
வீடு என்பது வெறும் செங்கல், மணலால் கட்டப்பட்டதல்ல; நம் உழைப்பும், கனவும் குழைத்துக் கட்டப்பட்டது. நம் வீட்டிற்கு ஏதாவது பாதிப்பு வந்தால் நம்மால் தாங்க முடியாது. நம் வீட்டிற்கு பாதிப்பு வராமல் இருக்க, ஹவுஸ் ஹோல்டர் பாலிசி எடுப்பதே சரி.
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டி.வி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட எலெட்க்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், தங்க, வைர நகைகள் போன்றவற்றுக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் இழப்பீட்டை பெற முடியும்.
ஆனால் ரொக்கப் பணம், ஆவணங்கள், பத்திரங்கள் போன்றவற்றை நாம் இன்ஷூரன்ஸ் செய்ய முடியாது. போர் மூலம் ஏற்படும் சேதத்துக்கு கிளைம் வாங்க முடியாது. அதே போல, நீங்கள் இன்ஷூரன்ஸ் செய்த பொருட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்த இடத்தைத் தவிர, வேறு இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு கிளைம் வாங்க முடியாது.
அதேசமயம், நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், வீட்டிலுள்ள பொருட்களுக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். பிரீமியம் ஒரு லட்ச ரூபாய் கவரேஜுக்கு சுமார் 100 ரூபாய்க்குள்தான்.
- வா.கார்த்திகேயன்