Published:Updated:

நீண்டகால முதலீட்டுக்கு நெல்லை புறநகர்!

பானுமதி அருணாசலம், படங்கள் : எல்.ராஜேந்திரன்.

நீண்டகால முதலீட்டுக்கு நெல்லை புறநகர்!

பானுமதி அருணாசலம், படங்கள் : எல்.ராஜேந்திரன்.

Published:Updated:

ரியல் எஸ்டேட்

 புறநகர் ரவுண்டுஅப்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர்ந்துவரும் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் மனை வாங்கவேண்டுமெனில் உங்களிடம் பல லட்சம் ரூபாய் இருக்கவேண்டும். அவ்வளவு பணமில்லை என்று பரிதவிப்பவர்களுக்கு நெல்லையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் பெஸ்ட் தேர்வாக இருக்கும். நெல்லை புறநகர்ப் பகுதிகளை ஒரு ரவுண்டு சுற்றி வந்தபோது இதை நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.  

நெல்லை புறநகரை ஆறு பகுதிகளாகப் பிரிக்கலாம். மதுரை சாலை, நாகர்கோவில் சாலை, சேரன்மகாதேவி - மேலப்பாளையம் சாலை, திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி சாலை, தென்காசி - பழைய பேட்டை சாலை. இவைகள்தான் தற்போது அதிவேக வளர்ச்சி கண்டுவரும் புறநகர்ப் பகுதிகள்.  

நாகர்கோவில் சாலை!

அரசு அலுவலகங்கள் பல இருக்கும் பகுதி மட்டுமல்லாமல், அரசுப் பொறியியல் கல்லூரி, ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என எப்போதும் பிஸியாக இருக்கும் பகுதி. இங்கு சென்ட் 75,000 ரூபாய் வரை விலை போகிறது.

மேலப்பாளையம்!

நீண்டகால முதலீட்டுக்கு நெல்லை புறநகர்!

இந்தப் பகுதிகளில் இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் பல வந்துள்ளன. மேலப்பாளையம் சாலையில் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் ஒரு சென்ட் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இது உள்ளது. மினி பஸ்களும், சேரன்மகாதேவி செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்கிறது. நடுத்தர மக்கள் இங்கு வீடு கட்ட ஏதுவாக அவர்களது பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் கிடைக்கிறது.

திருச்செந்தூர் சாலை!

பாளையங்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம். சாலை வசதி நன்றாக இருக்கிறது. அதனால் போக்குவரத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது. திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு வேலைக்குச் செல்லும் மக்கள் இந்தப் பகுதியில் இடம் வாங்கிப் போடுவதில்

நீண்டகால முதலீட்டுக்கு நெல்லை புறநகர்!

கவனம் செலுத்துகின்றனர். ஒரு சென்ட் சுமார் 1.25 லட்சம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.

தென்காசி சாலை!

தென்காசி சாலையில் பழைய பேட்டையில் வசதிகள் அவ்வளவாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த சில வருடங்களாக இந்தப் பகுதியில் வளர்ச்சி அதிகமில்லை. எனினும், இயற்கைச் சூழ்நிலைகளை பயன்படுத்தி இந்தப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் அதிகளவில் அமைக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் சென்ட் 50,000 முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. எனினும், மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது இந்தப் பகுதி சற்று விலை குறைவாக இருப்பதால் நடுத்தர மக்கள் கொஞ்சம் யோசித்து செயல்படலாம்.

மதுரை சாலை!

புதிய பேருந்து நிலையம் தொடங்கி தாழையூத்து வரையிலும் நல்ல விலை போகிறது. இந்தப் பகுதியில் மேம்பாலம் வந்தவுடன் விலை அதிகரித்துள்ளது. தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்கு அருகில் சென்ட் 2 லட்சம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. கங்கைகொண்டான் பகுதிகளில் 40,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் விலையில் இடங்கள் கிடைக்கிறது.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீட்டரி லும், பாளையங்கோட்டையிலிருந்து 12 கி.மீட்டரிலும் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி வரை நல்ல வளர்ச்சி காணும் பகுதிகளாக உருவாகி வருகிறது. பத்து லட்சம் ரூபாயில் வீடு வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் பகுதியைத் தேர்வு செய்யலாம். இந்தப் பகுதியில் இருக்கும் இட்டேரியில் சென்ட் 80,000 ரூபாய் வரை கிடைக்கிறது.

நீண்டகால முதலீட்டுக்கு நெல்லை புறநகர்!

தென்கிழக்கு பகுதி!

திருநெல்வேலியின் தென்கிழக்குப் பகுதியான கொங்கந்தான்பாறை என்ற பகுதியில் சென்ட் சுமார் 1.5 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் திரும்பும் இடமாக உள்ளது. இங்கு புறநகர் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் வர வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. கார் ஷோரூம்கள், இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது. சமீப காலமாக நன்கு வளர்ச்சி காணும் பகுதியாகத் திகழ்கிறது.

தற்போது புறநகர்ப் பகுதிகளில் குறைந்த விலையில் மனைகள் கிடைப்பதால்; இப்போது வாங்கிப்போட்டால் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நல்ல வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism