தமிழகம் முழுக்க மீண்டும் சூடு பிடித்திருக்கிறது ரியல் எஸ்டேட் பிஸினஸ். இதுநாள் வரை சொத்து வாங்குவதை தள்ளி வைத்து வந்த மக்கள், இப்போது மீண்டும் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து மயங்கியோ அல்லது எல்லோரும் வாங்கு கிறார்களே என்றோ இறங்கிவிடாமல், நாம் போடும் முதலீடு சரியான முதலீடுதானா, வாங்கும் இடத்தின் அல்லது வீட்டின் மதிப்பு இனி ஏற வாய்ப்பு இருக்கிறதா என்பதை எல்லாம் நன்றாக அலசிப் பார்த்து, அதன் பிறகு முதலீட்டு முடிவுக்கு வருவது தான் சரியாக இருக்கும்.

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும்போது சரியான நேரத்தில் சரியான பங்கை சரியான விலையில் வாங்க வேண்டும் என்பார்கள். அது ரியல் எஸ்டேட்டுக்கும் பொருந்தும். சரியான நேரம், சரியான இடம், சரியான விலை என அனைத்து அம்சங்களையும் பார்த்தே முதலீடு செய்ய வேண்டும்.

சரியான நேரமா?

. ரியல் எஸ்டேட்டைப் பொறுத் தவரை வாங்குவதற்கு இது சரியான நேரம்தானா என்பதை முதலில் அறிந்துகொள்ள, சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லங் லாசாலே மெக்ராஜ்’ நிறுவனத்தின் தலைமைத் துணைத் தலைவர் ஏ.சங்கரைச் சந்தித்துப் பேசினோம்..
''வழக்கமாக ஒரு ரியல் எஸ்டேட் சைக்கிள் என்பது மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்து வந்த தமிழக ரியல் எஸ்டேட், வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பிருக்கிறது. இது அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

சர்வதேச பொருளாதார நெருக் கடியால் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.டி. பூங்காக்கள், ஐ.டி. சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் தாமதமாகி வந்தது. இப்போது அந்தத் துறை மேம்பட்டு வருவதால் விடுபட்ட பணிகள் வேகமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஐ.டி. பணிகளுக்கு சென்னை நகரம் மட்டுமே என்றிருந்த நிலை மாறி இப்போது கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தமிழக அரசு முதலீட்டைக் கொட்டி வருகிறது. விரைவில் வேலூரிலும் ஒரு ஐ.டி. பூங்கா வர இருக்கிறது.

மதுரை, கோவை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட ஃப்ளாட் புராஜெக்ட்டுகளை இப்போது மீண்டும் கட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் இன்னும் விலை உயர வாய்ப் பிருக்கிறது. இந்த ஆண்டில் குடியிருப்புகள் மற்றும் அபார்ட்மென்ட்களின் விலை குறைந்த பட்சம் 10% உயர வாய்ப்பிருக்கிறது. தொழில் நிறுவனங்களை ஒட்டிய பகுதிகளில் இந்த விலை அதிகரிப்பு 15-20% ஆக இருக்கும்.

மேலும், வர்த்தக கட்டடங் கள், ஷாப்பிங் மால்களுக்கான தேவை 20-25% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக் கிறது. நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகரித்து வருவதால் வரும் ஆண்டில் சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். சென்னை, கோவை போன்ற நகரங்களில் செய்யப்படும் முதலீடு கணிசமான லாபத்தைத் தரும்'' என்றார். ஆக இது முதலீடு செய்வதற்கு சரியான நேரம்தான்.

சரியானஇடமா?

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். குடியிருப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் சொந்த வீடு வாங்குபவர்களின் கண்ணோட்டம் வேறு. இவர்களைப் பொறுத்தவரை வேலை செய்யும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறதா, பள்ளி கல்லூரிகளுக்குப் பக்கத்தில் இருக்கிறதா என்பது போன்ற விஷயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கிறது, முதலீட்டு நோக்கில் அடுத்த வீடு வாங்கப் போகிறார்கள் என்றால் அவர்களது கண்ணோட்டம் வேறு. வாங்கப் போகும் இடத்துக்கு அடிப்படை வசதிகள் வராமல் இருந்தாலும்கூட, விரைவில் வந்துவிடும் வாய்ப்பிருக்கும்பட்சத் தில் அதையே தேர்வு செய்வார்கள். காரணம் குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடலாம் என்பதால்தான். அதுவே ஓய்வு காலத்தை நிம்மதி யாக கழிக்க வேண்டும் என்று நினைத்து இறங்கு பவர்களின் கண்ணோட்டம் வேறாக இருக்கும். அவர்கள் வாங்கும் இடத்தின் மதிப்பு விரைவில் ஏறாது என்றாலும்கூட அதையே தேர்வு செய்வார்கள்.

காரணம், அவர்களுக்குத் தேவை நிம்மதிதானே தவிர லாபம் அல்ல!

அதனால் என்ன நோக்கத்துக்கு வாங்கப் போகிறோமோ, அது நிறைவேறுமா என்பதை நன்றாக ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது.

சரியான விலை

உலகிலேயே மிகக் கடினமான காரியம் எதுவென்றால் ஓர் இடத்தின் சரியான மதிப்பு எது என்பதைக் கண்டுபிடிப்பதுதான். இடைத்தரகர்கள் ராஜ்ஜிய மாகிவிட்ட இந்த பிஸினஸில் எதற்காக விலையை ஏற்றுகிறார்கள் அல்லது இறக்குகிறார்கள் என்பதே புரியாத புதிர்தான். ஒரு இடத்துக்கு ஐந்து பேரிடம் விலை கேட்டால் ஐந்து பேரும் ஐந்து விலையைத்தான் சொல்வார்கள். சிக்கல் மிகுந்த இந்த சூழ்நிலையில் ஒன்றுக்கு பத்து பேர்களிடம் விலையைக் கேட்டு அதிலிருந்து ஒரு கணிப்புக்கு வந்து அதன் பிறகு பேரத்தில் இறங்குவதுதான் லாபகரமாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு உதவ தமிழகத்தின் முக்கியமான சில இடங்களை ஒரு சோறு பதமாக அடையாளம் காட்டி அதன் விலை விவரத்தையும் தந்திருக்கிறோம். இதுவே முடிவானதல்ல. ஒரு அபிப் பிராயத்துக்கு வருவதற்கு மட்டுமே இந்த தகவல்கள் உங்களுக்குப் பயன்படும். இருப்பினும் இந்த விவரங்களை மனதில் வைத்துக் கொண்டால் நீங்கள் இடம் தேடும்போது இவை உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். இந்த இதழில் மட்டுமின்றி வரப்போகும் இதழ்களிலும் ஒவ்வொரு ஏரியா வாரியாக தகவல்கள் தரப் போகிறோம். படித்துப் பயன டையுங்கள்.

- சி.சரவணன்