Published:Updated:

சென்னையில் அகில இந்திய பில்டர்கள் சங்க மாநாடு; முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் துறை புத்துணர்ச்சி பெறுமா?

ரியல் எஸ்டேட்

அகில இந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கம் சென்னையில் 3 நாள்களுக்கு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் 13-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

சென்னையில் அகில இந்திய பில்டர்கள் சங்க மாநாடு; முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் துறை புத்துணர்ச்சி பெறுமா?

அகில இந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கம் சென்னையில் 3 நாள்களுக்கு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் 13-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Published:Updated:
ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறை கடந்த பல ஆண்டுகளாகவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இது கொரோனா காலத்தில் மீண்டும் மோசமடைந்தது.

தற்போது ரியல் எஸ்டேட் துறை மெள்ள மீண்டு வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், இன்னும் சவால்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் அகில இந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கம் சென்னையில் 3 நாள்களுக்கு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

பில்டர் சங்க மாநாடு
பில்டர் சங்க மாநாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 11 முதல் 13 வரை நடக்கும் இந்த மாநாட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

அகில இந்திய பில்டர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் ஆர்.என்.குப்தா தலைமை தாங்க இந்த மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் மார்ச் 11 அன்று அனைத்திந்திய எம்சி/ஜிசி கூட்டமும் விருது வழங்கும் விழாவும் நடைபெறும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாம் நாள் மார்ச் 12 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மாநாட்டின் தொடக்க விழா நடக்க உள்ளது. நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.

ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)
ரியல் எஸ்டேட் (மாதிரி படம்)

மூன்றாம் நாள் ஸ்கிவிங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ஜி.சக்திகுமார் தலைமையில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சவால்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்த கலந்தாய்வுக் கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்தக் கூட்டங்களில் கட்டுமான பொருள்கள், கட்டுமான அம்சங்கள், கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை, கட்டுமான தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism