Published:Updated:

சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

Published:Updated:
சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!
சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

னை விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வட்டி விகித அதிகரிப்பு போன்றவற்றோடு இப்போது சேவை வரியும் (சர்வீஸ் டாக்ஸ்) சேர்ந்திருப்பதால், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு சிதற ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்குமுன் ஒரு இடத்தில் 12 வீடுகளுக்கு மேல் கட்டும்போது மட்டுமே சேவை வரி விதிக்கப்பட்டது. இப்போது அனைத்து வீடுகளுக்கும் இந்த வரி கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால், 50 லட்ச ரூபாய் வீட்டிற்கு சேவை வரி வகையில் மட்டுமே சுமார் 2 லட்ச ரூபாய் கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த சேவை வரியால் வீடு வாங்குபவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான சதீஷ்குமாரிடம் கேட்டோம்.  

''இந்தியாவில் சேவை வரி என்பது கடந்த 2003-ம் ஆண்டில் 5 சதவிகிதமாக இருந்தது. அது இப்போது (2012-ல்) 12.36 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2004-ல் வர்த்தக வளாக கட்டுமானத்துக்கு சேவை வரி கொண்டுவரப்பட்டது. பிறகு, குடியிருப்புக் கட்டுமானத்துக்கும் கொண்டுவரப்பட்டது. அப்போது ஒரே இடத்தில் 12 குடியிருப்புகளுக்கு மேல் கட்டும் நிலையில் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தனி வீடு கட்டுமானத்துக்கு மட்டும் சேவை வரி கிடையாது. இரண்டு வீடு சேர்த்து கட்டினால்கூட சேவை வரி கட்ட வேண்டும். இந்த சேவை வரி விதிப்பால் பாதிக்கப்பட போவது பில்டர்களோ, புரமோட்டர்களோ அல்ல; வீடு வாங்கும் தனிநபர்கள்தான். அதாவது, வீடு வாங்குபவர்கள்தான். இந்த சேவை வரியை வீடு வாங்கியவரிடமிருந்து வாங்கி, வீடு விற்கிறவர் அதை அரசுக்குக் கட்ட வேண்டும்.'' என்றவர், சேவை வரி எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது மற்றும் கணக்கிடப்படுகிறது என்பதையும் விளக்கிச் சொன்னார்.

##~##
''வீட்டின் மொத்த விலையில் மனைக்கான மதிப்பு கழிக்கப்படுகிறது. மீதியுள்ள தொகையில் 40% கட்டுமானச் செலவு என வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் 12.36% சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலை 60 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதில் மனைக்கான விலை 20 லட்ச ரூபாய் என்றால், மீதி கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கூலி உள்ளிட்ட செலவு 40 லட்ச ரூபாய். இதில், 40% அதாவது 16 லட்ச ரூபாய் கட்டுமானச் செலவாக உள்ளது. இதில் 12.36% அதாவது ரூபாய் 1,97,760 சேவை வரியாக கட்ட வேண்டும். சேவை வரி விதிப்பு மாற்றத்தால் வீட்டின் விலை சுமார் 5% அதிகரித்திருக்கிறது. வீடுகளுக்கு மட்டுமின்றி ஃப்ளாட்களுக்கும் இந்த சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதால் ஃப்ளாட் வாங்குபவர்களும் இதை கட்டியே ஆகவேண்டும்'' என்றார்.
சேவை வரி... கனவாகும் சொந்த வீடு!

''அரசுக்கு வரிகள் மற்றும் கட்டணங்களாகச் செலுத்துவதே பெரிய தொகையாக இருக்கிறது. தற்போது ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் டிசைன் போன்ற சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரியும் வீடு வாங்கும் பொது மக்கள் தலையில்தான் ஏற்றப்படுகிறது. மேலும், வாட் (மதிப்பு கூட்டு வரி 2%), முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணம் (7+1=8%), பிளான் மற்றும் பில்டிங் அப்ரூவல் கட்டணம் எல்லாம் சேர்த்தால் ஒரு வீட்டின் விலையில் சுமார் 20% வரை அரசு வரிகள் மற்றும் கட்டணமாகப் போய்விடுகிறது. இந்நிலையில் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் வீடு வாங்கக் கூடிய நிலைக்கு இருக்க வேண்டும் என்றால், அரசு வரிக் கட்டணங்களை குறைக்க வேண்டும்;  பில்டர்களும் அவர்களின் லாபத்தைக் குறைத்து விலையைக் குறைக்க வேண்டும்'' என்றார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

சேவை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றாலும், அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்!  

- சி.சரவணன்,    
படம்: சொ.பாலசுப்ரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism