Published:Updated:

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

Published:Updated:
'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்


அசராத உழைப்பு... அபார வளர்ச்சி!

பெரிய ஆட்களோடு சேரும் சின்ன ஆட்களும் பிற்பாடு பெரிய ஆட்களாக மாறிவிடுவார்கள். அது மாதிரி பெங்களூரு என்கிற ஹைடெக் சிட்டிக்குப் பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ, ஓசூர் நகரமும் அபார வளர்ச்சி கண்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
மிழகத்தின் முன்னணி நகைக் கடைகள், எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனங்கள், மோட்டார்  வாகன நெரிசல்கள், மக்கள் அடர்த்தி, வாடகை குடியிருப்புகள், புதிதாகக் கட்டப்படும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் என ஒரு பெருநகரத்தை நகலெடுத்த மாதிரி இருக்கிறது ஓசூர். பேருந்து நிலையம், பஜார் ரோடு, காந்தி ரோடு, தாலுகா ஆபீஸ், நேதாஜி சாலை போன்ற நகரின் மையப் பகுதிகள் எப்போதுமே சுறுசுறு.

''இந்த சுறுசுறுப்புதான் ஓசூரின் பலம். ஒரு காலத்தில் வேலை வாய்ப்பற்ற, கல்வி, மற்றும் தொழில் வளர்ச்சிகளில் பின்தங்கிய நகரமாக, மாநிலத்தின் ஒரு ஓரத்தில் கடைக்கோடி நகரமாக இருந்த ஓசூர், இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அபார  வளர்ச்சி அடைந்துள்ளது. என்றாலும், இந்த நகரம் இன்னும் பெரிதாக வளர்ச்சி அடைவதற்கு நிறைய வாய்ப்புள்ளது'' என்றார் டி.வி.எஸ். நகரில் வசிக்கும் சீனிவாசன்.

நகர அமைப்பு!

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

கடல் மட்டத்தில் இருந்து 2,883 அடி உயரத்தில் இருப்பதால் எப்போதும் இதமான சீதோஷ்ண நிலை, கூப்பிடு தொலைவில் பெங்களூரு எனும் ஐ.டி. சிட்டி, முக்கியமாக கர்நாடகாவுடன் தமிழகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, இருமாநில எல்லைப் பகுதிகளுக்கு அருகில் அமைந்திருப்பதால் எல்லா மக்களும் வசிப்பது என தனித்தன்மையுடன் இருக்கிறது. இங்குள்ளவர்கள் பேச்சுகூட மும்மொழிகளும் கலந்து கூடுதல் அழகோடுதான் இருக்கிறது.

தொழிற்துறை சார்ந்த நகரம் என்றாலும், அமைதியான சூழலும் நிலவுகிறது. பேருந்து, ரயில் வசதிகள், 40 கி.மீட்டரில் விமான போக்குவரத்து வசதி என மக்கள் இந்நகரை தேடி வருவதற்கு வலுவான காரணங்களும் உள்ளன. மேலும் வளரக்கூடிய நகரம் என்று சொல்வதற்கான எல்லா அம்சங்களும் உள்ள ஊராகவும் இருக்கிறது.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்


தொழில் வளர்ச்சி!

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

1980-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரசால் ஓசூரில் கொண்டு வரப்பட்ட சிப்காட் -மிபேஸ்தான்

இந்த அசுர வளர்ச்சியின் முதல்படி. ஆனால், இன்றோ புதிய தொழிற்சாலைகளை அமைக்க, விரிவுபடுத்த நகரத்தைச் சுற்றி போதிய இடமில்லை என்கிறார்கள். டி.வி.எஸ், டைட்டன், அசோக் லேலாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களும், 750-க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான தொழில் நிறுவனங்களும் ஓசூரின் முக்கிய ஆதார சக்திகளாக உள்ளன. 'குண்டூசி செய்றது முதல் ஏரோப்ளேன் ரிப்பேர் பண்றது’ வரை சகலவிதமான நிறுவனங்களும் உள்ளன. தவிர காய்கறிகள், ரோஜா, சாமந்தி என பூ வகைகள் உள்ளூர் மார்க்கெட் மற்றும் ஏற்றுமதிக்கான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. பாகலூர் செல்லும் வழியில் எல்காட் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஐ.டி. பார்க் வருவதற்கான திட்டங்கள் அரசின் கையிருப்பில் உள்ளது.

வாழ்க்கைத் தரம்!

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை தரும் ஊர் இது என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். 2000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டுகூட வாழமுடியும்; சாதாரண, நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினர் எல்லோருமே வசிப் பதற்குரிய வகையில் வாடகை வீடுகள் கிடைக்கின்றன. தவிர, முக்கியமான பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குரிய தனி குடியிருப்பு பகுதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது சிறப்பான விஷயம்.

''ஓசூரைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தவிர, பெங்களூருவைச் சார்ந்து பணிபுரிபவர்களும் இங்கு வசிப்பதற்கே பிரியப்படுகின்றனர். இதற்கேற்ப டவுன்ஷிப் எனப்படும் குடியிருப்புகள் பெருகியிருக்கிறது. இந்த டவுன்ஷிப்கள் ரியல் எஸ்டேட் விஷயத்தில் பெரிய மாற்றங்களை ஓசூரில் ஏற்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்''. ''இன்னும் அழகாகச் சொல்ல வேண்டுமெனில் பெங்களூரு எனும் கோப்பையிலிருந்து வழியும் ஒரு சில துளிகளுக்கே ஓசூர் தள்ளாடுகிறது'' என்கிறார் சொர்ணபூமி டவுன்ஷிப் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆர்.சந்திரா மோகன்ராஜ்.  

எல்லாம் சரி, ரியல் வலத்தின் ரியல் நிலவரம் என்ன என்கிறீர்களா?

குறுகிய ஒரு வட்டாரத்தைத் தாண்டி விரிவடைய முடியாமல் நகரம் திக்குமுக்காடுகிறது. மேடுபள்ளமான குன்றுப் பகுதிகளும், மலைப்பகுதிகளும், வனத்துறை காடுகளும் சுற்றிலும் இருப் பதால் குடியிருப்புகள், வீட்டுமனைகளுக்குரிய பகுதிகள் குறைவுதான். இதையட்டியே ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. சமதளமான பகுதிகள் உள்ள ஏரியாக்கள் சக்கை போடு போடுகிறது. அந்த பகுதிகள் பெரும்பாலும் 'டவுன்ஷிப் புரமோட்டர்களின்’ கைகளில் இருக்கின்றன. குறிப்பாக, பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் இடநெருக்கடி காரணமாக அங்கிருந்து இடம் பெயர்ந்து இங்குவந்து குடியேறுவது அதிகமாக உள்ளதால், உயர் வருவாய் பிரிவினருக்கென்றே திட்டமிட்டு வடிவமைக்கப்படும் பல குடியிருப்பு வளாகங்கள் நகரைச் சுற்றி காண முடிகிறது. 30-60 லட்சம் விலையில் இவை தனித்தனி வீடுகளாக கிடைக்கிறது.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்

குறிப்பாக, நகரைச் சுற்றி ஐந்து கி.மீ. வட்டத்துக்குள் அத்திப்பள்ளி சாலையில் கூட்டுறவு நகர், ஈடன் கார்டன், அம்பாள் நகர், டி.வி.எஸ். நகர் பகுதிகளிலும், தேன்கனி கோட்டை வழியில் ஐ.டி.ஐ., பழைய மத்திகிரி, ராயக்கோட்டை கூட்டு ரோடு, டைட்டன் டவுன்ஷிப் பகுதிகளிலும், பாகலூர் வழியில் விநாயகபுரம், உளியாளம் தாண்டியும் குடியிருப்பு மனைகள் விலை சகட்டுமேனிக்கு உயர்ந்து இருக்கிறது. பெங்களூரு வழியில் மூக்கண்டபள்ளி, சிப்காட் I மற்றும் ஜுஜுவாடி வரை விலை றெக்கை கட்டி பறக்கிறது. கிருஷ்ணகிரி வழியில் சிப்காட் II வரை நல்ல விலைதான். சென்ட் கணக்கில்தான் இடங்கள் கைமாறுகின்றன.

இரண்டரை சென்ட் வாங்கினால் ஒரு வீடு கட்டிவிட முடியும் என்றவாறு நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் மனநிலை இருக்கிறது. அந்தந்த பகுதிகளிலும் சரிவான, மேடான சில பகுதிகள் சகாய விலைக்கும் வருகிறது. ஆனாலும், இந்த இடங்களை வாங்கி சரிசெய்த பின்புதான் வீடு கட்டமுடியும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இன்னும் சில வருடங்களில் ஓசூரில் வீடு கட்ட இடம் இல்லாமல் பிளாட் சிஸ்டத்துக்கு மாற வேண்டியிருக்கும். வீடோ, மனையோ வாங்க நினைப்பவர்கள் இப்போதே விழித்துக் கொள்வது நல்லது.

உள்ளூர் தொழில் வளர்ச்சி, பெங்களூருவின் நகர விரிவாக்கம் இரண்டுமே இவ்வூருக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. மின் தட்டுப்பாடு, நகர விரிவாக்கம் இரண்டுக்கும் ஏதாவது வழி கண்டுபிடித்தால் இன்னும் வேகமெடுக்க காத்திருக்கிறது ஓசூர்!

- மகேந்த்
படங்கள்: மா.தமிழ்ச்செல்வன்.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - ஓசூர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism