Published:Updated:

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

ன்லைன் மூலம் செல்போன், கேமிரா உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக வீடு, மனைகளையும் நம்மவர்கள் ஆன்லைன் மூலம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கேற்ப, ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் புராஜெட்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

செல்போன் மற்றும் கேமரா போன்ற பொருட்களில் பெரும்பாலும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது என்பதால் அவற்றை ஆன்லைனில் வாங்குவதால், பெரிய பாதிப்பு எதுவும் வந்துவிடப்போவதில்லை. தவிர, ஆன்லைனில் இந்தப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதன் மூலம், கணிசமான பணத்தையும் நம்மால் மிச்சப்படுத்த முடியும். செல்போன் வாங்குகிறமாதிரி வீடு, மனை போன்ற வற்றையும் வாங்கலாமா? அப்படி வாங்கவேண்டுமெனில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ரியாலிட்டிகேம்பஸ் டாட் காம் http://www.realtycompass.com/  நிறுவனத்தின் சிஓஓ சங்கர னிவாசன்.

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!

‘‘ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் ஆன்லைன் மூலம் சொத்துகளை விற்பனை செய்யத்தான் விரும்புகின்றன. பொதுவாக, புராஜெக்ட் செலவில் விளம்பரச் செலவுகளுக்காக 5% ஒதுக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்யும்போது இந்தச் செலவு 0.5 - 0.75 சதவிகிதமாகக் குறைந்து விடுகிறது. ஃப்ளாட் அல்லது வீடு பற்றி யாராவது விசாரிக்க பத்திரிகை விளம்பரச் செலவு ஏறக்குறைய ரூ.8,000 ஆகிறது. இதுவே ஆன்லைன் எனில், ரூ.500 - 700-க்குள் முடிந்துவிடுகிறது.

ஆன்லைன் புக்கிங் என்கிறபோது இரண்டு முறையில் நடக்கிறது. ஒன்று, ரியல் எஸ்டேட் நிறுவனம்,

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!

அதன் இணையதளம் மூலமே புக்கிங் செய்ய அனுமதிக்கிறது. இரண்டாவதாக, இதர ரியல் எஸ்டேட் வெப்சைட்களுடன் இணைந்து இந்த ஆனலைன் புக்கிங்-ஐ மேற்கொள்கிறது.

ஆன்லைன் மூலம் ஃப்ளாட் வாங்க நினைத்தால் 25,000 ரூபாயையும், மனை எனில் 10,000 ரூபாயையும் முன்பணமாக இணையதளம் மூலம் கட்ட வேண்டும். அந்த ஃப்ளாட் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், அதை ஒரு வார காலத்துக்குள் சொல்லிவிட்டால், எந்தக் கழிவும் இல்லாமல் நீங்கள் கட்டிய பணத்தைத் திரும்பத் தந்துவிடுகிறார்கள். ஒருவார காலத்துக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டால், நிறுவனத்தின் நிபந்தனையைப் பொறுத்து குறிப்பிட்ட தொகையைப் பிடித்துக் கொண்டு மீதத்தைத் தருகிறார்கள்.

சில நிறுவனங்கள் இந்த முன்பணத்தைத் திரும்பத் தர மறுக்கலாம். அந்தவகையில், முன்பணம் குறித்த நிபந்தனைகள் என்னென்ன என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்ட பின் பணம் செலுத்துவது நல்லது. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்து அறிவது அவசியம்" என்றவர், முன்பணம் செலுத்தும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டார்.

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!

"சொத்தில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் குறிப்பிடும் வில்லங்கச் சான்றிதழ், லீகல் ஒப்பீனியன், அப்ரூவல் பிளான் ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி உள்ளிட்டவை இணையதளத்தில் சரியாக இருந்தால் மட்டுமே முன்பணத்தைக் கட்டுங்கள். அடுத்து, நீங்கள் புக் செய்யும் ஃப்ளாட் எந்தத் தளத்தில், எந்தத் திசையில் இருக்கிறது?, காற்றோற்றட்ட வசதியை கொண்டிருக்கிறதா?, கட்டடத்தின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கிறது, ஃப்ளாட் அமைந் திருக்கும் பகுதியின் மண்வளம் எப்படி என்பதை யெல்லாம் கவனிப்பது அவசியம். முக்கியமாக, நீங்கள் ஃப்ளாட் வாங்கப்போகும் பில்டரின் நம்பகத்தன்மையைக் கவனிப்பதும் நல்லது" என்றார்.

ஆக, ஆன்லைனில் செல்போன் வாங்குவது மாதிரி அல்ல ஃப்ளாட்டோ அல்லது வீடோ வாங்குவது என்பதை மக்கள் உணர்வது நல்லது!

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!

 பிரபலங்களை நம்பி ஃப்ளாட் வாங்கலாமா?

பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவர்களின் பிராண்ட் அம்பாசடர்களாக முன்னணி திரைப்பட நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்களை வைத்திருக்கின்றன. இவர்களின் ரசிகர்கள் இவர்கள் விளம்பரப்படுத்தும் வீடுகளை வாங்குவதும் நடக்கிறது.

அண்மையில் சென்னை புறநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிமுகப் படுத்தியது. அதன் விளம்பரத்தில் நான் கேரன்டி என்பது போல் முன்னணி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தோன்றி இருக்கிறார். கோட்சூட் போட்ட அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், டிவி நிகழ்ச்சியில் நியாயத்துக்குப் போராடுபவர்போல் கேள்விகளெல்லாம் கேட்பார். இவர் பரிந்துரை செய்தால், நன்றாகத்தான் இருக்கும் என்று நம்பி சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ஃப்ளாட் ஒன்றை புக் செய்திருக்கிறார். பல விஷயங்களில் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னுக்குப்பின் முரணாக நடந்துகொண்டிருக்கிறார்கள். யாரும் எந்த விஷயத்திலும் தெளிவாகப் பதில் சொல்லாமல் இழுத்தடித்திருக்கிறார்கள். பிரபலம் சொன்னதைக் கேட்டு ஃப்ளாட் வாங்கியவர் இப்போது நொந்துபோய் புலம்பிக் கொண்டிருக்கிறார். இனியாவது பிரபலங்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருங்கள்..!

ஆன்லைன் புக்கிங்... அஜாக்கிரதை வேண்டாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு