Published:Updated:

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

குறைவான சதுர அடி கொண்ட குறைந்த விலை வீடுகள் (Affordable home) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்த புராஜெக்ட்களில் பெரிய லாபம் இருக்காது என்பதால் பல புரமோட்டர்கள் இதில் ஆர்வம் எதுவும் காட்டுவதில்லை.

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

தாரணமாக, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 8 - 10 லட்சம் ரூபாய் வரையிலான ஃபிளாட்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. ஆனால், அங்கு கட்டப்படும் ஃபிளாட்டுகள் 15 - 30 லட்சம் ரூபாய்க்குள் இருக்கின்றன. இதுபோன்ற நிலையில் அஃபோர்டபிள் வீடுகளை கட்டும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு மத்திய அரசு 2011 பட்ஜெட்டில் வரிச் சலுகை அறிவித்திருந்தது. இதுகுறித்து அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (அதன் முக்கிய அம்சங்களை பெட்டிச் செய்தியில் பார்க்க!) மத்திய அரசு இப்படி சலுகை அளிப்பதால் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கும் மக்களுக்கும் என்ன லாபம் என சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான என்.எஸ்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மேலோட்டமாகப் பார்த்தால், டெவலப்பர் களுக்கு வரிச் சலுகை கிடைக்கும்; அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் வீடுகள் கட்டப் பட்டால் எல்லோருக்கும் வீடு கிடைக்கும் என்பதுபோல் தோன்றும். இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

இ.டபிள்யூ.எஸ்., எல்.ஐ.ஜி. மற்றும் எம்.ஐ.ஜி. பிரிவினருக்கான வருமான வரம்பு தெளிவாகச் சொல்லப்படவில்லை. தவிர, எத்தனை டெலவப்பர்கள் இதுபோன்ற குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்ட முன்வருவார்கள் என்பது பெரிய கேள்விக்குறி.  மக்கள் வசிக்கப் போதுமான அளவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத புறநகர்களில் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டி விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என்பது கேள்விக்குறியே!

##~##
சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்றதொரு திட்டம் கொண்டுவரப்பட்டது.  ஆனால், அதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்ததால் வரிச் சலுகை எதுவும் பெற முடியாமல் போனது. அது மாதிரி பிரச்னைகள் இத்திட்டத்திலும் வர வாய்ப்புண்டு. எனவே, எந்த ஒரு டெவலப்பரும் துணிச்சலாக சாதாரண மக்களுக்குத் தேவையான குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வர மாட்டார்.

ஆனால், பெரிய நிறுவனங்கள், அவர்களின் ஊழியர்களுக்கு இதுபோன்ற பட்ஜெட் வீடுகளைக் கட்டி கொடுத்தாலோ அல்லது வாடகைக்கு கொடுத்தால் அதற்கான செலவை இதர வருமானத்தில் கழித்துக் கொள்ள முடியும். இந்நிலையில் பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதிகளைச் செய்து கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தில் உள்ள நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்களை மத்திய அரசு நீக்கினால், உண்மையில் லாபகரமாக அமையும்'' என்றார்.

அரசு கவனத்தில் கொள்ளுமா?

வரிச் சலுகை: முக்கிய அம்சங்கள்!

வாங்கக்கூடிய விலையில் வீடு கட்டும் டெவலப்பர்களுக்கு நிலம், வீடு கட்ட  வாங்கிய கடன் மற்றும் வட்டிச் செலவு போக மீதியுள்ள செலவை 100% கழித்து, மீதத்திற்கு வரி கட்டினால் போதும்.

இந்த வரிச் சலுகை பெற குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் வீடுகள் கட்ட வேண்டும். கடந்த 2011 ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வந்த புராஜெக்ட் களுக்குதான் இந்தச் சலுகை கிடைக்கும். வரிக் கணக்கீட்டு ஆண்டு 2012-13-ல் இந்தச் சலுகையை பெற முடியும்.

மொத்த ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு (இ.டபிள்யூ.எஸ்.) குறைந்தபட்சம் 30% ஒதுக்கீடு வழங்க வேண்டும். இ.டபிள்யூ.எஸ். மற்றும் குறைந்த வருமான பிரிவினருக்கு (எல்.ஐ.ஜி.) குறைந்தபட்சம் 60% ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இ.டபிள்யூ.எஸ்., எல்.ஐ.ஜி. மற்றும் நடுத்தர வருமான பிரிவினருக்கு (எம்.ஐ.ஜி.) மொத்தம் 90%, மீதி 10% இதர குடியிருப்புகள் அல்லது வர்த்தக கட்டடங்களை கட்டிக் கொள்ளலாம்.

- சி.சரவணன்