Published:Updated:

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்ஜி.பழனிச்சாமி

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்ஜி.பழனிச்சாமி

Published:Updated:
வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்
வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

ம்பானியாக இருந்தாலும் சரி, அன்றாடம் காய்ச்சியாக வாழ்ந்தாலும் சரி... சொந்த வீடு ஒன்றைக் கட்டி அதில் சுதந்திரமாக வாழவேண்டும் என்கிற கனவு அனைவருக்குமான ஒன்று.  சொந்த ஊரில் என்னதான் சொந்தமாக வீடு இருந்தாலும், வேலை பார்க்கும் ஊரில்  சொந்தமாக ஒரு வீடு கண்டிப்பாக தேவை என்பதும் நடுத்தர மக்களின் விருப்பம்.

வாழ்வின் பெரும்பகுதி நாட்களை அந்த லட்சியம் ஒன்றை நோக்கி மட்டுமே நகர்த்திக் கொண்டிருக்கும் சாமான்யர் அனேகம்பேர். அதுவும் திருப்பூர் போன்ற பணப்புழக்கம் அதிகம் உள்ள ஊர்களில் சொல்லவே தேவையில்லை.

ஆண்டுக்கு 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைந்த ஊர். கிட்டதட்ட 9 லட்சம் மக்கள் வசிக்கும் இடம். நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வந்துபோகும் நகரம். டாலர் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் திருப்பூர்.

வேகமாக வளர்ச்சி நடக்கும் பனியன் நகரத்தில் ரியல் எஸ்டேட் நிலவரம் என்ன என்று அறியும்விதமாக, நகரின் பல இடங்களில் வலம் வந்தோம். கருவம்பாளையத்தைச் சேர்ந்த கணபதி நடராஜனிடம் பேசினோம்.
‘‘திருப்பூர் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, இங்கு எல்லா மனைகளும் சென்ட் கணக்கில்  விலை பேசப்படுகிறது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. வரை மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. திருப்பூரின் வடக்குப் பகுதியான அவினாசி ரோடு, பெருமாநல்லூர் ரோடு ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

ராக்கியாபாளையம், நல்லூர், விஜயாபுரம் வரையிலான காங்கேயம் சாலையை ஒட்டியுள்ள ஊர்கள் குடியிருப்புப் பகுதியாக பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது.

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

அதேபோல், தாராபுரம் ரோட்டில் உள்ள கரட்டாங்காடு,செரங்காடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், செட்டிப் பாளையம். அமராவதிபாளையம், கோயில் வழி பொல்லிக்காளிபாளையம் பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்பு வீடுகள் பெருகி வருகின்றன.

இந்தப் பகுதிகளில் சென்ட் மனை விலை 3 லட்சம் தொடங்கி 7 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.

அதேபோல், அவினாசி சாலை பகுதியில் உள்ள, குமார் நகர், சாமுண்டிபுரம், காந்திநகர், 15 வேலம்பாளையம், காவிலிபாளையம் ஏரியாக்கள் புறநகர்களாக உருவாகி வருகின்றன.இங்கு சென்ட் மனை  5 லட்சம் தொடங்கி 15 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.

மாநகராட்சி எல்லைக்குள் செரீப் காலனி, ராயபுரம், லட்சுமி நகர், பிரிட்ஜ் வே காலனி, கே.பி.என். காலனி உள்ளிட்ட பங்களா வாசிகள் இருக்கும் பகுதியில் சென்ட தலா 15 லட்சம் தொடங்கி 40 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. அதுவும் விற்பனைக்கு உள்ள குறைந்த சைட்டுகள் அல்லது பழைய வீடுகள் சில மட்டும்தான் தேடினால் கிடைக்கும்.

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்இதில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனைகள் என்றால், கூடுதலாக ரூ.2 லட்சம் வரை விலை போகும். திருப்பூரைப் பொறுத்தவரை, அடுக்கு மாடிக் குடியிருப்பு கலாசாரம் வேகம் பிடிக்கவில்லை. தனி வீடு கலாசாரம்தான் அதிகம்.

தனி வீடுகள் கட்டி விற்பனை செய்துவரும் கட்டுமான நிறுவனங்கள் சில, இப்போது அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்க துவங்கியுள்ளன. இதற்கான ஆதரவைப் பொறுத்தே  இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தில் களமிறங்கும். 

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 800 சதுர அடி நிலத்தில் ஒரு படுக்கை அறை  வீடு, 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இரண்டு படுக்கை அறை வீடு 20 தொடங்கி 35 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ஏற்றுமதி நிறுவனங்களில் அதிகாரிகளாக இருப்பவர்கள் இந்த வீடுகளை வாங்குவார்கள். இதுபோன்ற வீடுகள் கட்டி முடித்தவுடன் விற்பனையாகி ஆகிவிடுகின்றன.

வாரச் சம்பளம் வாங்கும் வெளியூர் தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் ஊர் திருப்பூர். இந்தத் தொழிலாளிகள், நகரை விட்டு சுமார் 15 கி.மீ. தூரம் தள்ளி கிராமப் பகுதிகளில் விற்கப்படும் மனைகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இங்கே சென்ட் மனை விலை 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இந்த இடத்தில் 1,000 அல்லது 1,500 சதுர அடிக்குள் வாங்கும் மனையில் ஓட்டு வீடு கட்டிக் குடியிருக்கின்றனர்.

ஏற்றுமதி நிறுவனங்களின் வாகனங்கள் வீடு வந்து அழைத்து செல்வதால், கிராமப் பகுதிகளில் குடியிருப்பது ஒன்றும் அவர்களுக்குச் சிரமம் இல்லை. ஆதலால், பல்லடம் ரோடு பகுதிகளான கணபதிபாளையம், சின்னக்கரை, குங்குமம் பாளையம் கிராமங்களில் தொழிலாளர்களின் ஓட்டு வீடுகள் பெருகி வருகின்றன’’ என்றார்.

 திருப்பூரைச் சுற்றியுள்ள 20 கி.மீ. சுற்றளவில் நிறைய காலி மனைகள் உள்ளன. மெயின் பகுதியில் சென்ட் 2 லட்சம் தொடங்கி 3 ரூபாய் வரை உள்ளது. உள்பகுதியில் சென்ட் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இங்கு குக்கிராமங்களில்கூட சென்ட் ஒரு லட்சம் ரூபாய்தான் குறைந்தபட்ச விலையாக இருக்கிறது.

மற்ற ஊர்களைவிட திருப்பூரில் வேலை  வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஏற்றுமதி ஊரின் ரியல் எஸ்டேட்  நிலவரம்  சற்று ஏறுமுகத்தில் இருக்கிறது எனலாம்.

படங்கள் : ரமேஷ் கந்தசாமி

திருப்பூர் புறநகர்

(மனை விலை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)

* கோவில் வழி    :    2-3 லட்சம்

* இடுவாய்    :    1-2 லட்சம்

வசந்தகாலம் திரும்புகிறதா? - திருப்பூர் ரியல் எஸ்டேட்

* மங்கலம்    :    75,000-1.5 லட்சம்

* பெருமாநல்லூர் மெயின்    :    7-9 லட்சம்

 * உள் கிராமப் பகுதி    :    2 -3 லட்சம்

* ஊத்துக்குளி மெயின்    :    5-6 லட்சம்

* அருள்புரம் மெயின்    :    3-4 லட்சம்

 * உள்பகுதி    :    1-2 லட்சம்

* கணபதி பாளையம்    :    3-4 லட்சம்

* உள்பகுதி    :    1-2 லட்சம்