Published:Updated:

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!
கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!


வீட்டுக்கான பிளானை புரிந்துகொண்டு கட்டடம் கட்டினால்,
பிற்காலத்தில் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

ன்றைய தேதியில் சொந்த வீடு என்பது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் அமையும் வரமாக வாய்த்து விடுகிறது. ஆசை ஆசையாக நாம் கட்டப் போகும் வீடு எப்படி இருக்க வேண்டும் என ஆர்க்கிடெக்ட் அல்லது என்ஜினீயரிடம் பிளான் போட்டு வாங்கி விடுகிறோம். ஆனால், அந்த பிளானில் என்ன இருக்கிறது? அதிலுள்ள குறியீடுகள் எவற்றைக் குறிக்கிறது என்பது மெத்தப் படித்தவர்களுக்குகூட புரிவதில்லை.

விளைவு..? அலமாரி வடக்கு பக்கம் வந்திருக்கிறது, குளியல் அறைக் கதவு வெளிப்பக்கமாக திறக்கிற மாதிரி இருக்கிறது என பலவகையான புலம்பல். இந்த சிக்கலைத் தவிர்க்க ஒரே வழி, நம் வீட்டுக்கான பிளானை சரியாகப் புரிந்து கொள்வதுதான்! ஒரு வீட்டுக்கான பிளானை எப்படி சரியாகப் புரிந்து கொள்வது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் சோழா பவுண்டேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கே.சுந்தரம்.

Click to Enlarge

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

''புளூ பிரின்ட் பிளானை கையில் எடுத்ததும் முதலில் பார்க்க வேண்டியது திசையைத்தான். பிளானின் மேற்பகுதியில் மையத்தில் ஒரு அம்புக்குறியிட்டு அதன் மேல் ஆங்கில எழுத்தான 'N’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். கட்டட வரைபடத்தில் வடக்கு திசையைக் குறிப்பதுதான் இந்த சிம்பல். இதுமாதிரி கட்டட வரைபடத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு குறியீடும் ஒவ்வொரு விஷயத்தைக் குறிக்கும். ஜன்னலுக்கான குறியீடு ஒரு மாதிரியாகவும், வெண்டிலேட்டருக்கான குறியீடு வேறு மாதிரியாகவும் இருக்கும். கட்டடத்தின் வரைபடத்தைப் பார்த்து எது எங்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

##~##
ஜன்னல், கதவு போன்றவை ஒற்றைக் கதவா? இரட்டைக் கதவா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சமையல் அறை, குளியல் அறையில் எந்த இடத்தில் டைல்ஸ் ஒட்ட வேண்டும்?, எவ்வளவு உயரத்துக்கு ஒட்ட வேண்டும்? என்பது முதற்கொண்டு பிளானில் எல்லா விஷயங்களும் குறிக்கப்பட்டிருக்கும். இதேபோல், தரை வழவழப்பாக இருக்குமா? சொர சொரப்பாக இருக்குமா? என்பதுகூட தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் நாம் புழங்கும் தரை வழவழப்பாகவும், குளியல் அறை தரை மட்டும் சொர சொரப்பாகவும் இருந்தால் அதையும் வரைபடத்தில் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்'' என பல விஷயங்களைச் சொன்னவர், பிளானை சரியாகப் பார்த்து புரிந்து கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டார்.  

நல்ல வீடு இப்படி இருக்கும்!

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

சாதாரணமாக சமையல் அறை மேடை தரையிலிருந்து 75 முதல் 80 செ.மீ. உயரத்தில் இருக்கும். ஆனால், நம் வீட்டில் சமைப்பவர்களின் உயரத்தைப் பொறுத்து அதற்கேற்ப சமையல் மேடை அமைத்தால் சமையல் செய்வது எளிதாகும்.

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

சமையல் அறையில் ஜன்னலின் உயரம், காற்று வந்து ஸ்டவை அணைத்துவிடாதபடி உயரமாக இருக்க வேண்டும்.

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

வீட்டில் மூத்த குடிமக்கள் இருந்தால் அல்லது எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, வீட்டிற்குள் நுழையும் வழியை சரிவாக அமைப்பது நல்லது. இதேபோல், சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்தும் மாடிப் படிக்கட்டுகள், குளியல் அறை அமைப்பது நல்லது.

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

வயதான பெற்றோருக்கு என தனியாக அறை கட்டிக் கொடுப்பவர்கள், அவர்கள் அந்த அறையை வசதியாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அலமாரிகளை கொஞ்சம் தாழ்வாக அமைத்துத் தரவேண்டும்.

கட்டட வரைபடம்: கரெக்ட்டா புரிஞ்சுகிட்டா காசு மிச்சம்!

குளியல் அறை மற்றும் கழிவறையின் கதவுகள் உள்புறமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து உருவாக்கிய பிளானை இனிமேலாவது உற்றுப் பாருங்கள்..! வீண் குழப்பத்திற்கும், செலவுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள்!

''பிளான் சரியாக புரியவில்லை என்றால், சுவர் கட்டிய பிறகு அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டி இருக்கும். இதனால் அதிக செலவாகும். எனவே, பிளானை அப்ரூவலுக்கு அனுப்பும் முன் அதில் குறிப்பிட்டிருக்கும் குறியீடுகள் எல்லாம் சரிதானா? நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் சரியாக வருகிறதா? என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது''.

புதிதாக வீடு கட்டுகிறவர்கள் உடனடியாக பிளானை எடுத்துப் பார்க்கலாமே!

- சி.சரவணன்