Published:Updated:

வீட்டை மாளிகை ஆக்கும் அசத்தல் பொருட்கள்!

அலங்காரம்

வீட்டை மாளிகை ஆக்கும் அசத்தல் பொருட்கள்!

அலங்காரம்

Published:Updated:

வீட்டின் வெளிப்புறத்திற்கு அதிகம் செலவழித்தால் மட்டும் போதாது; வீட்டின் உட்புறத்தில் முக்கியமான பல பொருட்களை பொருத்தினால்தான் நம் வீடு முழுமை பெறும். நம் வீட்டுக்கு அழகு சேர்க்கிற மாதிரி மார்க்கெட்டில் லேட்டஸ்ட்-ஆக கிடைக்கும் பொருட்கள் என்னென்ன என்பதை அறிய பல்வேறு ஹார்டுவேர் கடைகளில் ஏறியிறங்கினோம். அந்த பொருட்கள் இனி:

##~##
டிஜிட்டல் பாத்ரூம் வால்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டைல்ஸ் போல் இருக்கும் இதை அப்படியே குளியல் அறை சுவரில் பொருத்திவிடலாம். இது பார்க்க அதிக பளபளப்பாக இருக்கிறது. சுவரில் அழுக்கு படியாது என்பது இதன் எக்ஸ்ட்ரா சிறப்பு. சுலபமாக சுத்தம் செய்ய முடியும். சதுர அடி 100 ரூபாய் கொண்ட இதை சோமானி நிறுவனம் தயார் செய்கிறது. பெரிய ஊர்கள் எல்லாவற்றிலும் இந்த டிஜிட்டல் பாத்ரூம் வால் கிடைக்கும்.  

ஸ்டெயின் ஃபிரீ டைல்ஸ்!

வீட்டை மாளிகை ஆக்கும் அசத்தல் பொருட்கள்!

இந்த வகை டைல்ஸில் அழுக்கு அதிகமாகப் படியாது. அப்படியே படிந்தாலும் சுலபமாக துடைத்துவிட முடியும். இதன் விலை சதுர அடி சுமார் 70 ரூபாய்.

வாஷ் ரூம்!

ஆம்னி சூட் என சொல்லக்கூடிய வெஸ்டர்ன் டாய்லெட் இது. தண்ணீர்த் தொட்டி இந்த செட்டிலே இருக்கும். இதை அப்படியே பொருத்திக் கொள்ள முடியும். விலை 11,000 ரூபாய்.

வீட்டை மாளிகை ஆக்கும் அசத்தல் பொருட்கள்!

ஹரானா சோகோ!

• பொதுவாக வாஷ்பேஸின் தனியாகவே இருக்கும். இதில் வாஷ்பேஸினுக்கு கீழே லாக்கர் தரப்பட்டுள்ளது. குளியலுக்கு முன், பின் தேவையான சோப், ஷாம்பு, டூத்பேஸ்ட், பிரஷ் என பல சமாசாரங்களை இந்த லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். பாரிவேர் நிறுவனத்தின் தயாரிப்பு இது. விலை 15,750 ரூபாய்.

ஷவர் என்குளோஸர்!

வீட்டை மாளிகை ஆக்கும் அசத்தல் பொருட்கள்!

இந்த ரெடிமேட் குளியல் அறையை வாங்கித் தேவையான இடத்தில் பொறுத்திக் கொள்ளலாம். உடம்பின் அழுப்பை போக்க மசாஜர், காலுக்கு மசாஜர், கை மற்றும் தலைக்கு மேல் ஷவர், இன்டெர்காம் போன், எஃப்.எம். ரேடியோ, முகம் பார்க்க கண்ணாடி என அனைத்து அம்சங்களும் நிறைந்தது. பார்க்க பிரமாண்டமாகவும், ஸ்டைலாகவும் இருப்பது இதன் சிறப்பு. விலை சுமார் 1.5 லட்ச ரூபாய். இதில் குழந்தைகளுக்கு என தனியாகச் சின்னதும் உள்ளது.

கிளாஸ் மொசைக்!

• கண்ணாடி போன்ற பளபளப்பு டைல்ஸ். பார்க்க மார்பிள் போன்ற பளபளப்பு இருக்கும். நிறத்துக்கு தகுந்தது போல் விலை உள்ளது. சதுர அடி விலை 88 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை.

- பானுமதி அருணாசலம்
தொகுப்புக்கு உதவியவர்கள்: ரயான் டைல் பஜார், அரும்பாக்கம்,
படங்கள்: சரா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism