Published:Updated:

புறநகர் ரவுண்டுஅப்

வண்டலூர் TO சிங்கப் பெருமாள்கோவில்! - நீரை.மகேந்திரன்,படங்கள்: ஜெ.வேங்கடராஜ்.

புறநகர் ரவுண்டுஅப்

வண்டலூர் TO சிங்கப் பெருமாள்கோவில்! - நீரை.மகேந்திரன்,படங்கள்: ஜெ.வேங்கடராஜ்.

Published:Updated:
##~##

சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வீடு, மனை வாங்குவதற்கு தோதான ஏரியாக்களை பற்றியும் அந்த ஏரியாக்களில் உள்ள விலை நிலவரங்கள் பற்றியும் விரிவாகச் சொல்லி வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் வண்டலூர் டு சிங்கப்பெருமாள்கோவில் வரை உள்ள பகுதிகளை புறநகர் ரியல் எஸ்டேட் பகுதிக்காக ரவுண்டு அடித்தோம்.

சென்னையின் போக்குவரத்து நெருக்கடிகளைத் தாண்டி தாம்பரத்திலிருந்து புறநகர் பகுதியாகப் பார்க்கலாம் என்றால் வண்டலூர் வரை உள்ள விலை நிலவரங்கள் நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, கேளம்பாக்கம் வழியில் பயணப்பட்டோம். நெடுங்குன்றம், கொளப்பாக்கம், வேங்கடமங்கலம், கண்டிகை வரை சுற்றினோம். இந்தப் பகுதிகள் தற்போது வளர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மார்க்கத்தில் நல்லம்பாக்கம் வரை குறிப்பிடும்படி மனைப் பிரிவுகள் கிடையாது. நல்லம்பாக்கம், கண்டிகை, வேங்கடமங்கலம் பகுதிகள் தற்போது கிடுகிடு வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக, வேங்கடமங்கலம் ஏரியாவில் குடியிருப்பு மனைப் பிரிவுகள் கிடைக்கிறது. தவிர, இந்தப் பகுதிகளில் பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி வருகின்றன. எனவே, இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் இந்தப் பகுதியில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். வண்டலூரிலிருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் பேருந்துகளும், இது தவிர ஷேர் ஆட்டோக்களும் இந்தப் பகுதி மக்களுக்கு கைகொடுக்கின்றன. தற்போது நிலவும் விலை நடுத்தரவாசிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.  

புறநகர் ரவுண்டுஅப்

ஊரப்பாக்கம்!

ஊரப்பாக்கமும் நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பகுதியில் புதிய மனைப் பிரிவுகள் இல்லை. அதேநேரத்தில், மறுவிற்பனை ஜெகஜோதியாக நடக்கிறது. குறிப்பாக, ஊரப்பாக்கத்திற்கு இடதுபக்கம் ரயில்வே கேட் தாண்டி இரண்டு, மூன்று கிலோ மீட்டர் வரை மனைகள் கிடைக்கிறது. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து எளிதாக இருப்பதால் இந்தப் பகுதிகளை தேர்வு செய்யலாம். ஆனால், இவை தாழ்வான பகுதிகள் என்பதால் மழைக்காலத்தில் நீர் தேங்கும் என்பதைக் கவனத்தில்கொள்வது நல்லது.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி!

அடுத்து, நந்திவரம், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் பெருவாரியான இடங்கள் மறுவிற்பனை என்கிற வகையில்தான் உள்ளன. இந்தப் பகுதியில் மாடம்பாக்கம், தைலாவரம், நீலமங்கலம் பகுதிகளில் நடுத்தரவாசிகள் மனைகள் வாங்குவதற்கு பொருத்தமான இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக, நந்திவரத்திற்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், சாய்பாபா நகர் போன்ற பகுதிகளில் மறுவிற்பனை வேகமாக நடந்து வருகிறது. கொஞ்சம் உள்கிராமமாக இருக்கும் பெருமாட்டுநல்லூர், காயாரம்பேடு பகுதிகளில் மனைகள் விலை, பிரதான சாலையை ஒப்பிடும்போது கணிசமாக குறைவு.

புறநகர் ரவுண்டுஅப்
புறநகர் ரவுண்டுஅப்

மறைமலைநகர்!

மறைமலைநகர் சுற்றுப்புறங்களில் மனைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. ஓரளவுக்கு குறைந்த விலையில் புதிய மனைப் பிரிவுகளும் இங்கு உள்ளன. இடதுபக்கம் கூடலூர் செல்லும் வழியில் மறுவிற்பனை ஜோராக நடக்கிறது. வலது பக்கம் பெரமனூர் மற்றும் பனங்காட்டூர் கிராமங்களில் புதிய லே அவுட்களில் இடங்கள் கிடைக்கின்றன.  

சிங்கப்பெருமாள்கோவில்!

சென்னை புறநகர்களில் முக்கிய இடத்தை சிங்கப்பெருமாள்கோவில் பிடித்து வருகிறது. பிரதான சாலைகளை ஒட்டி மனைப் பிரிவுகள் இல்லை. அதேநேரத்தில், இதன் சுற்றுபுற கிராமங்களான கொளத்தூர், வெம்பாக்கம், செட்டிபுண்ணியம் போன்றவற்றில் மனைகள் கிடைக்கின்றன. புதிய லே அவுட்கள், மறுவிற்பனை என்கிற இருவகையிலும் இந்தப் பகுதிகளில் மனைகள் உள்ளன. இங்கிருந்து அனுமந்தபுரம் செல்லும் வழியில் சில இடங்களிலும் புதிய மனைப் பிரிவுகள் உள்ளன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள்!

பல முன்னணி கட்டுமான நிறுவனங்களும் இந்தப் பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளை கட்டி வருகின்றன.

புறநகர் ரவுண்டுஅப்

வண்டலூர் தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில் வரையிலும் அடுக்குமாடி வீடுகள் கிடைக்கிறது. இடத்திற்கு ஏற்பவும், வசதிக்கு ஏற்பவும் சதுர அடி விலை 2,500 ரூபாயிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் கிடைக்கிறது. சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் வீடு கட்டி விற்பனை செய்கின்றன.

சாட்டிலைட் சிட்டி!

வண்டலூரிலிருந்து கேளம்பாக்கம் வழியில் வலதுபுறமாகவும், ஊரப்பாக்கம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிகளின் பின்பகுதிகளாகவும் உள்ளடங்கி இருக்கும் நல்லம்பாக்கம், பாண்டூர், காயாரம்பேடு, அருங்கால் உள்ளிட்ட கிராமங்களை கையகப்படுத்தி சாட்டிலைட் சிட்டி தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்த அரசுத் திட்டம் ஒன்று நிலுவையில் உள்ளதால், இந்தப் பகுதிகளில் இடம் வாங்குவதும் விற்பதும் மந்தமாகவே உள்ளது. பொதுவாக, இந்தப் பகுதிகளில் இடங்கள் வாங்குவது கொஞ்சம் ரிஸ்க் என்றுதான் சொல்ல வேண்டும் என்கின்றனர்.

காப்புக் காடுகள்!  

வண்டலூர் தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில் வரை தற்போது மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள் மற்றும் முறையான அரசு அங்கீகாரம் பெறப்பட்ட மனைப் பிரிவுகளில் நம்பிக்கையாக இடங்களை வாங்கலாம். குறைந்த விலை மற்றும் பட்டா மட்டும் இருக்கும் இடம், மனைப் பிரிவை ஒட்டி இருக்கும் நிலம் போன்றவற்றை வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை. இந்தப் பகுதிகளைச் சுற்றி வனத் துறை காப்புக் காடுகள் சூழ்ந்துள்ளதால் ஏமாறுவதற்கு வாய்ப்புள்ளது, உஷார்!  

புறநகர் ரவுண்டுஅப்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism