Published:Updated:

'புது கோவை’யாகும் புறநகர்ப் பகுதிகள்!

ச.ஜெ.ரவி,படங்கள்: தி.விஜய்.

'புது கோவை’யாகும் புறநகர்ப் பகுதிகள்!

ச.ஜெ.ரவி,படங்கள்: தி.விஜய்.

Published:Updated:

புறநகர் ரவுண்டுஅப்

##~##

புறநகர் ரவுண்ட்அப் பகுதியில் கடந்த வாரங்களில் சென்னையைச் சுற்றியுள்ள ஹாட் ரியல் எஸ்டேட் ஸ்பாட்களைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லி இருந்தோம். இந்த வாரம், கோவையைச் சுற்றியுள்ள ஹாட் ரியல் எஸ்டேட் ஸ்பாட்களைப் பற்றி பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில ஆண்டுகளுக்கு முன்னால் பரபரப்பு இன்றி காணப்பட்டு வந்த கோவையின் புறநகர்ப் பகுதிகள், மாநகரம் வளர வளர விரிவாக்கம் அடைந்து வருகிறது. தொழில்துறை வளருகிறதோ இல்லையோ ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. பொதுவாகவே கோவை மீது வெளியூர்க்காரர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. வேலை தேடி வருபவர்களின் முதல் ஆசை இங்கு வீடோ, மனையோ சொந்தமாக வாங்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசைகளை நிறைவேற்றுகிறது கோவையின் புறநகர்ப் பகுதிகள்.

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் என கோவை மாநகரப் பகுதிகளை மேல்தட்டு மக்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, நடுத்தரப் பிரிவினர் முதலீட்டு நோக்கிலும், வசிக்க ஏற்ற வகையிலும் நகரத்தைவிட்டு வெளியே இருபது கிலோ மீட்டருக்கு அப்பாலும் புறநகரைத் தேர்வு செய்கின்றனர். முதலில், கோவையில் இருந்து சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் எந்தெந்த ஏரியாக்கள் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன என பார்ப்போம்.

'புது கோவை’யாகும்  புறநகர்ப் பகுதிகள்!

அன்னூர்:

கோவையை ஒட்டி வேகமாக வளர்ந்துவரும் பகுதியாகவும், தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பிய பகுதியாகவும் அன்னூர் சுற்றுவட்டாரம் உள்ளது. சரவணம்பட்டி வரை மாநகரின் பரபரப்பு நீடிக்கிறது என்பதால், சரவணம்பட்டியைத் தாண்டிதான் புறநகர்ப் பகுதிகள் துவங்குகின்றன. குரும்பபாளையம், விளாங்குறிச்சி, பாசூர், மசக்கவுண்டசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வீட்டு மனைகள் வாங்க மிகச் சிறந்த இடமாக விளங்குகிறது.

இந்தப் பகுதிகள் கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் தொழிற்சாலைகள் என எப்போதும் மக்கள் புழக்கம் உள்ள பகுதியாக இருப்பதால், இங்கு உடனடியாக வீடு கட்ட உகந்த இடமாகத் தேர்ந்தெடுக்கலாம். கிட்டத்தட்ட புதிய கோவை நகரமாக அன்னூர் சுற்றுவட்டாரம் வளர்ந்து வருகிறது. இந்தப் பகுதியில் பீக் ஏரியா என்றால் கோவில்பாளையத்தைக் குறிப்பிடலாம். போக்குவரத்து வசதி தாராளமாக இருப்பதும், அவிநாசி சாலை, அன்னூர் சாலை, கருவலூர் சாலைகளுக்குச் செல்ல உட்சாலை வசதிகள் நன்றாக இருப்பதும் இந்தப் பகுதியின் ப்ளஸ் பாயின்ட்.

'புது கோவை’யாகும்  புறநகர்ப் பகுதிகள்!

இந்தப் பகுதியில் நெருக்கமான மக்கள் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. அடுக்குமாடி வீடு திட்டங்கள் இந்தப் பகுதியில் இல்லை என்றாலும், தனி வீடு கட்டும் திட்டம் நல்ல வளர்ச்சியில் உள்ளது. புதிய மனைப் பிரிவு களுடன், மறு விற்பனையிலும் வீடுகள் கட்ட வசதியான இடங்கள் உள்ளன. கோவையில் இருந்து சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனையட்டியப் பகுதிகளில் சுற்றுச்சாலைகள் இருப்பதால் போக்குவரத்து சிக்கல் இல்லை. பஸ், மினி பஸ் போன்ற போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோவில்பாளையம்!

'புது கோவை’யாகும்  புறநகர்ப் பகுதிகள்!

புறநகர்தான் என்றாலும், அடுக்குமாடி வீடுகள் ஆதிக்கம் வந்துவிட்டது இந்தப் பகுதிகளில். சரவணம்பட்டியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் மனைகளும் கிடைக்கின்றன என்றாலும், விலை ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. வசதிக்கு இடம் வாங்கி வீடு கட்டுவதும், அடுக்குமாடி வீடுகள் வாங்குவதும் நடக்கிறது. அப்ரூவல் மனைகள் மற்றும் பட்டா நிலங்கள் என இரண்டு வகையிலும் வாங்கலாம். இந்தப் பகுதிகளில் ஒரு சென்ட் 8 லட்சம் வரை விற்பனையாவதாகச் சொல்கின்றனர்.

காரமடை!

கோவையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் காரமடை படுவேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. முக்கியமாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை என்பதால், அதைக் காரணம் காட்டியே விலை ஏற்றுகிறார்கள். ஏற்கெனவே மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால், புதிதாக வருபவர்களும் விரும்பும் பகுதியாக உள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு காரமடை பகுதிகளில் இடம் வாங்குவது வசதியாக இருப்பதாகச் சொல்கின்றனர். அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கான தேவைகளுக்கு அனைத்து வசதிகளும் இந்தப் பகுதிகளில் குறைவில்லை. போக்குவரத்தும் தாராளமாக உள்ளது இந்தப் பகுதிகளில் சிறப்பான விஷயம்.

பொதுவாகவே, இந்தப் பகுதிகளும் கோவை மக்களின் குடியிருப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப வளர்ந்து வந்தாலும், போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. இதனால், நகரத்தில் பணியாற்றுபவர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கும். இந்த நெகட்டிவ் தவிர, பிற வகைகளில் இந்தப் பகுதிகள் பாசிட்டிவ்தான். நிலத்தடி நீர், சுற்றுச்சுழல், அமைதியான இட அமைவு விரும்புபவர்கள் இப்போதே முயற்சி செய்யவும். வளர்ந்து வரும் பகுதிகள் என்பதால் நாளுக்குநாள் விலை ஏறும் என்பது தெளிவு.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism