Published:Updated:

ரியல் எஸ்டேட் - திகைக்கவைக்கும் திருச்சி !

செய்தி மற்றும் படங்கள்:

ரியல் எஸ்டேட் - திகைக்கவைக்கும் திருச்சி !

செய்தி மற்றும் படங்கள்:

Published:Updated:
##~##

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஜரூராகவே இருக்கிறது. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் என எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் எளிதில் சென்றுவிட முடியும் என்பதால், இங்கு புறநகர்ப் பகுதியில் இடம் வாங்குவதைப் பலரும் விரும்பவே செய்கின்றனர்.

வரலாற்று ரீதியாக திருச்சி நகரத்தில் பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னைக்கு அடுத்து திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்கப் பல்வேறு தொழில் துறையினரும் பல்லாண்டுகாலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். பொன்மலை லோகோ ஷெட், பி.ஹெச்.இ.எல், ஓ.எஃப்.டி., ஹெச்.ஏ.பி.பி. போன்ற அரசு நிறுவனங்கள், இதுதவிர பல தனியார் நிறுவனங்கள் இங்கு நீண்டகாலமாகவே நல்லபடியாகச் செயல்பட்டு வருகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைணவத்திற்கு ஸ்ரீரங்கமும், சைவத்திற்கு திருவானைக்காவலும், ஊருக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன் என முக்கிய கோயில்களும் அலங்கரிக்கின்றன. வடக்கே கொள்ளிடமும், தெற்கே காவிரியும் இருப்பதால் குடிநீருக்குப் பஞ்சம் இல்லை.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து வசதியைப்போல வேறு எங்கும் காண இயலாது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகள் தினமும் மலிவாக வாங்கிவிட முடியும். இப்படி மக்கள் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப மாநகரம் இருப்பதால், ரியல் எஸ்டேட் தொழிலும் வேகமான மாற்றம் கண்டுவருகிறது.

ரியல் எஸ்டேட் - திகைக்கவைக்கும் திருச்சி !

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டிலிருந்து கூத்தூர், பழூர், சமயபுரம் வரை புறநகராக இருந்தாலும், தற்போது இங்கு பெரும்பாலான இடங்களில் வீடுகள் முளைத்துவிட்டதால், சமயபுரம் முதல் பெரம்பலூர் வரையிலான சாலைகள் வளர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டு வரும் எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை ஆகியவை இந்தப் பகுதிக்கு பலம் சேர்க்கின்றன.

அடுத்து, டோல்கேட்டில் இருந்து சேலம், அரியலூர் ஆகிய முக்கிய ஊர்களுக்கு அதிகமான பேருந்து வசதி உள்ளதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நிலங்களில் முதலீடு செய்ய மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். சேலம் செல்லும் சாலையில் பிச்சாண்டார் கோவில், குணசீலம் வரையுள்ள பெரும்பாலான பகுதிகள் துறையூர் செல்லும் சாலையில் உள்ள நொச்சியம், அத்தாணி, மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன, அதேபோல டோல்கேட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் வாளாடி, தாளக்குடி முதல் லால்குடி வரையில் முதலீடு நோக்கில் இடம் வாங்கலாம்.

புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் ரவுண்டானா வரையில் வளர்ந்துவிட்டாலும், கோடைகாலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதால் இங்கு மக்கள் நெருக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது.

ரியல் எஸ்டேட் - திகைக்கவைக்கும் திருச்சி !

மதுரை-திண்டுக்கல் சாலையில் கல்லூரிகள் தொழிற்சாலைகள் பெரியளவில் வளர்ந்து வருகின்றன. மேலும், இந்தச் சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய இருப்பதாக கடந்த ஆட்சியில் கூறப்பட்டு வந்தது. ஆனால், இத்திட்டம் தற்பொழுது கிடப்பில் இருப்பதால் , வளர்ச்சி

ரியல் எஸ்டேட் - திகைக்கவைக்கும் திருச்சி !

மந்தமாகவே உள்ளது.

திருச்சியில் இருந்து வயலூர் வழியாக தோகைமலை வரை செல்லும் வழியில் மனை விற்பனை அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் விரும்பும் இடமாக இந்தப் பகுதிகள் இருப்பதால் வேகம் கண்டு வருகிறது. ஆனால், போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது என்பதால் சற்று கவனமாக முதலீடு செய்யலாம்.

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் கல்லூரிகள் அதிகமாகக் காணப்படுவதால் குழந்தைகளின் படிப்பில் கவனம்செலுத்தும் பெற்றோர் இந்தப் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல, திண்டுக்கல் சாலையில் மணப்பாறை வரையிலும் துரிதமான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

திருச்சியில் இருந்து மற்றொரு பகுதியை இணைக்கும் தஞ்சை சாலையில் பல கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் வியாபித்து இருப்பதால், இந்த ஏரியா திருச்சி மாநகரின் பிரைம் ஏரியாவாக இருக்கிறது. பி.ஹெச்.இ.எல். நிறுவனம் மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், காற்றாலை நிறுவனத்துக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் சாலையாகவே இந்தப் பகுதி இருக்கிறது.

இந்தப் பகுதி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை விரிந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிற்சாலைகளின் இதயமாக இந்தப் பகுதி திகழ்வதால் வயதானவர்கள்  இந்தப்  பகுதியை விரும்புவதில்லை. எனினும், விலையானது ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பகுதியில் இருந்து நாவல்பட்டு, போலீஸ் காலனி வழியாக புதுக்கோட்டை சாலையைச் சென்றடையலாம் என்பதால் இங்கு ரியல் எஸ்டேட் வேகமெடுத்திருக்கிறது. மேலும், நாவல்பட்டில் ஐ.டி பார்க் வருவதாகச் சொல்லி விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதாக  முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், பிச்சாண்டார்கோவில், சோமரசன்பேட்டை, எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக அப்பார்ட்மென்ட்கள் கட்டப்பட்டு வருகின்றன. தவிர, அரசின் வழிகாட்டி மதிப்பு  விரைவில் ஏறும் என பொதுமக்கள் மத்தியில் ஒரு பேச்சு இருப்பதால், விலை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் புரோக்கர்கள்.

இதுவும் வாங்குபவர்களுக்குச் சாதகமான அம்சமே. சில இடங்களில் அரசின் வழிகாட்டி மதிப்பைவிட மனையின் மதிப்பு குறைவாக இருப்பதால் அதை அரசு சரிசெய்யும்போது மதிப்பு உயரவே செய்யும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism