Published:Updated:

வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?

ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்

வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?

ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்

Published:Updated:
வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?

வீட்டுக் கடன் சுலபமாக கிடைக்கிறதா? வீட்டுக் கடன் வாங்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட  அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என வாசகர்களிடம் கேட்டிருந்தோம். பலரும் தாங்கள் சந்தித்த சிக்கல் களைக் கொட்டித் தீர்த்தனர்.

வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
டன் விண்ணப்பங்களை சரியான காரணம் சொல்லாமல் நிராகரிப்பது, ஒரே லே-அவுட்டில் ஒருவருக்கு கடன் கொடுத்துவிட்டு மற்றவருக்கு கடன் தர மறுப்பது என பல்வேறு பிரச்னைகளை சுட்டிக் காட்டியிருந்தனர்.

இந்நிலையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிக்கல்கள் வராமலிருக்க என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன? என்பது போன்ற விஷயங்களை வங்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள் வங்கி அதிகாரிகள்.

வீடு கட்டும் மனை மற்றும் கட்டட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக் கப்பட்டிருப்பது அவசியம். கடன் கொடுக்கும் வங்கியால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் எவ்வளவு தொகை வரை கடன் கொடுக்கலாம் என ஒரு வரம்பு நிர்ணயிப்பார். அந்தத் தொகைக்குள் மட்டுமே கடன் கிடைக்கும். அதற்குமேல் வங்கிகள் கடன் தராது.

வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?
வீட்டுக் கடன்: எளிதாக கிடைக்க என்ன வழி?

பொதுவாக யார் பெயரில் மனை இருக்கிறதோ, அவர் பெயரில்தான் வீட்டுக் கடன் கிடைக்கும். கணவன் - மனைவி எனில் இருவரும் சேர்ந்து கடன் பெறலாம். அல்லது அப்பா, அம்மா போன்ற நெருங்கிய ரத்த உறவு சார்ந்த உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு விண்ணப்பித்தாலும் கடன் கிடைக்கும். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை இணை கடன்தாரராக காட்டினால் கடன் கிடைக்காது. பூர்வீக இடம் அல்லது பாகப் பிரிவினை செய்யாத இடம்/வீடு எனில், வாரிசுதாரர்கள் அனைவரது ஒப்புதலும் இருந்தால் மட்டுமே வீட்டுக் கடன் கிடைக்கும். இதற்குரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் கேட்கும் முழுத் தொகையையும் கடனாக தரமாட்டார்கள். திரும்பச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில்தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். மாதச் சம்பளத்தில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 50% வரை வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்துவதற்கேற்ப, எத்தனை வருடங்களுக்கு கடனைத் திருப்பி செலுத்த முடியும் என்பதைப் பொறுத்து கடன் தொகை கணக்கிடப்படும். இந்த 50 சதவிகிதத்திலிருந்து ஏற்கெனவே வேறு கடன்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் தொகைகளை கழித்துக்கொண்டு, அதற்கேற்ப கடன் தொகை கணக்கிடப் படும். இதனால் நீங்கள் எதிர்பார்க்கும் தொகை அளவுக்கு, வீட்டுக் கடன் கிடைக்காது. எனவே, அந்த கடன்களை முழுவதுமாக கட்டிவிடுங்கள். அந்த கடன் முடிய சில மாதங்களே இருக்கிறது என்றால் அதுவரை காத்திருக்கவும். அல்லது முன்கூட்டியே செலுத்தி விட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

- நீரை.மகேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism