சென்னையைப் பொறுத்தவரை நகர்ப்புறத்தில் மனை மற்றும் வீடு வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்றாகிவிட்டது. நகரத்திற்குள் ஒரு கிரவுண்ட் மனை கோடி கணக்கான ரூபாயைத் தாண்டி பல ஆண்டுகளாகி விட்டது.

. நா.ற்பதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஓம்.எம்.ஆர். பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பைப் பொறுத்தவரை சதுர அடி .3400-3500 வரை சொல்லப்படுகிறது. இதே விலைக்கு ஜி.எஸ்.டி. சாலையில் 30 கி.மீ. தூரத்திலே கிடைத்து விடுகிறது. அண்மைக் காலத்தில் எண்ணூர் துறைமுகம் வளர்ச்சி கண்டு வருவதால், வட சென்னையில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. முதலீட்டு நோக்கத்தில் இருப்பவர்கள் இதைப் பரிசீலிக்கலாம்..
ஓ.எம்.ஆர். பகுதியில் நடப்பு ஆண்டில் விலை அதிகரிப்பு 10% ஆக இருக்கும் என்றால் ஓரகடம், படப்பை, ஜி.எஸ்.டி. சாலைப் பகுதிகளில் 15-20% விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இந்தப் பகுதிகளில் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருப்பதே முக்கிய காரணம்.

தாம்பரம் - படப்பை

சென்னை, தாம்பரம் இடையே பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அடிக்கடி இருப்பதால் இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாம்பரம் சிறப்பு நிலை நகராட்சியாக மாறியிருப்பதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்பனை அமோகம்தான். அடுக்குமாடி திட்டங்களும் அதிகரித்துள்ளன. இங்கு ஒரு ச.அடி. ஃப்ளாட்

3300-4000 என விலை போகிறது.

தாம்பரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் படப்பை குடியிருப்பு மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது. அதனருகில் இருக்கும் ஓரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கி இருக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் மனை விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்ரீபெரும்புதூர்

இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை புண்ணியத்தில் 2007-ல் இந்த நகரம் ரியல் எஸ்டேட்டில் கொடிக் கட்டிப் பறந்தது. ''ஸ்ரீபெரும்புதூர் அருகே விமான நிலையம் வரப் போகிறது என்றார்கள். அது வரவில்லை. இப்போது அது வருமா, அப்படி வந்தால் எங்கே வரும் என்பது தெரியாத நிலையில் இங்கு மனை விற்பனை மந்தநிலையிலேயே இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் பத்திரப்பதிவு எண்ணிக்கையை வைத்தே இதைச் சொல்லிவிடலாம்'' என்று நம் காதைக் கடித்தார் அப்பகுதி யைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஒருத்தர்.

செங்கல்பட்டு

சென்னையின் துணைநகரம் செங்கல்பட்டு அருகே அமையலாம் என்ற காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு ரியல் எஸ்டேட் விலை உச்சத்தைத் தொட்டது. விலை மிகவும் அதிகரித்துவிட்டதால் தற்போது நகரைச் சுற்றிலும் விற்பதும் வாங்குவதும் குறைந்துவிட்டது. இருந்த போதிலும் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை ரயில்வே கேட் அருகே தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. மஹிந்திரா சிட்டி அருகில் இருப்பதே இதற்கு காரணம். அதுபோல் அரசு ஐ.டி.ஐ. அருகிலும் சத்தமில்லாமல் வியாபாரம் நடக்கிறது. நடுத்தர மக்கள்கூட நகரை விட்டு 3-4 கி.மீ தொலைவில் மனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

- சி.சரவணன், பா.ஜெயவேல்