Published:Updated:

வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் கட்டாயம் வேண்டும் இந்த பாலிசி!

பாதுகாப்பு

வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் கட்டாயம் வேண்டும் இந்த பாலிசி!

பாதுகாப்பு

Published:Updated:
வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் கட்டாயம் வேண்டும் இந்த பாலிசி!

கடன் வாங்காமல் வீடு கட்டுவது இந்த காலத்தில் சாத்தியமில்லை. ஆனால், நிறைய கடன் வாங்கி, அதை திரும்பக் கட்ட முடியாத நிலையில் கடன் வாங்கியவர் திடீரென உயரிழந்தால்..?

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

றந்தவரின் குடும்பத்தினர் தான் அந்த கடனைத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். அப்படி கட்ட முடியாத நிலை யில் அந்த வீட்டையேகூட விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே. வீட்டுக் கடன் வாங்கும்போதே அதற்கான இன்ஷூரன்ஸையும் எடுத்துவிட்டால், நம் வீட்டுக்கும் பாதுகாப்பு, நம் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு.

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை கடன் தரும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனமே ஏற்பாடு செய்து தந்துவிடுகிறது. நீங்கள் தனியாககூட எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இந்த பாலிசி எடுத்தபின் கடன் வாங்கியவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், மேற்கொண்டு அந்த கடனை திருப்பிச் செலுத்தத் தேவை இல்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனமே வங்கிக்கு பாக்கி கடனை கட்டிவிடும்.

இதில், கடன் தொகை குறையக் குறைய கவரேஜ் தொகை குறைவதுபோல பாலிசி வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதற்கான பிரீமியம் குறைவே.  

முப்பது வயது கொண்ட ஒருவர் 15 லட்ச ரூபாய்க்கு இந்த பாலிசி எடுத்தால் சிங்கிள் பிரீமியமாக சுமார் 40,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும் என்றாலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைவிட குறைவு என்பதால், இந்த பாலிசியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.  

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism