

* புறநகரங்களில், அதாவது அடிப்படை வசதி ஏதும் இல்லாத இடங்களில் விலை சரிவதற்கு வாய்ப்புண்டு. ஏனென்றால், யாருமே குடி வராத காலி நிலங்களை விற்பனை செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

* நகரங்களில் ஃப்ளாட் விற்பனை என்பது கட்டடம் அமைந்துள்ள இடத்திலுள்ள வசதிகளைப் பொறுத்து விலை மாறுபடும்.

* தற்சமயத்தில், குடியேறுவதற்காக வீடு வாங்குபவர்கள் பங்களிப்பு மட்டுமே காணப்படும் என்பதால், குறுகிய கால முதலீடுகள் செய்யப் படுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் தேவை இன்னும் குறையும்.

* பணப் பரிவர்த்தனையிலும், பரப்பளவு, பொது இடங்களில் நுகர்வோரின் உரிமைகளிலும், கட்டுமான நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மை வரும் காலத்தில் மேம்படும்.

* வங்கிகளின் நிதி நிலைமை தற்போது மேம்படுவதால், கட்டுமானத் துறை செலவீனங்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் அடிப்படை வசதிகளில், அரசு கவனம் செலுத்தும் என்பதால், நிலங்களின் மதிப்பானது ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல்,உண்மையான சுகாதார மற்றும் சாலை வசதிகள், மின் வசதி போன்றவைகளின் காரணமாக விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

* அரசு எடுக்கிற ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர் களுக்கு, குறிப்பாக, நுகர்வோருக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

வீட்டுக் கடன் வட்டி 7 சதவிகிதத்துக்குக் குறையும்!

சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கியின் வெல்த் மேனேஜ்மென்ட் மேனேஜர் என்.விஜயகுமார், ‘‘மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த ஒரு வார காலத்தில் வங்கிகளில் ரூ. 3.5 லட்சம் கோடி புதிதாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் ரூ.12-15 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால், வங்கிகளின் நிதி திரட்டும் செலவு (Cost of funds) கணிசமாகக் குறையும். 4 சதவிகித வட்டிக்கு பொது மக்களிடம் இருந்து வங்கிகளுக்கு அதிகத் தொகை கிடைக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி (இப்போது 7-7.25%) இன்னும் குறையும். இன்னும் 1-1.5 ஆண்டுகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி 7-7.5 சதவிகிதமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதே போல், கார் கடன், பர்சனல் லோன் போன்ற வற்றுக்கான வட்டியும் கணிசமாகக் குறையும்” என்றார்.

- சேனா