Published:Updated:

சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!

சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!

சி.சரவணன்

சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!

சி.சரவணன்

Published:Updated:
சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!
சொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்!

1. சொத்து அமைந்திருக்கும் இடம்!

மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு என எதுவாக இருந்தாலும், அது அமைந் திருக்கும் இடம் முக்கியம். எளிதில் சென்றடைகிற மாதிரி போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். பிற்காலத்தில் அந்த வீட்டில் நாம் குடியிருக்கவில்லை என்றாலும் போக்குவரத்து வசதியுடன் இருந்தால்,  விற்கும்போது அதிக விலை கிடைக்கும். மனை அல்லது வீடு அமைந்திருக்கும் இடம், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான இடமாக இருக்கக்கூடாது. கழிவு நீர் கால்வாய்  ஓரம்,  குப்பைகள் கொட்டப்படும் மைதானம், சுடுகாட்டை ஒட்டி உள்ள பகுதிகளில் சொத்து வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

2. அடிப்படை வசதிகள்!


சொத்து அமைந்திருக்கும் பகுதியில் கடைகள், பள்ளிக்கூடங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் ஏடிஎம்கள், மருத்துவமனைகள் போன்றவை இருப்பது அவசியம். மேலும், கழிவு நீரைத் தேங்காமல் வெளியேற்றும் சாக்கடை வசதியும் இருப்பது மிக அவசியம்.

3. சொத்தின் அளவு!

மனை, தனி வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு என எதுவாக இருந்தாலும், சொத்தின் அளவு என்பது மிகச் சரியாக இருக்க வேண்டும். மனை என்கிறபோது மொத்தம் எத்தனை சதுர அடி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு,  பத்திரத்தில் 900 ச.அடி இருக்கிறது எனில், அந்த இடத்தில் 1000 ச.அடி இருந்தால், அதற்கான பணத்தை  வாங்கிவிடுவார்கள்.இதற்காக இடத்தை விற்பவர் கொஞ்சம் விலையைக் குறைத்தும் விற்கலாம். பிற்பாடு அந்தப் பகுதியில் மொத்த சர்வே மேற்கொள்ளும் சூழ்நிலை வந்தால், உங்கள் பத்திரத்தில் இல்லாத 100 சதுர அடி மனை உங்கள் கையை விட்டுப் போகும்.

4. வாகன நிறுத்தும் இடம்!

வீட்டுக்குள் கார் நிறுத்தும் இடம் (Parking space) இருந்தால் மட்டுமே வீட்டை வாங்க வேண்டும். இப்போது உங்களிடம் கார் இல்லாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் கார் வாங்கும் வசதி வரும்போது, புது வீடு வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். அப்போது பழைய வீட்டை விற்பதில் இழப்பு ஏற்படும் சூழ்நிலை வரலாம்.

5. கட்டுமானத்தின் தரம்!

ஒரு வீட்டின் உறுதி அதன் கட்டுமானத்தில் இருக்கிறது. தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட வீடு, வலிமையற்ற வீடு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனை ஒரு பொறியாளர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானம் தரமற்றதாக இருந்தால் மழை, புயல், நில அதிர்ச்சி ஏற்பட்டால் கட்டடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, கட்டணம் பார்க்காமல் ஒரு கட்டட என்ஜினியரை அழைத்துக்கொண்டு போய் காட்டிவிடுவது கட்டாயம்!