சௌ.சிவகுமார், நிறுவனர், www.bestservicerealty.in
கோவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக சொந்த வீடு கட்டுவது, வாங்குவது அதிகரித்து வருகிறது. கூடவே, அண்மைக்காலத்தில் முன்பைவிட பெரிய வீடுகளாக வாங்குவது அதிகரித்துள்ளது.வீட்டிலிருந்தே வேலை மற்றும் வீட்டிலிருந்தே படிப்புக்கு ஏற்ப கூடுதல் அறைகளுடன் வீடு பார்ப்பது உயர்ந்துள்ளது.

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஏழு நகரங்களில் சராசரி அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் அளவு 2016-ம் ஆண்டில் 1,440 சதுர அடியாக இருந்தது. இது 2017-ல் 1,260 சதுர அடியாகக் குறைந்தது. 2019-ம் ஆண்டில் 1,050 சதுர அடியாகக் குறைந்திருந்தது. இது 2020-ல் கோவிட் பாதிப்புக்குப் பிறகு, 1,150 சதுர அடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 10 X 10 = 100 சதுர அடி என அளவு உயர்ந்துள்ளதாக அனராக் (ANAROCK) ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் சராசரி அளவு 2019-ல் 1,100 சதுர அடியாக இருந்தது. இது 2020-ல் சுமார் 1,200 சதுர அடியாக அதிகரித்துள்ளது.
பெரிய வீடாக வாங்குவதற்கு அடுக்குமாடி வீட்டின் விலை குறைந்திருப்பதும், வீட்டுக் கடன் வட்டி சுமார் 6.8% அளவுக்குக் குறைந்திருப்பதும் முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.