Published:Updated:

ரீடெய்ல் பிஸினஸிற்கு எளிய சாஃப்ட்வேர்!

நீரை.மகேந்திரன், படம்: ஜெ.வேங்கடராஜ்.

பிரீமியம் ஸ்டோரி
##~##

சாதாரண ஒரு மொபைல் போனை வைத்துக்கொண்டு வணிக தகவல்களை உடனுக்குடன் பெறும் ஒரு மென்பொருளை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் சென்னை, மைக்ரோஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சீனிவாசன். எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்தமாக கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்த இவர்,  பிஸினஸ்மேன்கள், விற்பனைப் பிரதிநிதிகளுக்கு மிகவும் பயன்படும் ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறார். இந்த மென்பொருளில் அப்படி என்ன விசேஷம்?  என்று அவரிடம் கேட்டோம்.

எளிய மென்பொருள் !

''மடிக் கணினி, விலை அதிகமான போன்கள் போன்ற எதுவும் தேவை யில்லை. ஆனால், ஒரு விற்பனைப் பிரதிநிதிக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் சாதாரண மொபைல் போன் மூலம் பெறுகிற வசதியை நாங்கள் சாத்தியமாக்கி இருக்கிறோம்.

ரீடெய்ல் பிஸினஸிற்கு எளிய சாஃப்ட்வேர்!

பொதுவாக, ஒரு நிறுவனம் தங்களது தயாரிப்புகளை பல ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும். சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனமெனில், அவற்றை விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் விற்பனைப் பிரதிநிதிகளை நியமிக்கும். நிறுவனம் தயாரிக்கும் பொருட்களுக்கு இருக்கும் டிமாண்ட் உள்பட பல்வேறு விஷயங்களை இந்த விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் உயரதிகாரிக்கு இணையம் வழியாகவோ, போன் மூலமாகவோ அல்லது

எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அனுப்புவார்கள். இப்படி பல்வேறு ஊர்களிலிருந்தும் விற்பனைப் பிரதிநிதிகள் அனுப்பும் தகவல்களை அடிப்படையாக வைத்தே சப்ளை மற்றும் டிமாண்டை நிர்ணயிப்பார்கள்.

ரீடெய்ல் பிஸினஸிற்கு எளிய சாஃப்ட்வேர்!

நிறுவனங்களுக்குத் தேவையான இந்த அடிப்படைத் தகவல்களை அனுப்ப இன்டர்நெட் வசதியுடன் கூடிய லேப்டாப்பை சில நிறுவனங்கள் தருகின்றன. முப்பதாயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள செல்போன் களையும் வாங்கித் தருகின்றன. ஆனால், இந்த வேலையைச் செய்வதற்கு இவ்வளவு விலை மதிப்புள்ள, செலவு வைக்கும் தொழில்நுட்பம் தேவையில்லை. வெறும்  2,500   ரூபாய் மதிப்பில்

ரீடெய்ல் பிஸினஸிற்கு எளிய சாஃப்ட்வேர்!

கிடைக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதி கொண்ட ஒரு சாதாரண போன் போதும்.  

எப்படி செயல்படுகிறது?

நுகர்பொருள் மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் இருக்கும் எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங் களுக்கு இந்த மென்பொருள் முக்கியமாக பயன்படும். உதாரணமாக, சோப் தயாரிக்கும் நிறுவனம் எனில், அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்கள் எத்தனைபேர், அதில் சில்லரை விற்பனையாளர்கள் எத்தனைபேர், அவர்களிடம் எவ்வளவு பொருள் ஸ்டாக் இருக்கிறது, இன்னும் அவர்களுக்கு எவ்வளவு வேண்டும்? எவ்வளவு பணம் தந்திருக்கிறார்கள், எவ்வளவு பணம் நிலுவையில் இருக்கிறது என்பதுபோன்ற பல்வேறு தகவல்களை இந்த மென்பொருள் மூலம் விற்பனைப் பிரதிநிதிகளும் பார்க்கலாம். அவர்களுடைய உயரதிகாரிகளும் பார்க்கலாம். இதன் மூலம் தங்களது வியாபார நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு வேகமாகச் செயல்பட விற்பனைப் பிரதிநிதிகளால் முடியும்.

எப்படி இது சாத்தியமானது?

2008-ல் பொருளாதார நெருக்கடி வந்தபோது நிறுவனங்களின் செலவுகளை குறைப்பதற்காக என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்ததன் விளைவுதான் இந்த மென்பொருள். பல்வேறு கட்டங்களில் ஆராய்ச்சி செய்து, படிப்படியாக முன்னேறி இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட ஒரு மென்பொருளாக அதை மாற்றி இருக்கிறோம். டி.வி.எஸ்., டாஃபே, மெடிமிக்ஸ், சபீனா, அமிர்தாஞ்சன் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இன்றைக்கு எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. இன்னும் பல்வேறு கம்பெனிகளிடம் இந்த மென்பொருளை அறிமுகம் செய்து வருகிறோம். அவர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது'' என்று முடித்தார் சீனிவாசன்.

பிஸினஸ்மேன்கள் இதை கவனிக்கலாமே!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு