Published:Updated:

ரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்!

சி.சரவணன், படங்கள்: தே.தீட்ஷித்.

##~##

கடந்த பத்து, இருபது ஆண்டுகளில், தங்கம் மற்றும் பங்குச் சந்தையைவிட ரியல் எஸ்டேட் முதலீடு அதிக லாபம் தந்துள்ளது. இடையில் ரியல் எஸ்டேட் விலை சரிந்தாலும் நீண்டகாலத்தில் நல்ல லாபம் தரும் என்கிற நம்பிக்கையை அளிப்பதாகவே இருக்கிறது.

இந்நிலையில், முதலீட்டு நோக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது முக்கியமாக எதை கவனிக்கவேண்டும் என்பதை சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி விளக்கிச் சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அடுக்குமாடிக் குடியிருப்பின் விலைக்கும் வாடகைக்கும் உள்ள விகிதத்தை வைத்து முதலீட்டு நோக்கில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்ய முடியும். ஒரு வீட்டின் விலையை ஆண்டு வாடகை தொகையால் வகுக்கும்போது கிடைக்கும் விகிதம் 15-க்கு கீழ் இருந்தால் மட்டுமே உங்களின் முதலீடு லாபகரமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

உதாரணமாக, ஒரு வீட்டின் விலை ரூ.70 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டால் குறைந்தது மாதம் 50,000 ரூபாய் கிடைக்கும்போதுதான் லாபகரமாக இருக்கும். இந்த வீட்டை கடனில் வாங்கி இருக்கும்போது, மாதத் தவணை (ரூ.70 லட்சத்துக்கு 12% வட்டி, 20 ஆண்டுகளில் கடனை திரும்பக் கட்டுவது என்கிற நிலையில்) சுமார் ரூ.77,000 வரும். இந்த வீட்டின் மூலம் ரூ.50,000 வாடகை வந்தால் கையில் இருந்து ரூ.27,000 இ.எம்.ஐ. கட்டினால் போதும். தவிர, அடுக்குமாடி அமைந்திருக்கும் இடம் எதிர்காலத்தில் எப்படி வளர்ச்சி காணும் என்பதையும் கவனிப்பது அவசியம்'' என்றார்.  

ரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்!

பொதுவாக, வாடகை வீட்டுக்கு அதிக தேவை உள்ள இடங்களில் முதலீட்டு நோக்கில் ஃப்ளாட் வாங்குவது நல்லது. அப்போதுதான் உடனடியாக அந்த வீட்டின் மூலம் வருமானம் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்!

முதலீட்டு நோக்கில் குடியிருப்பு மற்றும் மனைகள் வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் பெற்றவரும் வீட்டுக் கடன் குறித்து வங்கிகளுக்கு மதிப்பீடு அறிக்கை தயாரித்து அளிப்பவருமான டி.பார்த்தசாரதியிடம் (பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சார்ட்டர்டு அண்ட் இன்ஜினீயர்ஸ்) பேசினோம்.

''தமிழகத்தில், தற்போது வீடு மற்றும் மனை விலை மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு விலை உயர்ந்தது மாதிரி இனிமேலும் உயருமா என்பது சந்தேகமே. இதற்கு முன்னால் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், சில ஆண்டுகளில் நான்கைந்து மடங்காக அது அதிகரித்தது. இனி அது இரண்டு மடங்கு என்பதுபோலவே அதிகரிக்கும். ஆனால், போட்ட முதலீடு பெரும்பாலும்  குறைய வாய்ப்பில்லை'' என்றவர், மனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களையும் சொன்னார்.

ரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்!

''மனை வாங்கும்போது அதற்கு செல்லும் சாலைகள் குறைந்தது 30 அடியாக இருக்கும் படியும், லேஅவுட்டின் உள்சாலைகளின் அகலம் குறைந்தபட்சம் 23 அடியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் வீடு கட்டும்போது அரசு அனுமதி எளிதில் கிடைக்கும். விற்கும்போதும் நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில் டி.டி.சி.பி. அப்ரூவ்டு மனைகளாக வாங்குவது நல்லது.

உதாரணத்துக்கு, ஓர் இடத்தில் அங்கீகரிக் கப்பட்ட மனை பிரிவில் சதுர அடி 500 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதே இடத்தில் அங்கீகாரம் இல்லாத மனை, ச.அடி. 300 ரூபாய்க்கு கிடைக்கும். அங்கீகார மனை, ச.அடி 1,000 ரூபாய்க்கு அதிகரிக்கும்போது, அங்கீகாரம் இல்லாத மனை ச.அடி. சுமார் 450 ரூபாய் அளவுக்குதான் அதிகரித்திருக்கும். மனை வாங்கும்போது நம்மவர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கூடவே, சாலை வசதி, தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளையும் கவனித்து மனை வாங்குவது லாபகரமாக அமையும்'' என்றார்.

 டல்லடிக்கிறதா ஃப்ளாட் விற்பனை?

இந்திய அளவில் விற்காமல் தேங்கிக்கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.

2012-ல் ஜனவரி முதல் மார்ச் காலத்தில் இந்தியாவில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை சுமார் 20,000. அதுவே இந்த ஆண்டில் 45,000-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் ஒரு சந்தோஷமான விஷயம், விற்காமல் கிடக்கும் வீடுகளின் சதவிகிதம் இந்திய அளவில் சென்னையில்தான் குறைவு.  

ரியல் எஸ்டேட் முதலீடு... கவனம் இருந்தால் லாபம் நிச்சயம்!

''இந்திய அளவில், ஒரு வீடு கட்டிமுடித்து விற்பனையாக 15 மாதமாகிறது. இது சென்னையில் 10 மாதமாக இருக்கிறது. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இங்கே வீடுகள் வேகமாக விற்றுவிடுகின்றன. அகில இந்திய நிலைமைக்கும், சென்னை நிலைமைக்கும் அதிகம் வேறுபாடு உள்ளது'' என்கிறார், சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லசாலே

(ஜே.எல்.எல்) அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவர் அனுஜ் பூரி.  

''சென்னையில் விற்காமல் கிடக்கும் வீடுகளில் சுமார் 35 சதவிகிதம் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில்தான் உள்ளது. காரணம், ஐ.டி. கம்பெனிகளை நம்பி பெரும்பாலான பில்டர்கள் இந்தப் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். சர்வதேச பொருளாதார மந்தநிலையால் இந்திய ஐ.டி. துறை பாதிக்கப்பட்டதால், இந்தப் பகுதிகளில் ஃப்ளாட் விற்பனை மந்தமாக இருக்கிறது'' என்றார், இந்தியா ப்ராபர்ட்டி டாம் காம்-ன் தலைமை செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன்.