Published:Updated:

ரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரெரா சட்டம்:  ரியல் எஸ்டேட்  பங்குகளில்  முதலீடு செய்யலாமா?
ரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

டந்த  சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையாமல் நெருக்கடிக்குள்ளானது. நாடு முழுவதும் உள்ள கட்டுமான நிறுவனங்கள், தாங்கள் கட்டிமுடித்த வீடுகளை விற்க முடியாமல் திண்டாடி வந்தன. வீடு, மனை மற்றும் நிலங்களுக்கு டிமாண்ட் இல்லாத நிலையிலும்கூட, அவற்றின் விலை பெரிதாகக் குறையவில்லை என்பது நுகர்வோர்களிடையே பெரும் குறையாகப் பேசப்பட்டு வந்தது. இந்தக்  காரணத்தால் சொத்து வாங்க நினைத்தவர்களும் வாங்குவதைத் தவிர்த்து வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. அதற்காக ‘ரெரா’ (RERA) சட்டம் என்ற ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தையும் அரசு தொடங்கி இருக்கிறது.

ரெரா சட்டம்:  ரியல் எஸ்டேட்  பங்குகளில்  முதலீடு செய்யலாமா?

இந்த ‘ரெரா’ சட்டம் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப் படைத்தன்மை உருவாகும். வீடு, மனை மற்றும் நிலம் வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு பலன் உண்டாகும் என்று கூறப்பட்டது. இதில் முக்கியமாக,  குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டைக் கட்டி முடித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வில்லை எனில், இழப்பீடு வழங்கும் அம்சமும், அப்படி வழங்கத் தவறினால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்ற அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபோன்ற பல அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருப்பதால் வாடிக்கையாளர் களிடையே இந்தச் சட்டத்துக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. 

ரெரா சட்டம்:  ரியல் எஸ்டேட்  பங்குகளில்  முதலீடு செய்யலாமா?



இந்தச் சட்டம், கடந்த மே 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்ததையடுத்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று, பங்குச் சந்தையில் ரியால்ட்டி இண்டெக்ஸ் 10% வரை உயர்ந்து வர்த்தகமானது. ரியல் எஸ்டேட் குறியீடு மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, கட்டுமானக் கடன் நிறுவனங்கள், சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருள் நிறுவனங்கள் ஆகிய நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் இதுவரை ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்கு களில் வெளிநாட்டு முதலீட்டாளர் கள் மட்டுமே முதலீடு செய்துவந்த நிலையில், தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

ஆனால், இந்த ‘ரெரா’ சட்டம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சற்று நெகட்டிவான சூழலைத் தர வாய்ப்புள்ளது என்கிறார்கள், அனலிஸ்ட்கள். இந்த நிலையில், தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை பங்குகளில் முதலீடு செய்யலாமா என்று ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் மற்றும் அட்வைசரி நிறுவனத்தின் இயக்குநர் ஜி. சொக்கலிங்கத்திடம் பேசினோம்.

ரெரா சட்டம்:  ரியல் எஸ்டேட்  பங்குகளில்  முதலீடு செய்யலாமா?

“இந்தச் சட்டம் நுகர்வோர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டத்தினால் நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். நிறுவனங்களுக்கு இப்போதிருக்கும் நெகிழ்வுத்தன்மை இனி இருக்காது. விதிமுறைகளை மீறினால் சிறைக்குக்கூட போக வேண்டிய வாய்ப்பு உருவாகலாம்.

ரியல் எஸ்டேட் துறையில் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத சமயங்களில் நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதித்தன. அந்த நேரத்தில் கூட வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டுதான் இருந்தனர். நுகர்வோரைப் பாதுகாக்கும் இந்தச் சட்டத்தினால் வாங்குபவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து விடாது. எல்லோரும் விலை குறையும் என்றே காத்திருக்கிறார்கள். வாங்கக் கூடிய விலையில் எதிர்பார்த்த இடத்தில் வீடுகள் கிடைப்பதில்லை என்பதுதான்  தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது.

ரெரா சட்டம்:  ரியல் எஸ்டேட்  பங்குகளில்  முதலீடு செய்யலாமா?



தற்போது ‘ரெரா’ சட்டம், பங்குச் சந்தையில் உருவாக்கி இருக்கும் ஏற்றம் தற்காலிகமானதே.  ஏனெனில் ‘ரெரா’ சட்டமானது தொடக்கத்தில் நெகட்டிவான சூழலையே ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கேஷ் ஃப்ளோவை பாதிக்கும். இந்தப் புதிய சட்டத்துக்கேற்ப ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களின் பிசினஸ் மாடலை மாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கிறது. எனவே, தற்போதைய ஏற்றத்தை லாபமெடுக்க பயன் படுத்திக்கொள்ளலாமே தவிர, ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தையைப் பொறுத்த வரை, நிறுவனங்களின் ஃபண்டமென்டல்கள்தான் முக்கியம். நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை எப்படியிருக்கிறது, அவற்றின் விற்பனை வளர்ச்சி எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும்போது அவற்றின் நிலை நமக்குத்  தெரியவரும். அதுவரை முதலீடு செய்பவர்கள் சற்று நிதானமாக இருக்கலாம்” என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு