பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனை முக்கியமான ஏழு நகரங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 113% அதிகரித்திருப்பதாக அனராக் (ANAROCK) ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2020 மூன்றாம் காலாண்டில் சுமார் 29,520 வீடுகள் விற்பனையான நிலையில் 2021 மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 62,800 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இது 156% அதிகரிப்பாகும்.

வேகம் எடுக்கும் வீடு விற்பனை..!

2020 மூன்றாம் காலாண்டில் 32,530 புதிய வீடுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், 2021 மூன்றாம் காலாண்டில் 64,560 வீடுகளுக்கான கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 78 சதவிகித அதிகரிப்பாகும். இதில், மும்பை மெட்ரோ பாலிடன் பகுதியில் அதிகபட்சமாக 16,510 புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய வீடுகளில் ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான நடுத்தர விலை வீடுகளின் பங்களிப்பு 41 சதவிகிதமாக இருக்கிறது. ரூ.40 லட்சத்துக்குள் விலை உள்ள வாங்கக்கூடிய விலையிலான அபோர்டபிள் வீடுகளுக்கான பங்களிப்பு 2021 மூன்றாம் காலாண்டில் 24 சதவிகிதமாக இருக்கிறது. பிரீமியம் வீடுகளின் பங்களிப்பு 25 சதவிகிதமாக உள்ளது.

2021 மூன்றாம் காலாண்டில் சென்னையில் சுமார் 3,405 அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனையாகி இருக்கின்றன. இது முந்தைய 2020 மூன்றாம் காலாண்டைவிட 113 சதவிகிதம் அதிகமாகும். 2021 மூன்றாம் காலாண்டில் சென்னையில் கிட்டத்தட்ட 2,980 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது முந்தைய 2020 மூன்றாம் காலாண்டைவிட 48 சதவிகிதம் அதிகமாகும் முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை 1% முதல் 4% வரை அதிகரித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு