கடந்த மூன்று ஆண்டுகளாக ஹோம் லோன் வாங்க நினைப்பவர்களை சுண்டி இழுத்து வந்த டீஸர் லோனை (சலுகைக் கடன்) ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கார்ப்பரேஷன் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் இந்த டீஸர் லோனை நிறுத்தும் வேலையில் இறங்கி இருக்கின்றன.

என்னாச்சு இந்த டீஸர் லோனுக்கு? ஏன் அடுத்தடுத்து பல வங்கிகள் இந்த லோனை ஓரம்கட்டுகின்றன? இந்த லோனால் கடன் வாங்கியவர்களுக்கு நன்மை இல்லையா? என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.

. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவிலும் இந்திய அளவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. வீட்டுக்கடனே வேண்டாம் என்று இருந்தவர்களிடம் மீண்டும் கடன் வாங்கும் ஆசையை உருவாக்க ஒரு தூண்டுகோலாக இருந்தது இந்த டீஸர் லோன்தான். .
இந்த முறையில் முதல் சில ஆண்டுகள் குறைவான வட்டிவிகிதமும் (சுமார் 8-9%), அதன் பிறகு அப்போதுள்ள நிலைக்கு ஏற்ற வட்டி விகிதத்தையும் வசூலித்து வந்தன வங்கிகள். இந்த டீஸர் கடனில் இப்போது வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், சில ஆண்டுகள் கழித்து வட்டி உயரும் போது இ.எம்.ஐ-யும் கணிசமாக அதிகரிக்கும். அப்போது கடனைக் கட்டுவதில் பிரச்னை ஏற்படும். அதனால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து லாபம் குறையக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக யோசித்தது ரிசர்வ் வங்கி. அமெரிக்காவைப் போல் இங்கும் 'சப்பிரைம்’ பிரச்னை வந்துவிடக்கூடாது என்று நினைத்த ஆர்.பி.ஐ., அண்மையில் டீஸர் லோனை நிறுத்திவிடும் அதிரடி நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது.

முதல் கட்டமாக, டீஸர் லோனுக்காக வங்கிகள் அவற்றின் லாபத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் தொகையை 0.4%-லிருந்து 2% ஆக உயர்த்தியது ஆர்.பி.ஐ. வங்கிகள் அதிக தொகை ஒதுக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதனால் டீஸர் லோன் கொடுப்பதை வங்கிகள் குறைத்துக் கொள்ளும் அல்லது நிறுத்திக் கொள்ளும் என்பதே அதன் ஐடியா!

ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கிகள் இந்த லோனை நிறுத்திவிட முடிவெடுத்ததைத் தொடர்ந்து கார்ப்பரேஷன் வங்கியும் டீஸர் லோனை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.என். பிரதீப், ''டீஸர் லோனாக

1,000 கோடி கொடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அது நிறைவேறிவிட்டதால் டீஸர் லோனை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம்'' என்று சொல்லி இருக்கிறார்.

டீஸர் லோனுக்குப் பிள்ளையார் சுழி போட்ட எஸ்.பி.ஐ., இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த வங்கி கொடுத்துள்ள வீட்டுக் கடனில் 20 சதவிகிதம் டீஸர் கடன் என்பது முக்கியமான விஷயம். இது குறித்து கடன் மற்றும் நிதி ஆலோசனை நிறுவனமான 'அப்னா பைசா டாட் காம்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் ரூங்டா, ''எஸ்.பி.ஐ. இந்த டீஸர் லோனை தொடர்ந்து வைத்திருந்தால் மற்ற வங்கிகளும் இந்த லோனை கொண்டு வர வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

கடனுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் வீட்டுக் கடனுக்கான ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை முறையே 0.5% மற்றும் 0.75% அதிகரித்துள்ளது. இதைப் பின்பற்றி எஸ்.பி.ஐ. வங்கியும் விரைவில் வீட்டுக் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக் கடன் வழங்குவதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முதன்மை ஏஜென்ஸி நிறுவனமாக இருக்கும் 'கன்சார்ட்டியம் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் விஸ்வநாத் கிருஷ்ணன், ''டீஸர் லோன் வழங்குவதை நிறுத்தியதால் உடனடியாகப் பாதிப்பில்லை. இன்னும் ஒரு மாத காலம் கழிந்த பிறகுதான் தெரிய வரும். கடந்த இரண்டு மாத காலமாக வீட்டுக் கடனுக்கான தேவை கூடிவருகிறது. அந்த வகையில்தான் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருக்கிறது'' என்கிறார்.

டீஸர் லோனை நிறுத்தியது வீடு வாங்குபவர்களுக்கு இழப்பா? என சில முன்னணி நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். ''டீஸர் லோனைப் பொறுத்தவரையில் அது எப்போதும் வாங்குபவர்களுக்கு லாபமாக இருந்தது இல்லை. ஆரம்ப ஆண்டுகளில் குறைவான வட்டியை நிர்ணயித்து விட்டு, பின்னால் அதையும் சேர்த்து வசூல் செய்துவிடுகின்றன பல வங்கிகள். டீஸர் லோனில் ஆரம்பத்தில் இ.எம்.ஐ. குறைவு என்பதால் பலரும் அதை விரும்பி வாங்க, வீடு விற்பனை ஜோராக நடந்தது. இதனால் பலனடைந்தவர்கள் பில்டர்கள்தான். அவர்கள்தான் அதிக லாபம் சம்பாதித்தனர்'' என்றார்கள்.

ஆக, டீஸர் லோனை ஒழித்துக் கட்டியதன் மூலம் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஆர்.பி.ஐ. நல்லதே செய்திருக்கிறது. அதற்கு ஸ்பெஷலாக ஒரு நன்றி சொல்லலாம்!

- சி.சரவணன்