Published:Updated:

வீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்..? பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..?

வீடு

வீட்டின் உயரம் ஏழு மீட்டருக்குள் இருந்தால் செட்பேக் ஓர் அளவும், அதற்குமேல் 12 மீட்டர் வரை இருந்தால் செட்பேக் கூடுதல் அளவாகவும் இருக்கும்

வீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்..? பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..?

வீட்டின் உயரம் ஏழு மீட்டருக்குள் இருந்தால் செட்பேக் ஓர் அளவும், அதற்குமேல் 12 மீட்டர் வரை இருந்தால் செட்பேக் கூடுதல் அளவாகவும் இருக்கும்

Published:Updated:
வீடு

? 600 ச.அடி வீட்டு மனைக்குத் தமிழகத்தில் எவ்வளவு செட்பேக் விட்டு வீடு கட்டிக்கொள்ள அரசு/சட்டம் அனுமதிக்கிறது? - பிரகாஷ் தேவராஜ், முகநூல் வழியாக...

> ஆர்.குமார், இயக்குநர், நவீன்ஸ் ஹவுஸிங்: "செட்பேக் என்பது வீட்டைச் சுற்றிவிடப்படும் இடத்தின் அளவாகும். இந்த அளவைக் கணக்கிடுவதற்கு மனையின் அளவு மட்டுமல்லாது, கட்டப்படும் வீட்டின் உயரம், முன்புறம் அமைந்துள்ள சாலையின் அகலம் போன்றவையும் கணக்கில் கொள்ளப்படும். உங்கள் மனையின் அகலம் 30 அடி அல்லது அதற்குள்ளாக இருக்கும்பட்சத்தில், முன்புறம் 1.5 மீட்டர் மற்றும் வீட்டின் இடது, வலது பக்கங்களில் ஏதேனும் ஒருபுறத்தில் 1 மீட்டர் இடம்விட்டுக் கட்டவேண்டும். மனையின் அகலம் 30 அடியைவிட அதிகமாக இருந்தால், வீட்டின் இடது, வலது இரண்டு பக்கமும் 1 மீட்டர் இடம்விட்டுக் கட்ட வேண்டும். முன்புறம் அமைந்த சாலையின் அகலம் 30 அடியாக இருந்தால், இந்த அளவீடுகள் பொருந்தும். அதைவிட அதிகரித்தால் அதற்கேற்ப முன்புறம் விடவேண்டிய இடத்தின் அளவும் அதிகரிக்கும். அதேபோல, வீட்டின் உயரம் ஏழு மீட்டருக்குள் இருந்தால் செட்பேக் ஓர் அளவும், அதற்குமேல் 12 மீட்டர் வரை இருந்தால் செட்பேக் கூடுதல் அளவாகவும் இருக்கும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்றால், வீட்டின் முன்பக்கம் ஒரு மீட்டர் இடம்விட்டுக் கட்டினால் போதும்."

வீடு
வீடு

? நான் பொதுத்துறை வங்கியில் ஏற்கெனவே இரண்டுமுறை வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியிருக்கிறேன். வீட்டுக்கடனையும் முழுமையாகச் செலுத்திவிட்டேன். மூன்றாவது முறை அதே வங்கியில் வீட்டுக்கடன் பெற முடியாது என்கிறார்கள். உண்மையா? - கேசவன், மதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்..? பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..?

> ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி: "எத்தனைமுறை வேண்டுமானாலும் வாங்க லாம். ஏற்கெனவே வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச்செலுத்தியிருப்பது உங்கள்மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்யும். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்தும் வருமானமும், பிற தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதே வீட்டுக்கடன் தரும்போது முக்கியமான விஷயமாகப் பார்ப்பார்கள்''.

? எனது வீட்டுமனைப் பத்திரத்தை லேமினேஷன் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இப்படிச் செய்யக்கூடாது என்கிறார் என் நண்பர் ஒருவர் இது தவறா? - நாகராஜன், திருச்சி

> த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்: ''தவறுதான். சொத்துப்பத்திரத்தை லேமினேஷன் செய்யக் கூடாது. அதில் ஏதேனும் மாற்றம் செய்துவிட்டு, லேமினேஷன் செய்திருப்பதாகக் கருத வாய்ப்புள்ளது. எனினும், உங்கள் வீட்டு மனைப் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை அந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் https://tnreginet.gov.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்தும் உங்கள் பத்திரத்துக்கான நகலைப் பெறலாம். இதற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே டெபிட் கார்டு மூலமாகச் செலுத்த வேண்டும்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? நான் வீட்டுக்கடன் வாங்க அணுகியபோது, இரண்டு வங்கிகள் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் தருகின்றன. இதில் எந்த வங்கியைத் தேர்ந்தெடுப்பது? - ராஜா, சென்னை

> ஆர்.கணேசன், முதன்மைச் செயல் அலுவலர், நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்: "இரண்டு வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் தரும்பட்சத்தில், எந்த வங்கியில் கடன் பெறலாமென ஒப்பிட்டுப்பார்த்துத் தேர்வு செய்ய நிறைய காரணிகள் இருக்கின்றன. முதலில், வங்கிக்குரிய நற்பெயரைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வீட்டுக்கடன் பெற்றவர்களின்மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம். வீட்டுக்கடன் பெறுவதற்கான பிராசஸிங் கட்டணம், டாக்குமென்டேசன் கட்டணம், லைஃப் இன்ஷூரன்ஸ், பிராபர்ட்டி இன்ஷூரன்ஸ், மதிப்பீடு மற்றும் லீகல் ஒப்பீனியன் பெறுவதற்கான புரொஃபஷனல் கட்டணம் உள்ளிட்டவற்றை இரண்டு வங்கிகளுக்கும் இடையே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்..? பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..?

வீட்டுக்கடன் பெற எந்தமாதிரியான உத்தரவாதம் கேட்கிறார்கள், வீட்டுக்கடனுக்கான பிராசஸிங் முடிப்பதற்கான கால அளவு, ரீபேமன்ட் செலுத்துவதற்கான கால அளவு, குறைவான தவணைத் தொகையில் அதிக கால அளவிற்கான அதிக கடன் தொகையைக் கொடுக்கிறார்களா என்பனவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம். வங்கியோடு நீண்டகால உறவில் இருக்கப்போவதால் வாடிக்கையாளர் சேவை நல்ல முறையில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம். இவற்றையெல்லாம் அலசிப் பார்த்து சிறந்த வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்."

> எனக்கு வயது 38. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். 55 வயதில் நான் பணி ஓய்வு பெறும்போது 1 கோடி ரூபாய் சேர்க்க விரும்புகிறேன். எனக்கேற்ற ஃபண்ட் தேர்வைக் கூறுங்கள்.

> நான் பொதுத்துறை ஊழியர். என் ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய். நான் இதுவரை எதிலும் முதலீடு செய்ததில்லை. வரிச் சேமிப்புக்கேற்ற முதலீட்டையும், 2025-ம் ஆண்டில் வீடு கட்டுவதற்கேற்ற முதலீட்டையும் பரிந்துரைக்கவும்.

> செப்டிக் டேங்குக்காகத் தெருவில் நான்கடி பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் பகுதியில் கழிவுநீர்க்கால்வாய்கள் பதிக்கப்படவில்லை. சட்டப்படி எனது செப்டிக் டேங்க்கை விரிவுபடுத்த அனுமதி வாங்க முடியுமா?

- இந்தக் கேள்விகளுக்கான சரியான வழிகாட்டுதலை, நாணயம் விகடன் இதழில் பெற > ஓய்வுக்காலத்தில் ரூ.1 கோடி... எதில், எவ்வளவு முதலீடு செய்வது? https://www.vikatan.com/news/general-news/nanayam-questions-and-answers-16

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |