Published:Updated:

ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !

வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி.

ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !

வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி.

Published:Updated:
##~##

மஞ்சள் உற்பத்தியிலும், ஜவுளி வர்த்தகத்திலும் தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத நகரம் ஈரோடு. காவிரியின் முக்கியமான பாசனப் பகுதி என்பதால் விவசாயமும் பிரமாதமான பங்களிப்பை அளிக்கிறது. இதுதவிர, தற்போது தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாகவும் இந்நகரம் பெருத்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மல்லிகை சென்ட் நறுமணப் பொருள் நிறுவனங்கள், சர்க்கரை ஆலை, காகித ஆலைகள், குளிர்பான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கண்ணாடித் தொழிற்சாலைகள் மற்றும் அருகிலுள்ள பெருந்துறை தொழிற்பேட்டை சார்ந்து நகர விரிவாக்கமும், தொழில் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

ஈரோட்டைச் சுற்றிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால், இயற்கையாகவே ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் மக்கள் குடியேறுவது சற்று அதிகமாக உள்ளது. இதனால் ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பும் பெரிதும் குறையாமல் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி.ஐ.பி.கள் விரும்பும் பெருந்துறை!

ஈரோடு மேற்கே புறநகர் என்று எடுத்துக் கொண்டால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெருந்துறை வரையிலும் நீளும். திண்டல், வேப்பம்பாளையம், மேட்டுக்கடை, சித்தாண்டப்பாளையம், வி.கே. வலசு, பெருந்துறை, ஈங்கூர் போன்ற பகுதிகள் அடங்கும். இப்பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன், பொட்டல் காடுகளாக கேட்பாரற்று கிடந்தன. ஆனால், இன்று சதுர அடி 3,500 ரூபாயைத் தாண்டும் அளவுக்கு அபார வளர்ச்சி அடைந்துள்ளது.

ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !

புறநகர் ரவுண்டுஅப்

இதற்கு காரணம், பெருந்துறை வழியாக உள்ள சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை,  பல உயர்கல்வி நிலையங்கள்; எந்த நேரத்திலும் உயர்தர மருத்துவமனைக்கு செல்ல டிராபிக் இல்லாத ஏரியா; இயற்கை சூழல் நிறைந்த பகுதி, நல்ல குடிநீர் வசதி என பலகோணத்திலும் ஏற்ற பகுதியாக இருப்பதால் சென்னைக்கு நிகராக பல அபார்ட்மென்ட்கள் இங்கு இருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் இங்கு வருவதாகச் சொல்லியும் நிலத்தின் மதிப்பை உயர்த்திவிட்டார்கள்.  

ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !

இந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் சாதாரண மாக இடம் வாங்கிவிட முடியாது என்கிற அளவுக்கு விலை இருக்கிறது. சாதாரணமாக இங்கு ஒரு சதுர அடி 2,000 முதல் 4,000 வரை விலை போகிறது. இங்கு 1,000 சதுர அடி மனை யில் ஒரு வீடு கட்ட நினைத்தாலும் நிலத்தின் மதிப்பு, கட்டடச் செலவு ஆகியவை சேர்ந்து  மொத்தம் 30 லட்சம் தேவைப்படும்.

கரூர், திருச்சி வழி!

ஈரோட்டிலிருந்து கரூர், திருச்சி வழியில் மூலப்பாளையம், கொல்லம்பாளையம், புதூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதிகள் நடுத்தர மக்களின் தேர்வாக உள்ளது. இந்தப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் வருவதாக பலமான பேச்சு கிளம்பியதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. இங்கு நகர விரிவாக்க நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நகராட்சி நகர், போக்குவரத்து நகர் போன்ற பகுதிகளும் இருப்பதால் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது. காவிரிப் படுகை பகுதி என்பதால் எக்காலத்திலும் குடிநீருக்குப் பஞ்சம் இல்லாதப் பகுதி. சுற்றுச்சூழலும் சிறப்பாக உள்ளது. அதனால் பெருந்துறை வழிக்கு சமமாக இந்தப் பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

நடுத்தர மக்களுக்கு சித்தோடு!

சத்தியமங்கலம் வழியில் உள்ள பகுதி கள் சித்தோடு, கொங்கம்பாளையம், பெரியசேமூர், மாம்பரத்தான் காடு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளும், ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில் உள்ள வெள்ளோடு, ஈரோடு அரசு கலைக் கல்லூரி, சேனாபதிபாளையம், முத்தம்பாளையம், கவுண்டச்சிபாளையம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளில் தற்போது நில விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினர் வாங்குவதற்கு ஏற்ற விலைகளில் வீட்டுமனைகள் கிடைக்கிறது. இதுதவிர, இந்தப் பகுதிகளில் தவணை முறை திட்டங்களிலும் வீட்டுமனைகள் கிடைக்கிறது.

ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !

மாவட்டம் மாறுதல்!

ஈரோட்டின் கிழக்குப் பகுதி என்று எடுத்துக் கொண்டால், மூன்று கிலோ மீட்டரிலேயே காவிரிக் கரையோடு ஈரோடு மாவட்டத்தின் எல்லை முடிந்துவிடுகிறது. அதற்கு மேல் நாமக்கல் மாவட்டம் ஆரம்பித்துவிடுகிறது என்றாலும், பள்ளிப்பாளையம் வரை புறநகர்ப் பகுதியாக கணக்கிடலாம். இதுதவிர, இந்தப் பகுதிகளில் திருச்செங்கோடு வரை புறநகர வளர்ச்சி நீண்டு வருகிறது. இந்தப் பகுதிகளிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் நிலத்தின் மதிப்பும் கூடுதலாகவே இருக்கிறது. இங்கு ஈரோட்டில் இருப்பவர்கள் நிலம் வாங்கினால் முக்கியப் பிரச்னையாக இருப்பது மாவட்டம் மாறுதல்தான். குடும்ப அட்டை முதல் எந்த ஓர் அரசு அலுவலக வேலையாக இருந்தாலும் 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாமக்கல்லுக்கு சென்றுவர வேண்டும். அதனால் ஈரோடு வாசிகள் இந்தப் பகுதிகளில் நிலம் வாங்குவது சற்று குறைவு.

ஆக, நகரத்தின் நாலாபக்கத்திலும் வளர்ச்சி இருப்பதால், உங்களுக்குத் தோதான பகுதியில் இடம் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாகவே இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism