Published:Updated:

பவர் ஆஃப் அட்டர்னி : இனி கட்டாயம் பதிய வேண்டும்!

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வர் ஆஃப் அட்டர்னி, சேல்ஸ் அக்ரிமென்ட், கான்ட்ராக்ட் அக்ரிமென்ட் போன்றவை கட்டாயம் தொடர்புடைய சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 நில அபகரிப்பு மற்றும் போலி சொத்து மற்றும் ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது உடனடியாக டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பத்திரப் பதிவுத் துறை உயர்அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

''வழக்கமாக மனை, வீடு வாங்கும்போது பத்திரம் பதிவு செய்துவிடுவதால் அவற்றில் உரிமைப் பிரச்னை எழ  வாய்ப்பு இல்லை. அதுவே, பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை ஒப்பந்தம் ஆகியவற்றை விருப்பத்தின் அடிப்படையில், தேவைப்பட்டால் மட்டுமே பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்ததால் நில அபகரிப்பு

பவர் ஆஃப் அட்டர்னி : இனி கட்டாயம் பதிய வேண்டும்!

மற்றும் போலியான ஆவணப் பதிவு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இத்தகைய ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்க 1908-ம் ஆண்டு பதிவு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு ஜனாதிபதியின் அனுமதியின் மூலம் இந்த சட்டத் திருத்தம் தமிழ்நாடு சட்டம் 29/2012-ஆக இயற்றப்பட்டுள்ளது'' என்ற அந்த அதிகாரி சற்று நிறுத்தி அந்தச் சட்டத்திலுள்ள முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார்.

''பவர் ஆஃப் அட்டர்னி, சேல்ஸ் அக்ரிமென்ட், கான்ட்ராக்ட் அக்ரிமென்ட் போன்றவை கட்டாயம் தொடர்புடைய சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பவரை பொறுத்தவரையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து அமைந்துள்ள இடத்தையோ அல்லது பவர் எழுதிக் கொடுப்பவர் குடியிருக்கும் இடத்தையோ எல்லையாகக் கொண்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பவரை பதிவு செய்யும்போது பவர் ஏஜென்ட் ஆக நியமிக்கப்படுபவர், அவரை அடையாளம் காட்டும் சாட்சிகள் ஆகியோரின் புகைப் படங்களை ஆவணத்தில் ஒட்டுவது கட்டாயம். சொத்து பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்களின் பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பதால் பதிவு செய்யப்படாத ஆவணங்களைவிட பதிவு செய்யப்பட்ட ஆவணங்களே சட்டத்தின் முன் முன்னுரிமைப் பெறும்'' என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார்.

பவர் ஆஃப் அட்டர்னி : இனி கட்டாயம் பதிய வேண்டும்!

தமிழக அரசின் இந்த புதிய சட்டம் குறித்து சென்னையின் முன்னணி வக்கீல் களில் ஒருவரான ஜீவாவுடன் பேசினோம். ''கட்டுமான அக்ரிமென்டை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பது வாடிக்கையாளர் களுக்குச் சாதகமான விஷயம். வழக்கமாக கார் பார்க்கிங், பொதுபயன்பாட்டு இடம், கட்டுமான தாமதம் போன்றவைக் குறித்துதான் வீடு வாங்குபவர்களுக்கும் பில்டர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட் பதிவு செய்யப்படாததால் வாடிக்கையாளர்களால் சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தது. இனி அந்தப் பிரச்னை இருக்காது. புதிய சட்டத்தில் பவர் ஏஜென்ட் மற்றும் சாட்சிகள் புகைப்படம் ஒட்ட வேண்டும் என்பதால் மோசடிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த சட்ட மாற்றங்கள் வரவேற்கத்தக்கதே'' என்றார்.

தமிழக அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது. இந்த ஆவணப் பதிவுகள் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் சொத்து மோசடிகளை குறைக்கும் நடவடிக்கை என்கிறார்கள் நாம் சந்தித்தப் பொதுமக்களில் பலர்.

- சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு