Published:Updated:

புரோக்கர்கள் ஜாக்கிரதை!

புரோக்கர்கள் ஜாக்கிரதை!

புரோக்கர்கள் ஜாக்கிரதை!

புரோக்கர்கள் ஜாக்கிரதை!

Published:Updated:
புரோக்கர்கள் ஜாக்கிரதை!

அலைந்து திரிந்து வீடு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு வீடு தேடித் தருபவர்கள் புரோக்கர்கள்தான். ஆனாலும், புரோக்கர்கள் சொல்வதை மட்டுமே நம்பி மனை அல்லது வீடு வாங்குவது கூடாது. ஒரு புரோக்கர் ஒரு சொத்தைக் காட்டும்போது, என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்..?

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்த இடத்தை மூன்று பேர் கேட்டிருக்காங்க.. இன்னும் ரெண்டு இடம்தான் பாக்கி இருக்கு..!’ என்று புரோக்கர் அவசரப்படுத்தினால், நீங்கள் அதற்கு பலியாகக் கூடாது.  

• லே-அவுட்களில் கார்னர் பிளாட்டுகள் விற்றுவிட்டதாக சொல்வார்கள். ஆனால், அது காலியாகவே இருக்கும். எனவே, எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி கார்னர் பிளாட் களை பெறுங்கள்.

• உடனேயே முன்பணம் கொடுத்துவிடாதீர்கள். வீட்டிற்கு வந்து ஆவணங்களை சரிபார்த்த பின்பு, தனியாக சென்று முழுமையாக விசாரித்தபிறகு அட்வான்ஸ் தொகையை உரிமையாளரிடம் கொடுப்பது நல்லது. 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்.

• விலை முடிவாகும்போதோ, பணம் கொடுக்கும்போதோ சொத்தின் உரிமையாளர் உடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

• விலையிலும் புரோக்கர்கள் லாபம் சம்பாதிக்க முயற்சி செய்வார்கள். இதனால் நீங்கள் வாங்காதத் தொகைக்கும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வரும்.

• புரோக்கர் என்பவர், வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே ஒரு பாலமாகச் செயல் படுபவர் மட்டுமே. அவர் சொத்தின் உரிமையாளர் இல்லை. இதை மனதில் கொண்டால் எப்போதும் சிக்கல் இருக்காது.

- சி.சரவணன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism