மீண்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது நிலப் பிரச்னை. ''இனி தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தித் தர தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தை மக்களிடமிருந்து மார்க்கெட் ரேட்டுக்கு வாங்கிக் கொள்ளட்டும்'' என மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு.

. இ.ந்த பரிந்துரை விவசாயத் துறையினரிடம் வரவேற்பையும், தொழில் துறையினரிடம் கடும் எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இந்த இரு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கருத்தை கேட் டோம். நாம் முதலில் சந்தித்தது ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சி.வையாபுரி..
''விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பதுபோல, நிலங்களுக்கு அதிகபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலுக்கு நிலம்தான் அடிப்படை. எனவே, அதற்கு விலை நிர்ணயம் அவசியம். நிலம் எந்தப் பகுதியில் இருக்கிறது? தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதா? நகரத்தையட்டி உள்ளதா? கிராமத்தையட்டி உள்ளதா என்பதைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாய நிலத்தை தொழிற் சாலைக்கு எடுக்கக் கூடாது என்று எம்.பி.க்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், நஞ்சை நிலத்தைகூட பஞ்சாயத்து தலைவர்கள், தரிசு நிலம் என சான்றிதழ் தந்து விடுகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்.

நிலத்தை அரசு கையகப் படுத்தி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், விவசாயிகளுக்குப் பாதுகாப்பு கிடைப்பது அவசியம். சந்தை மதிப்பை போல் இரண்டு முதல் மூன்று மடங்கு விலை கொடுப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

2015-ம் ஆண்டில் உலக அளவில் உணவுப் பஞ்சம் வரும் என 2005-ம் ஆண்டிலே ஐ.நா. சபை சொன்னது. அது உண்மையாகாமல் இருக்க, விளைச்சலுக்கு தகுதி இல்லாத நிலங்களை மட்டுமே தொழிற் சாலைகளுக்கு எடுக்க வேண்டும். சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் உண்மையாகவே விவசாயம் செய்யாமல் கிடக்கும் இடங்களைத்தான் தொழிற் சாலைகளுக்கு எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.

விவசாயத் துறையினரின் கருத்து ஒரு பக்கமிருக்க, இதுகுறித்து தொழில் துறையில் புலமை படைத்தவரும், இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியருமான விஸ்வநாதனுடன் பேசினோம்.

''தொழில் வளர்ச்சிக்கு நிலம்தான் முக்கியம். தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி கொடுப்பது அரசின் வேலை இல்லை என்று சொல்வது, அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும். நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்திக் கொடுக்கா விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், நம் மாநிலத்திலேயே நடந்தது.

2002-ல் தூத்துக்குடியில் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனம் முனைந்தது. அங்குள்ள உவர் நிலத்தைகூட அரசு கையகப்படுத்தித் தராமல் நீங்களே பொதுமக்களிட மிருந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றது தமிழக அரசு.

இந்தத் தொழிற்சாலை அமைக்க 10,000 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. ஆனால், நூறு ஏக்கர் நிலத்தைக்கூட டாடாவால் வாங்க முடியவில்லை. காரணம், 5,000 ரூபாய்க்கு விலை போன இடத்தை 5 லட்சம் விலை சொன்னார்கள். இதனால், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை அப்படியே கைவிட்டது டாடா நிறுவனம்.

தனியார் நிறுவனங்கள் நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது கடினமான காரியம். அரசாங்கம், ஒருவரிடமிருந்து கட்டாயப்படுத்தி நிலத்தை வாங்க முடியும். தனியார் நிறுவனத்தால் அப்படி செய்ய முடியாது. பொது காரியத்துக்குகூட குறிப்பாக மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கம், சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்பேட்டை அமைக்ககூட நிலம் கையகப்படுத்தி அரசு கொடுக்கத் தேவையில்லை என எம்.பி.க்கள் குழு சொல்லியிருப்பது துரதிர்ஷ்டமானது.

தொழிற்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்கள். விவசாய விளைபொருட்களை மதிப்பு மிகு பொருட்களாக மாற்ற தொழிற்சாலைகள் விவசாய நிலங்களின் அருகில் இருப்பது அவசியம். இதேபோல், போக்குவரத்து வசதி, வங்கி போன்ற சேவைகளும் அருகிலே இருக்க வேண்டும் என்றால் விவசாய நிலத்தின் ஒரு பகுதி வர்த்தக நிலமாக மாற்றினால்தான் முடியும். விவசாய நிலத்தை எடுக்கவே கூடாது என்றால் நிலாவுக்குப் போயா நிலம் எடுக்க முடியும்'' என்று கொதித்தவர், இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று விளக்கினார்.

''நம் நாட்டில் விவசாய உற்பத்தித் திறனை அதிகரிப்பது அவசியம். அமெரிக்காவில் ஒரு ஏக்கரில் 10,000 கிலோ சோளம் விளைகிறது. ஆனால், நம் ஊரில் 800 கிலோதான் விளைவிக்கப்படுகிறது. என்ன செய்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

சில பெரும் நிறுவனங்கள் தேவை இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். கையகப்படுத்தும் நிலத்தை ஐந்தாண்டுக்குள் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அப்படி இல்லை என்றால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எம்.பி.கள் குழு சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. வெளிநாடுகளில் நிலக்கரி சுரங்கப் பணிக்காக 1,000 ஏக்கர் எடுக்கிறார்கள் என்றால், வேலை முடிந்ததும் அந்த நிலத்தை சீரமைத்து வாங்கிய வர்களிடமே திரும்பக் கொடுக் கிறார்கள். நாமும் அப்படி செய்ய வேண்டும்.

பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் புதிய நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப் பட்டு, தனியார் நிறுவனங்கள் 15 ஆண்டுகள் வரை விவசாயி களிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி பயன்படுத்தி, மீண்டும் வாங்கியவர்களிடமே திரும்ப அளிக்கும்படியாக சட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, நில உரிமை மாற்றம் செய்யப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் நிலம் கொடுக்கப்படுகிறது. நிலம் கொடுத்தவருக்கு குத்தகை தொகை மற்றும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதேபோல் இந்தியா முழுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம்'' என்று முடித்தார்.

எம்.பி.கள் குழுவின் பரிந்துரை விவசாயத் துறையின் மீது இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது என்றாலும், தொழில் துறையின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அரசு யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

- சி.சரவணன்