
நம்மில் பலர் இன்றைக்கு சொந்த வீட்டை துணிந்து வாங்கி இருக்கிறார்கள் எனில் அதற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடனுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைதான். மாதச் சம்பளக்காரர்களில் பலர் வருமான வரியைத் தவிர்க்க வீட்டுக் கடன் வாங்குவது நடைமுறையில் இருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீடு கட்ட/வீடு வாங்கும் கடனுக்கு வருமான வரிச் சலுகை 80சி-யின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் அசலில் ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். மேலும், திரும்பச் செலுத்தும் வட்டியில் நிதி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை சலுகை இருக்கிறது.
திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனில் உள்ள வரிச் சலுகைகள் குறித்து விளக்கிச் சொன்னார் ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணன், ''சிலர் உறவினர்கள், நண்பர்கள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி வீடு கட்டியிருப்பார்கள். இதற்காக திரும்பச் செலுத்தப்படும் வட்டிக்கும் வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை வைத்திருப்பது அவசியம். புதிய வீடு போலவே பழைய வீட்டை கடனில் வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலே கூறப்பட்ட வரிச் சலுகைகள், அந்த வீட்டில் கடன் வாங்கியவர் குடியிருக்கும்பட்சத்தில் கிடைக்கும்'' என்றவர், வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் என்ன சலுகை என்பதையும் விளக்கினார்.

##~## |
- சேனா