Published:Updated:

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை

பிரீமியம் ஸ்டோரி

புதுக்கோட்டை

போட்டிகள் இருந்தாலும் மோசடிகள் இல்லை!

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை

ராஜ கம்பீரத்தோடுதான் வரவேற்கிறது எல்லா இடங்களும். பழைமை மாறாமல் பராமரிக்கப்படும் வரலாற்று அடையாளங்கள். நான்கு ராஜ வீதிகள்; அதற்கு இணையாக ஒவ்வொரு வீதிக்கும் நான்கு துணை வீதிகள்; அவற்றை இணைக்கும் குறுக்கு வீதிகள் என பார்த்துப் பார்த்து திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் புதுக்கோட்டை.

##~##
ழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் சேகரிப்பு என எல்லா அம்சத்திலும் இந்த நகரத்தின் அமைப்பில் சிறப்பான இடமிருப்பதாலோ என்னவோ, புதிய நகரத்தை உருவாக்க புதுக்கோட்டையை ஒரு மாதிரி நகரமாகவே பார்த்த காலங்களும் வரலாற்றில் உண்டு.

வறட்சி மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என பல குறைபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி ஓரளவு தொழில் வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. சிறுதொழிலும், குவாரிகளும், கல் சிற்பவேலைகளும் ஓரளவுக்கு விவசாயமும் பரவலான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. நகர வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும், நகர விரிவாக்கத்தில் அரசு ஊழியர்களின் பங்கும் பிரதானமாக உள்ளன. டி.வி.எஸ். நிறுவனமும், லேலாண்ட் நிறுவனமும் ஓரளவு வேலை வாய்ப்புகளை வழங்குவதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

ரியல் எஸ்டேட் நிலவரமும் புதுக்கோட்டையில் செம சூடுதான். ''ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்தவரை, கடந்த பத்து வருடமாக அபார வளர்ச்சிதான்'' என்றார் ஒரு கட்டட கான்ட்ராக்டர். முதலில் தவணைத் திட்டங்களில்  தொடங்கிய தொழில், இப்போது  ஹாட்கேஷ் பேமன்ட் என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தொழில் போட்டி நிலவினாலும் பெரிய அளவில் மோசடிகள் இல்லை என்கிறார்கள்.

''ரியல் எஸ்டேட் முதலீடு பாதுகாப்பானது, இரட்டிப்பு வருமானம் தரக்கூடியது என்பதாலேயே இதில் பலரும் முதலீடு செய்ய, விலை சகட்டுமேனிக்கு ஏற அதுவே காரணமாகி விடுகிறது'' என்றார் கட்டியாவயல் சுரேஷ்குமார்.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை
'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை

நகர வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும் என்பது உள்ளூர்வாசிகளின் கோரிக்கை, எதிர்பார்ப்பு. ''இப்போதிருக்கும் நகரம் 400 வருடத்துக்கு முன்னாடி அமைக்கப்பட்டது. ஆனா, இன்னைக்கு பல லட்சம் பேரு வந்தாச்சு. பல பெரிய நிறுவனங்கள் இங்கே வந்தாச்சு. பிருந்தாவனத்துல புறப்பட்டு கீழ ராஜவீதி வழியா ரவுண்டானா வர்றதுக்குள்ள எப்பவும் ஏக டிராஃபிக். இருக்கிற ஒரே பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர். காலத்துல வந்ததுதான். ரெயில் வசதியும் அவ்வளவு திருப்தியா இல்லை. இதெல்லாம் சரியாகணும்'' என்கின்றனர் புதுக்கோட்டைவாசிகள்.  

திருச்சி பெல் நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவு தொழிற்சாலை ஒன்றை திருமயம் அருகே தொடங்கவிருப்பது ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு இனிப்பான செய்தி. இதைச் சொல்லியே திருமயம் பகுதிகளில் மனைகளின் விலை ஏகத்துக்கும் ஏறிவிட்ட தாகச் சொல்கிறார்கள்.

''மாவட்டத்தைப் பொறுத்தவரை சமச்சீரான வளர்ச்சி கிடையாது என்றாலும், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, கறம்பகுடி, திருமயம் பகுதிகளின் மையமான நகரம் என்பதால் ரேட் ஏகத்துக்கும் ஏறி விட்டது'' என்கிறார் சிங்கமுத்து. வீட்டு வாடகை நிலவரமும் சகட்டு மேனிக்குதான் உள்ளது என்கிறார்கள் வாடகை குடித்தனக்காரர்கள்.

பொதுவாக புதுக்கோட்டை நகர அமைப்பில் வடக்குப் பக்கமாக தஞ்சை வழியில் மச்சுவாடி  தாண்டி போக்குவரத்து பரபரப்பில்லை. கால்நடை பண்ணையும், தோட்ட கலைத் துறை காடுகளும்தான். மேற்கு பக்கம் புளூமெட்டல் குவாரிகள்.

திருச்சி வழியில் திருக்கோ கர்ணம் வரைதான் கொஞ்சம் பரபரப்பு தென் படுகிறது. கிழக்குப் பக்கம் பேராங்குளம், உசிலங்குளம், காரைக்குடி வழியில் மாலையீடு வரையிலும் நகர லிமிட் என்று சொல்லலாம்.

விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, நகரத்துக்குள் அன்னவாசல் மெயின் ரோடு, நிஜாம் காலனி, பெரியார் நகர் ஏரியாக்கள் டாப்பில் இருக்கிறது. மணப்பாறை வழியில் திருவப்பூர், கட்டியாவயல், திருச்சி வழியில் கருவப்புலம் கேட், தாவூத் மில், காரைக்குடி வழியில் மாலையீடு வரையிலும், அறந்தாங்கி, ஆலங்குடி பிரிவு வரையிலும் ஆவரேஜ்-ஆக விலை நிலவரம் உள்ளது.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - புதுக்கோட்டை

சதுர அடிக் கணக்கில்தான் இடங்கள் கை மாறுகின்றன. உடனடியாக வீடு கட்டுபவர்களுக்கு அறந்தாங்கி வழி சரியான தேர்வாக இருக்கும். சாலை மார்க்கத்தில் இருக்கும் போக்குவரத்து வசதிபோல ரெயில் மார்க்கத்தில் இல்லாதது குறைதான். பொதுவாக சொல்லும் பட்சத்தில் பழம்பெருமை பேசாமல், புதிய வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தினால் இன்னும் எங்கேயோ போகலாம் இந்த தொண்டை மண்டல நகரம்.  

-நீரை.மகேந்திரன்
படங்கள்: பா.காளிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு