Election bannerElection banner
Published:Updated:

`அடுத்த 3 மாதங்களில் சொந்த வீடுகளுக்கான தேவை கூடும்... ஏன்?'

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

கொரோனா முடிந்த பிறகு வீடு வாங்கப்போகும் வாசகர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதென்றால் மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு, வணிகக் கட்டடம் - இவற்றில் எது லாபகரமாக இருக்கும்?

- கே.மோகன், சைதாப்பேட்டை, சென்னை-15

"வீடு என்பது அவசியமான தேவை. அதைத் தாண்டி முதலீட்டு நோக்கில் அல்லது எதிர்காலத் தேவைக்கு (ஓய்வுக்காலத்தில் அல்லது பிள்ளைகள் வீடு கட்ட) மனை வாங்கினால் நீண்டகாலத்தில் விலை உயர்ந்து லாபம் தரும்.

வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், நீண்டகாலத்தில் வீட்டின் விலை உயர்ந்து லாபம் தரும். வீடு வாங்குவதென்றால் அனைத்து வசதிகளும் வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் இருக்கின்றனவா எனப் பார்த்து வாங்குவது அதிக லாபம் தருவதாக இருக்கும்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

அதிக வருமானம் வேண்டுமெனில், வணிக வளாகங்களிலுள்ள கடைகளைக் குறிப்பிடலாம். இதற்கு மனை மற்றும் வீட்டைவிட அதிக முதலீடு தேவைப்படும். ஒருவரின் தேவை, வசதியைப் பொறுத்து எதில் முதலீடு செய்யலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும்."

கொரோனா முடிந்த பிறகு வீடு வாங்கப்போகும் என்னைப் போன்ற நாணயம் விகடன் வாசகர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

- ச.ரஞ்சித், மெயில் மூலம்

"இந்த கொரோனாவால் இப்போது எல்லோருக்கும் வீடு முக்கியமானதாக மாறிவிட்டது. காரணம், இதற்கு முன்னர் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. தூங்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. வீடே அலுவலகமாக மாறியிருக்கிறது.

வெளிநாடுகளில் இருக்கும் வாடகை வீடுகளில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவருகிறார்கள். என்.ஆர்.ஐ-கள் அங்கிருக்கும் பிரச்னைகளைப் பார்த்துவிட்டு இந்தியாவில் சொந்த வீடு வாங்கி இங்கே குடியேற விரும்புகிறார்கள். எனவே, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் வீடுகளுக்கான தேவை மிகவும் அதிகரிக்கும்."

எஸ்.ஸ்ரீதரன்
எஸ்.ஸ்ரீதரன்

- தமிழக ரியல் எஸ்டேட், கொரோனாவுக்குப் பிறகு கடுமையான மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் நாணயம் விகடன் வாசகர்களின் ரியல் எஸ்டேட் தொடர்பாகக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' (தமிழ்நாடு) சேர்மனும், நியூரி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் (Newry Properties Pvt Ltd) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான எஸ்.ஸ்ரீதரன். இவர் மேலும் விரிவாக பதிலளித்துள்ள கேள்விகள்:

> தமிழக ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் அவசியம் செய்ய வேண்டியவை என்னென்ன?

> பிற்காலத்தில் நல்ல விலை ஏறக்கூடிய வீட்டு மனைகளை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது?

> கடந்த சில ஆண்டுகளாக 'சொத்துக் கண்காட்சி' என்ற பிராப்பர்ட்டி ஃபேர்களுக்கு சிறு பில்டர்கள் ஏன் வருவதில்லை அல்லது அனுமதிப்பது இல்லையா?

> ரியல் எஸ்டேட் துறையைக் கட்டுப்படுத்தும் ரெரா சட்டத்தால் வீடுகளின் விலை அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?

> ஏற்காடு போன்ற மலை வாழிடங்களில் வீடு வாங்கி நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என்பது ஆசை. அங்கு வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

> கிரெடாய் அமைப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த நகரங்களில் இயங்கிவருகிறது. இது மனை, வீடு வாங்குபவர்களுக்கு எந்த வகையில் உதவி வருகிறது?

- இந்தக் கேள்விகளுக்கான முழுமையான பதில்களை நாணயம் விகடன் இதழில் வாசிக்க Click Here > கொரோனாவுக்குப் பிறகு வீடு விற்பனை அதிகரிக்கும்! - 'கிரெடாய்' எஸ்.ஸ்ரீதரன் https://bit.ly/2WO6tkX

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு