Published:Updated:

ஹாட் ஏரியாக்கள்..!

ஹாட் ஏரியாக்கள்..!

ஹாட் ஏரியாக்கள்..!

ஹாட் ஏரியாக்கள்..!

Published:Updated:
ஹாட் ஏரியாக்கள்..!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டந்து முடிந்த 2012-ல் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் விற்பனை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்றாலும், ஓரளவு மந்தநிலையே நிலவியது என்று சொல்லலாம். வரும் 2013-ல் ரியல் எஸ்டேட்டில் மந்தநிலை மறைந்து விறுவிறுப்பு ஏற்படும் என சொத்து ஆலோசனை நிறுவனங்கள் கருத்து சொல்லி வருகின்றன.  

சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லசாலே-ன் லோக்கல் டைரக்டர் (ரெசிடென்சியல் சர்வீஸஸ்) சிவராமகிருஷ்ணனுடன் பேசினோம்.

''வீடுகள் சப்ளை மற்றும் விற்பனையில் தமிழ்நாட்டில் சென்னை நகரம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இப்போதும் சென்னையில் வீடுகளின் தேவை என்பது ஐ.டி. மற்றும் அது சார்ந்த துறை பணியாளர்களை நம்பித்தான் அதிகமாக உள்ளது. உற்பத்தி, டெலிகாம் மற்றும் நிதிச் சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் அடுத்து குறிப்பிடும்படி இருக்கிறார்கள்'' என்றவர், அண்மைக்காலத்தில் சென்னை ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்துச் சொன்னார்.

ஹாட் ஏரியாக்கள்..!

''ஒருங்கிணைந்த நகரியம், கேட்டட் கம்யூனிட்டி போன்ற பிரமாண்ட புராஜெக்ட்களை மக்கள் விரும்ப ஆரம்பித்திருக் கிறார்கள். இதனால் சிறிய புராஜெக்ட்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், சென்னை நகரில் வீடு வாங்குபவர்களில் 50 முதல் 60 சதவிகிதத்தினரின் வயது 25 முதல் 35 ஆக உள்ளது.

வீடோ, மனையோ வாங்கி உடனே விற்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகக் குறைவு. குறைந்தபட்சம் 5 முதல் 7 ஆண்டு கள் வைத்துதான் விற்கிறார்கள். அந்த வகையில் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் விலை எப்போதும் தடாலடியாக இறங்க வாய்ப்பு இல்லை. எனவே, அது பாதுகாப்பான முதலீடாகவே உள்ளது. கடந்த 2012-ல் சென்னையில் சொத்துகளின் மதிப்பு சராசரியாக சுமார் 8 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் 2012-ல் போரூர், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகியவை ஹாட் செல்லிங் ஏரியாக்களில் டாப் இடங்களைப் பெறுகின்றன. 2013-ல் போரூர், வேளச்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், தையூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் மொத்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையில் ஓ.எம்.ஆர். பகுதியின் பங்களிப்பு சுமார் 40 முதல் 50 சதவிகிதமாக உள்ளது. இந்த ஏரியாக்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை சாதாரணமாக 35 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாயாக உள்ளது. தையூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஹாட் ரியல் எஸ்டேட் ஏரியாக்களாக இருக்கும்...'' என்றவரிடம், தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டோம்.

''சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் உள்ளன. வட இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் சொத்துகளை வாங்கினாலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர் களில் 80 சதவிகிதம்பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் இது 60 சதவிகிதமாக உள்ளது.

ஹாட் ஏரியாக்கள்..!

அடுத்த ஆண்டில் (2013-ல்) இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருப்பதால், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்'' என்றார்.  

இதே கருத்தை ஏறக்குறைய பிரதிபலித்தார் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் நிறுவனத்தின் ஆபீஸ் டைரக்டர் (சென்னை) என்.ஹரிஹரன்.

''சென்னையில் வீடு வாங்கு பவர்கள் பெரும்பாலும் எண்ட் யூசர் என்கிற பயன் பாட்டுக்கு வாங்குபவர்களாக இருக்கிறார்கள். சென்னையில் குடியிருப்புகளுக்கான விலை கடந்த மூன்றாண்டுகளில் 150 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடுத்துவரும் இரு ஆண்டு களுக்கு இந்த வளர்ச்சி மேலும் தொடரும். ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., ஜி.எஸ்.டி. சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஒரகடம், போரூர், மதுரவாயல், அம்பத்தூர் போன்ற ஏரியாக்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடுத்துவரும் ஆண்டுகளில் வேகமாக இருக்கும்'' என்றார்.  

நம் நாட்டை பொறுத்தவரை, அதிகம் வெளிப்படை தன்மை இல்லாதத் தொழில்களில் ரியல் எஸ்டேட் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பெரிய பில்டர்களின் புது புராஜெக்ட்களில் விலை என்பது ஓரளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. அவர்களும் உடனடி ரொக்கப் பணம், பலர் சேர்ந்து கூட்டாக வாங்குகிறார்கள் என்றால் விலையில் கணிசமான தள்ளுபடி தரவே செய்கிறார்கள். புரோக்கர்கள் மூலம் வாங்கும் மனை மற்றும் வீடுகளின் விலை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. எனவே, வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதுபோல் பேரம் பேசினால் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.  

எனவே, முதலீட்டு நோக்கில் மனை மற்றும் வீடு வாங்குபவர்கள் நகர வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை சீர்தூக்கி அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது..!

- சி.சரவணன்

ஹாட் ஏரியாக்கள்..!

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்ற இடங்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் இந்தியா பிராபர்ட்டி டாம் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. கணேஷ் வாசுதேவன்.

சென்னை: ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., ஜி.எஸ்.டி. சாலை, அம்பத்தூர், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மேடவாக்கம், தாம்பரம், பூந்தமல்லி.

திருச்சி:  புதூர், லால்குடி சாலை, கே.கே. நகர், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், உறையூர்,  

புதுச்சேரி:  அரியாங்குப்பம், தவளக்குப்பம், லாஸ்பேட், வில்லியனூர், ஈ.சி.ஆர். சாலை (காலாப்பேட் வரை)

கோயம்புத்தூர்: அவினாசி சாலை (விமான நிலையம் வரை), திருச்சி சாலை (ஒண்டிப்புதூர் வரை),. சரவணம்பட்டி, கணபதி, மேட்டுப்பாளையம் சாலை, காலாப்பட்டி.

திருப்பூர்: பெருமாநல்லூர் சாலை, அவினாசி சாலை, பல்லடம் சாலை.

சேலம்:  ஆத்தூர், ஓமலூர், ராம்நகர், சிவாய நகர், சங்கர் நகர்.

மதுரை:  எஸ்.எஸ். காலனி, மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, மாட்டுத்தாவணி (உயர் நீதிமன்றம் நோக்கி), வில்லாபுரம் (அருப்புக் கோட்டை - விமான நிலையம் நோக்கி),

தூத்துக்குடி:  டீச்சர்ஸ் காலனி, மில்லர்புரம், குறிஞ்சி நகர், இந்திரா நகர், வி.எம்.எஸ். நகர்

திருநெல்வேலி : ராஜராஜேஸ்வரி நகர், என்.ஜி.ஓ. காலனி, மஹாராஜா நகர், சாந்தி நகர், புதிய பஸ் நிலையப் பகுதி (மேலப்பாளையம் நெடுஞ்சாலை)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism