Published:Updated:

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

Published:Updated:
வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

வீடு வாங்குவதற்கு நீங்கள் தந்த அட்வான்ஸை (ஏர்னெஸ்ட் மணி) உங்களுக்கு திரும்பத் தரத்

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையில்லை என அதிரடியாக தீர்ப்புச் சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். புதிதாக வீடு அல்லது மனை வாங்கலாம் என்கிற ஐடியாவில் இருப்பவர்களை இந்த செய்தி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

'ஏர்னெஸ்ட் மணி’ (Earnest money) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு பற்றி பார்ப்போம்.  

டெல்லியைச் சேர்ந்த ஒருவர், 70 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்க பில்டருக்கு 7 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தந்தார். இதை 'ஏர்னெஸ்ட் மணி’ என்கிற பெயரில் பில்டர் வாங்கிக்கொண்டார். ஆனால், சொத்தை வாங்கியவர் திடீரென 'நான் தந்த பணத்தைத் திரும்பத் தந்துவிடுங்கள். அந்த சொத்து எனக்கு வேண்டாம்’ என்றார். ஆனால், பில்டரோ அந்த பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்றார்.

இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் சொத்தை வாங்க நினைத்தவர். ஏழு லட்சம் ரூபாயில் வெறும் 50,000 ரூபாயை மட்டுமே திரும்பத் தரச் சொன்னது டெல்லி உயர்நீதிமன்றம்.

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

இது போதாது என்று வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு சென்றார் சொத்து வாங்க நினைத்தவர். அங்கே, இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. 'ஏர்னெஸ்ட் மணி’ தந்தபிறகு, சொத்தை வாங்கவில்லை எனில், அந்த 'ஏர்னெஸ்ட் மணி’யை பில்டர் திரும்பத் தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

'ஏர்னெஸ்ட் மணி’ என்றால் என்ன என்ற கேள்வியுடன் சென்னையின் முன்னணி வக்கீல் எஸ்.சி.ரகுராமிடம் கேட்டோம்.

''பொதுவாக 'ஏர்னெஸ்ட் மணி’ என்பது டென்டர் மற்றும் ஏல விற்பனையின்போது பயன்படுத்தப்படும். அதாவது, ஒரே பொருளை வாங்க பலர் போட்டி போடும்போது, அதை உறுதியாக வாங்கிக்கொள்கிறேன் என்பதற்காகத் தரப்படும் தொகைதான் 'ஏர்னெஸ்ட் மணி’.

இந்த 'ஏர்னெஸ்ட் மணி’யைத் திருப்பித் தருவது அல்லது தராமல் இருப்பது என்பது அதற்கான அக்ரிமென்டில் குறிப்பிட்டிருப்பதைப் பொறுத்து இருக்கிறது. பொதுவாக, ஏலம் கேட்டவருக்கு அது கிடைக்கவில்லை என்றால் 'ஏர்னெஸ்ட் மணி’ திரும்பத் தரப்படும். ஒருவேளை திரும்பத் தரப்படாது எனில்,  அதற்கான தொகை குறைவாக நிர்ணயிக்கப்படும்'' என்ற ரகுராம், ரியல் எஸ்டேட்டில் இது எப்படி கையாளப்படுகிறது என்பதையும் சொன்னார்.

வீடு வாங்க அட்வான்ஸ்... கொடுத்தப் பணம் திரும்பக் கிடைக்காது!

''வீடு, மனை போன்ற சொத்து வாங்கும் போது, வாங்குபவர் ஆரம்பத்தில் தரும் தொகை முன்பணம் (advance) என எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் அக்ரிமென்ட் போடும்போது, ஒப்பந்தப்படி நடக்கவில்லை என்றால், அதில் இந்த முன்பணம் திரும்பத் தரப்படுமா அல்லது தரப்படாதா அல்லது எவ்வளவு தரப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி பில்டர் மற்றும் சொத்து வாங்குபவர் செயல்பட வேண்டும்'' என்று விளக்கினார்.

தமிழ்நாட்டில் இந்த 'ஏர்னெஸ்ட் மணி’ நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வியுடன் சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அக்ஷயா பிரைவேட் லிமிடெட்-ன் சேர்மன் டி.சிட்டிபாபுவைச் சந்தித்தோம்.

''ஒருவருக்கு வீடு பிடித்திருந்தால் அதை உறுதிப்படுத்த சுமார் 20 சதவிகிதத் தொகையை முன்பணமாகத் தரவேண்டும். அக்ரிமென்ட் போடும்முன், ஃப்ளாட் பிடிக்கவில்லை என்றால், இதில் 50,000 ரூபாயைப் பிடித்துக்கொண்டு மீதியைத் தந்துவிடுவோம். அக்ரிமென்ட் போட்டு கட்டுமான வேலை ஆரம்பித்தபிறகு ரத்து செய்தால் ஃப்ளாட்டின் மொத்த விலையில் 10% தொகையைப் பிடித்துக்கொண்டு மீதியைத் தருவோம். இந்த விவரம் அக்ரிமென்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டி ருக்கும்.  ஆனால், வீடு வாங்க பணம் கொடுத்தவர் இறந்து போனால் எந்தத் தொகையும் பிடிக்க மாட்டோம்'' என்றார்.

வீடு வாங்கும் முன், அதை நீங்கள் நிச்சயம் வாங்கப் போகிறீர்களா, முழுப் பணத்தையும் உங்களால் புரட்ட முடியுமா என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அக்ரிமென்டில் கையெழுத்திட்டு, அட்வான்ஸும் கொடுங்கள். அவசரப்பட்டு அட்வான்ஸ் தருவானேன், பிறகு திரும்ப வேண்டும் என்று அலைவானேன்?

சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism