Election bannerElection banner
Published:Updated:

`முதலீட்டுக்காக அல்ல; குடியிருக்கத்தான் முன்னுரிமை!' - COVID19-க்குப் பிறகு ரியல் எஸ்டேட் நிலை என்ன?

Real estate
Real estate

கோவிட் 19 பரவலுக்குப் பிறகு ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் மற்றும் தங்கத்தைவிட ரியல் எஸ்டேட் பிரபலமான சொத்து பிரிவாக மாறி இருக்கிறது.

கோவிட் 19 பரவலுக்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் புற நகர்களில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளதாக சி.ஐ.ஐ - அனராக் சர்வே தெரிவித்திருக்கிறது.

கோவிட் பாதிப்புக்கு முன் சொந்தப் பயன்பாட்டுக்காக (குடியிருக்க) வீடு வாங்குவது 59% ஆகவும், முதலீட்டு நோக்கில் வீடு வாங்குவது 41% ஆகவும் இருந்துள்ளது. இதில் இப்போது குடியிருக்க வாங்குவது 74% மற்றும் முதலீட்டு நோக்கில் வாங்குவது 26% ஆக உள்ளது. அதாவது, குடியிருக்க வீடு வாங்குவது 15% அதிகரித்துள்ளது. காரணம், கொரானா பாதிப்பின்போது, பலரும் வாடகை வீடுகளில் பல இன்னல்களை சந்திருப்பதே ஆகும். நகரங்களில்தான் அதிக எண்ணிக்கையில் கொரானா பாதித்தது. இதனால்தான் பலரும் நெருக்கடி குறைந்த புற நகர்களை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

பஞ்சாயத்து மனை
பஞ்சாயத்து மனை

25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மில்லினியல்களில் 17% பேர் கோவிட்டுக்கு முன் ரியல் எஸ்டேட்டை ஒரு சொத்துப் பிரிவு (Asset class) என நினைத்துள்ளனர். அது இப்போது 48% ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) ரூ. 90 லட்சம் முதல் ரூ. 2.5 கோடி வரை மதிப்புள்ள 3 படுக்கை அறை மற்றும் 4 படுக்கை அறை சொகுசு வீடுகளை விரும்புவதாகத் தெரிய வந்திருக்கிறது. 38% என்.ஆர்.ஐ-க்கள் வீடுகளை புக்கிங் செய்திருக்கிறார்கள்.

கோவிட்க்கு முன் 600 சதுர அடிக்கு மேற்பட்ட பெரிய 2 படுக்கை அறை வீடுகளுக்கான தேவை 38% ஆக இருந்திருக்கிறது. அது இப்போது 69% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாகப் பல்வேறு ஆஃபர்கள், விலை தள்ளுபடி, குறைவான வீட்டுக் கடன் வட்டி, குடிபோகத் தயார் நிலையில் கிடைக்கும் வீடுகள் ஆகியவை உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றது. 38% பேர் புதிய பிராஜெட்களில் வாங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் புதிதாகக் கட்டப்போகும் வீடுகளில் தங்களுக்கு விரும்பமான சில மாறுதல்களைச் செய்ய விரும்புகிறார்கள்.

கோவிட் 19 பரவலுக்குப் பிறகு ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் மற்றும் தங்கத்தைவிட ரியல் எஸ்டேட் பிரபலமான சொத்து பிரிவாக மாறி இருக்கிறது. 57% பேர் ரியல் எஸ்டேட்-க்கு சாதகமாக மாறி இருக்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் கல்வி போன்றவையும் ரியல் எஸ்டேட்-க்கு சாதகமாக மாறி இருக்கிறது.

Real Estate
Real Estate
வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர் பெரிய நிறுவனங்களின் புராஜெக்ட்களையே விரும்புகிறார்கள். குறிப்பாக, இரண்டு படுக்கை அறை வீடுகளுக்குத் தேவை அதிகரித்திருக்கிறது. 43 சதவிகிதம் பேர் புறநகர்களிலும் 20% பேர் நகர் பகுதிகளிலும் வீடு வாங்க விரும்புகிறார்கள்.

ரூ.45 லட்சத்துக்கு குறைவான வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கான (Affordable homes) விருப்பம் கோவிட்க்கு முன் 31% ஆக இருந்திருக்கிறது. அது இப்போது 40% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஓராண்டுக்கு வீடுகளின் விலை ஏறாது என 67% பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 18% பேர் விலை அதிகரிக்கும் என நினைக்கிறார்கள். ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் விலை ஏற்றம் காணும் என 83% பேர் சொல்லி இருக்கிறார்கள்.

- சௌ.சிவகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு