Published:Updated:

ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

''24 மணி நேரமும் பஸ் வசதி, இருபது அடியில் சுவையான குடிநீர்...'' இந்த அடைமொழிகளை  சென்னையைச் சுற்றி பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தும். இது போதாது என்று சமீப காலமாக 'உத்தேச விமான நிலையம் அருகே’ என்கிற அடைமொழியையும் எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

##~##
'இ
ன்டெர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் பக்கத்திலேயா, அப்ப அந்த பகுதி சீக்கிரமா டெவலப் ஆயிடுமே!’ என்று இடம் வாங்க வருபவர்கள் பல விதங்களில் கற்பனை செய்து கொள்ள, விலையைப் பார்க்காமல் மனையை வாங்கித் தள்ளுகிறார்கள். இந்த விமான நிலையம் பற்றி மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில், புதிதாக அமையவிருக்கும் விமான நிலையம் எந்தப் பகுதியில் வரப் போகிறது என்பதைக் கண்டறிய களமிறங்கினோம்.

நாம் முதலில் சென்றது ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு. அங்கிருந்த சார் பதிவாளரிடம் பேசினோம். ''அப்படியா? ஸ்ரீபெரும்புதூர்ல விமான நிலையம் வருதா? பத்திரப் பதிவு துறைக்கு தகவல் எதுவும் வரலியே! நீங்க தாலுகா ஆபீஸ்ல கேட்டீங்கன்னா, கரெக்ட்டா சொல்லிடுவாங்க'' என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஃபைல்களை புரட்ட ஆரம்பித்தார்.  

ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!
ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

வெளியே வந்தோம். கண்ணில் பட்டது, பத்திரம் எழுதும் அலுவலகம் ஒன்று. பத்திர எழுத்தர் பிரேமுடன் பேசினோம். ''காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15 கிராமங்களை புதிய விமான நிலையத்துக்கு எடுக்கப் போறாங்கன்னு கடந்த அஞ்சு வருஷமா பேசிகிட்டு இருக்காங்க! இந்த கிராமங்கள் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சுமார் 7, 8 கி.மீ. தொலைவில் இருக்கு..! இதனால, இந்த கிராமங்களிலிருந்து பெரிசா பத்திரப் பதிவு எதுவும் நடக்கலை..! 2008-ல இந்த கிராமங்கள்ல ஒரு சதுர அடி 800 ரூபா போச்சு. இப்ப வெறும் 400 ரூபாதான் போகுது!'' என்று சொன்னார்.

அங்கிருந்து தாலுகா அலுவலகத்துக்குப் போனோம். அங்கே பல விசாரிப்புகளுக்குப் பிறகு வருவாய்த் துறை பிரிவில் ஏ 1 என்கிற அலுவலரை பார்க்கச் சொன்னார்கள். அவர் சீட்டில் இல்லை. அவரது செல்போன் நம்பருக்கு போன் செய்தபோது 'நாட் ரீச்சபிள்’ என்றே வந்தது.

ஆனால் அங்கிருந்தவர்கள், அடுத்த தெருவில் இருக்கும் 'சிப்காட்’ அலுவலகத்தில் கேட்டால் புதிய விமான நிலையம் பற்றி சொல்வார்கள். அவர்கள்தான் விமான நிலையத்துக்கான இடம் எடுப்பதாகச் சொன்னார்கள்.

அங்கு போனால்,  ''யார் சார் இப்படி எல்லாம் சொல்றாங்க? நாங்க சிப்காட் தொழில்பேட்டைக்குத்தான் இடம் எடுத்துக்கிட்டு இருக்கோம். புது விமான நிலையத்துக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க ராஜீவ் காந்தி நினைவகம் அருகே இருக்கிற ஏர்போர்ட் ஆபீஸுக்கு போங்க!’ என்றார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!
ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் பட்நூல்சத்திரம் என்கிற இடத்தில் இருந்தது அந்த ஏர்போர்ட் ஆபீஸ். அங்கே துணை தாசில்தார் நிலையில் ஒரே ஒரு அதிகாரி இருந்தார்.

''சார், இது மீனம்பாக்கத்துல இருக்கிற விமான நிலைய விரிவாக்கத்துக்கான நில எடுப்புக்காகப் போடப்பட்ட ஆபீஸ். எங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனா, புது ஏர்போர்ட் பற்றி

காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ்ல போய் விசாரிக்கிறவங்க அத்தனை பேரையும் இங்க அனுப்பி வச்சிடுறாங்க..!'' என்று புலம்பி தீர்த்தார்.

சரி, அதிகாரிகளிடம் கேட்டுப் பிரயோஜனமில்லை. விமான நிலையம் வரப் போவதாகச் சொல்லப்படும் கிராமங்களை நேரில் சென்று பார்த்தால் என்ன? என்று அங்கே போனோம். முதலில் நம் கண்ணில்பட்ட கிராமம், வடமங்கலம். அதன் எல்லையில் ஒருவர் கையில் சில லே-அவுட்களுடன் நின்றிருந்தார். அவர் பெயர் பாஸ்கரன், திருவொற்றியூரைச் சேர்ந்தவர்.

ஸ்ரீபெரும்புதூர்: புது ஏர்போர்ட்... 'ரியல்' ரிப்போர்ட்!

''என் உறவினர்கள் 1994-ல இங்க ரெண்டு மனை வாங்கினாங்க. இந்த இடத்துல புதிய ஏர்போர்ட் வருதான்னு விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்தேன். நானும் பல அரசு அலுவலகங்கள்ல விசாரிச்சுட்டேன். யாரும் சரியா விவரம் சொல்ல மாட்டேங்கிறாங்க... அதான், இடத்தையாவது வந்து பார்ப்போம். அங்கேயாவது ஏதாவது அறிவிப்பு பலகை இருக்கான்னு பார்க்க வந்தேன். இங்கேயும் ஒரு விவரமும் தெரியலை'' என்றார் சலிப்புடன்.

அதே கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் ரமேஷிடம் பேசினோம். ''எங்க இடத்தை விமான நிலையத்துக்காக எடுப்பாங்களா, இல்லையான்னு தெரியலை. இதுக்கு முன்னால கணக்கு எடுக்க வந்தப்ப உங்களுக்கு மாற்று இடம் தர்றோம்னாங்க. ஆனா, எங்கே இடம் தருவாங்கன்னு தெரியலை. கவர்ன்மென்ட்டு எடம் எடுக்கிறதா இருந்தா சட்டுபுட்டுன்னு எடுக்காம, அஞ்சாறு வருஷமா இந்தா, அந்தான்னு இழுத்து, எங்க எடத்தோட மதிப்பை அடிமாட்டு விலைக்கு கொண்டாந்துட்டாங்க..!'' என்று புலம்பினார்.

ஆக, ஒரு நாள் முழுக்க அலைந்தபிறகும், புதிய விமான நிலையம் எந்த இடத்தில் வரப் போகிறது என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை. புதிய விமான நிலையத்திற்கான நிலம் எடுத்தாகிவிட்டதா, இல்லையா? எந்தெந்த ஊரில் எடுக்கப்பட்டு இருக்கிறது? என்பதை அரசாங்கம் பெரிய மனது வைத்து அறிவித்தால், அநாவசியமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். செய்யுமா அரசாங்கம்?  

- சி.சரவணன்
படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு