தனியாக வீடு கட்ட வேண்டும் என்கிற காலம் மாறி, இன்று ஃப்ளாட் வாங்குவதே சாத்தியம் என்றாகிவிட்டது. ஆசை ஆசையாக ஃப்ளாட் வாங்கும்முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அகில இந்திய கட்டுநர் சங்கம் (பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) தென்னக மையத்தின் தலைவர் எஸ்.அய்யநாதனிடம் கேட்டோம்.

''அடுக்குமாடிக் கட்டடத்தில் ஃப்ளாட் வாங்கும்முன் அதன் தாய்ப்பத்திரம் பற்றி விவரமாக ஆராய வேண்டும். கட்டுமான நிலத்தின் அசல் பத்திரத்தை ஃப்ளாட் விற்பவர்களிடம் கேட்டு, அதைப் பார்க்கவேண்டும். அதை வங்கி லாக்கரில் வைத்திருக்கிறார்கள் எனில் அதைக் கேட்டு பெற முயற்சிக்க வேண்டும்.

அடுக்குமாடிக் கட்டடம் கட்டும் இடத்தில் அங்கீகாரம் பெற்ற வரைபடம் மற்றும் அதனைப் பற்றிய விவரங்கள் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். கட்டடம் உள்ளாட்சி அமைப்பிடம் அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படிதான் கட்டப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர், பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதை உறுதி செய்யவேண்டும்.

முழுமையான கட்டுமான பணி முடிந்த பின்னர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால், அந்தக் கட்டடம் அங்கீகரிக் கப்பட்டுள்ளதா அல்லது கட்டடம் வரைபடத்தின்படி கட்டப் பட்டுள்ளதா என்பதற்கான பணி நிறைவு சான்றிதழைக் கேட்டு பெறவேண்டியது மிகவும் அவசியம்'' என்றார்.

இவரைத் தொடர்ந்து அதே அமைப்பின் கௌரவ செயலாளர் ஓ.கே.செல்வராஜ் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி சொன்னார். ''அடுக்குமாடிக் குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அதனால் அப்ரூவல் ப்ளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப் பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு (யூ.டி.எஸ்.) பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ். தந்துவிட்டு, உங்களின்

அனுமதி இல்லாமலே பிற்பாடு பில்டர் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.

பொதுப் பயன்பாட்டிற்கான இடம் (காமன் ஏரியா, அதாவது, கார் பார்க்கிங், விளையாட்டு மைதானம் போன்றவை) அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டிவிட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு 950 சதுர அடி என்று விற்கிறார்கள் என்றால், அதில் 870 சதுர அடி கட்டடத்தின் பரப்பளவாகவும், மீதி 80 சதுர அடி காமன் ஏரியாவாகவும் இருக்கும். அதனால் காமன் ஏரியாவில் கவனமாக இருப்பது அவசியம். இந்த விவரங்கள் போடப்படும் அக்ரிமென்டில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்'' என்றவர், பழைய ஃப்ளாட் வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்தும் சொன்னார்.

''குடிநீர் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் எல்லாம் பாக்கி வைக்காமல் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் பழைய ஃப்ளாட் என்றால் அதற்கு அப்ரூவல் வாங்காமலேயேகூட கட்டியிருக்கலாம். அரசாங்க உபயோகத்திற்காக ஒதுக்கி இருக்கும் நிலப்பரப்பில் வீட்டை சேர்த்து கட்டியிருக்கலாம். பழைய ஃப்ளாட் என்னும்போது யூ.டி.எஸ். தவிர, வீட்டின் மதிப்புக்கும் (தேய்மானம் போக) முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சொத்து பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும்.

ஃப்ளாட் சம்பந்தப்பட்ட ஆவணங்களை நல்ல வக்கீல்களிடம் காட்டி அதில் வேறு ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு அதன் பிறகே வாங்குவது உத்தமம். ஃப்ளாட் வாங்கும் முன், நமக்கிருக்கும் சந்தேகங்களுக்கு சி.எம்.டி.ஏ.-வின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினைத் தொடர்புகொண்டு, தெளிவு பெறலாம்'' என்று முடித்தார்.

ஃப்ளாட் வாங்குபவர்கள் இதைக் கவனிக்கலாமே!