Published:Updated:

பவர் பத்திரம் ரத்து... இனி ஏஜென்டுகளின் ஒப்புதல் வேண்டாம்!

பவர் பத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பவர் பத்திரம்

பவர் பத்திரம்

சொத்து விற்பனை தொடர்பான பவர் பத்திரத்தை ரத்து செய்ய முகவரின் ஒப்புதல் (consent) தேவையில்லை எனவும், அவருக்கு அது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை எனத் தமிழ்நாடு பதிவுத்துறை அறிவித்துள்ளது. சென்னை மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி (Deputy Inspector General of Registration) அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

பொது அதிகார ஆவணத்தை (ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி) ரத்து செய்து, அதைப் பதிவு செய்யும்போது, அது குறித்த விவரத்தை உரிமையாளர், முகவருக்கு (ரியல் எஸ்டேட் ஏஜென்ட்) கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்; அவ்வாறு தெரிவித்ததற்கான ஆதாரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் தர வேண்டும்; அப்படித் தரவில்லை எனில், பொது அதிகார ரத்து ஆவணத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர்கள் ஏற்க மறுப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

பவர் பத்திரம் ரத்து... இனி ஏஜென்டுகளின் ஒப்புதல் வேண்டாம்!

‘‘பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்ய முகவரின் ஒப்புதல் தேவையில்லை. அசல் ஆவணத்தைத் தாக்கல் செய்ய வலியுறுத்தத் தேவையில்லை. பொது அதிகார ஆவணத்தை ரத்து செய்வதாக இருந்தால், ரத்து ஆவணம் மூலமாக உரிமையாளர் ரத்து செய்யலாம்.

மாறாக, முகவருக்கு தந்தி அல்லது கடிதம் வாயிலாகத் தெரிவிக்கச் சொல்வதை சார்பதிவாளர்கள் ஊக்குவிக்கக் கூடாது. இனி வருங்காலங்களில் இது மாதிரியான புகார்கள் வராத வகையில் சார்பதிவாளர்கள் செயல்பட வேண்டும்’’ எனப் பதிவுத்துறை அலுவலகம் சொல்லியிருக்கிறது.

தங்கள் சொத்தை ஏஜென்டுக்கு பவர் எழுதிக் கொடுத்துவிட்டு, அதை ரத்து செய்ய முடியாமல் அவதிப்படும் சொத்து உரிமை யாளர்களுக்குப் பதிவுத் துறையின் இந்த முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.