Published:Updated:

நடப்பு நிதி ஆண்டில் வீடுகள் விற்பனை சரிவு! - அதிகமான சரிவை சந்தித்தது டெல்லி என்சிஆர்

செ.கார்த்திகேயன்

இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்ற வீடுகளைவிட, ஹைதராபாத்தில் 33 சதவிகித வீடுகள் கூடுதலாக விற்கப்பட்டிருக்கின்றன.

குடியிருப்பு வீடுகள்
குடியிருப்பு வீடுகள் ( செ.கார்த்திகேயன் )

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 2019 - 20 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில், குடியிருப்புக்கான வீடுகளின் விற்பனை குறைந்திருக்கிறது. அதே சமயம், புதிய வீடுகள் அறிமுகம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே தொடங்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான குடியிருப்பு வீடுகளின் மொத்த விற்பனை 69,485-ஆக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 69,689 -ஆக இருந்தது எனவும் Liases Foras என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி வீடுகள்
அடுக்குமாடி வீடுகள்

அதேபோல கொல்கத்தாவில் 25 சதவிகித வீடுகள் கூடுதலாக விற்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் மற்ற பகுதியைச் சேர்ந்த முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்க, இந்தியாவின் தலைநகரான டெல்லி என்சிஆர் பகுதியில் கடந்த 2018 -19 நிதி ஆண்டின் முதல் காலாண்டைவிட 19 சதவிகித வீடுகள் விற்பனை குறைந்திருக்கிறது. 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் விற்ற மொத்த வீடுகளில் 54 சதவிகித வீடுகள் 50 லட்சம் ரூபாய்க்குக் கீழ் விலை கொண்டவை. 

தேக்க நிலையில் ரியல் எஸ்டேட்... சொத்து வாங்க இது சரியான நேரமா?

விற்பனை குறைந்திருக்கும் இதே சமயத்தில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 65,111 புதிய ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் தொடங்கிய திட்டங்களின் எண்ணிக்கையைவிட 6 சதவிகிதம் அதிகம்.

தலைநகரான டெல்லி என்சிஆர் பகுதியில் கடந்த 2018 -19 நிதி ஆண்டின் முதல் காலாண்டைவிட 19 சதவிகித வீடுகள் விற்பனை குறைந்திருக்கிறது
Liases Foras அமைப்பு

இந்த 65,111 புதிய வீடுகள் திட்டங்களில் 20,108 வீடுகள் திட்டம் மும்பை பகுதியில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. மும்பைக்கு அடுத்து அதிகப்படியாக 14,616 வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டு புனே இரண்டாவது இடத்திலும், 9,555 புதிய வீடுகள் திட்டத்துடன் டெல்லி என்சிஆர் பகுதி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.