Published:Updated:

சொத்துப் பத்திரங்கள் ஜாக்கிரதை..! எச்சரிக்கை டிப்ஸ்

சொத்துப் பத்திரம்

பிரீமியம் ஸ்டோரி

சொத்துப் பத்திரத்தை யாரிடமாவது கொடுத்தால், என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.

எம்.பி.ஏ பட்டதாரியான துளசி வம்சி கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் சுமார் 49,497 சதுர அடி நிலம் உள்ளது. இந்தச் சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 கோடி. இந்த நிலத்தை விற்கும் முயற்சியில், அவ்வப்போது சென்னைக்கு வந்த போது, பாலமுருகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனது நிலத்தை விற்றுத் தருவதற்காக, பாலமுருகனிடம் அதற்கான ஆவணங்களைத் துளசி வம்சி கிருஷ்ணா கொடுத்துச் சென்றுள்ளார். அந்த ஆவணங்களை 32 லட்சம் ரூபாய்க்கு, பாலமுருகன் அடகு வைத்திருப்பது துளசி வம்சி கிருஷ்ணாவுக்கு பிறகுதான் தெரியவந்தது.

சொத்துப் பத்திரங்கள் ஜாக்கிரதை..! எச்சரிக்கை டிப்ஸ்

இதை அறிந்து, சொத்து ஆவணங்களைத் திரும்பத் தருமாறு துளசி வம்சி கிருஷ்ணா கேட்டுள்ளார். அப்போது ஆட்களை வைத்து மிரட்டி, துளசி வம்சி கிருஷ்ணாவைக் கடத்திச் சென்று, சொத்தைத் தன் பெயருக்கு எழுதித் தர வேண்டும் அல்லது 10 கோடி ரூபாய் தர வேண்டும் என பாலமுருகன் மிரட்டியுள்ளார். இதற்காகத் துளசி வம்சி கிருஷ்ணாவை, 40 நாள்களாக ஓர் அறையில் அடைத்து வைத்து, நிலத்தைப் பிடுங்கும் முயற்சியில் பாலமுருகனும், அவரின் கூட்டாளிகளும் ஈடுபட்டுள்ளனர். துளசியை அடைத்து வைத்தவர்கள் குடிபோதையில் துாங்கிவிட்டதால், அவர்களிடம் இருந்த மொபைல் போனை எடுத்து, தன் தாய்க்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகு போலீஸுக்கு விஷயம் தெரியவந்து, துளசி வம்சி கிருஷ்ணாவை மீட்ட துடன், அவரைக் கடத்திச் சென்ற பாலமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ஒரு சொத்தின் ஆவணங்களை ஏன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும், சொத்து ஆவணங்களை யாரிடம் கொடுக்கலாம், யாரிடம் கொடுக்கக் கூடாது என்பது குறித்தும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமனிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘துளசி வம்சி கிருஷ்ணாவுக்கு நிகழ்ந்த சம்பவத்தைப்போல பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்த நண்பரின் குடும்பத் துக்கும் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது. அவர் பெயர் ராஜா. அவர் ஒரு நாள், தனக்குச் சொந்தமான வீட்டுப் பத்தி ரத்தை, அவருடைய நண்பர் குமாரிடம் கொடுத்து, வங்கி லாக்கரில் வைக்கச் சொல்லி யிருக்கிறார். இந்த விஷயத்தைத் தன் மகன்களிடமோ, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோ கூட ராஜா சொல்லவில்லை.

சில வருடங்கள் கழித்து அவர் இறந்துபோக, லாக்கரில் வைத்திருந்த பத்திரத்தை எடுத்த குமார், தனது தொழிலுக்குத் தேவையான மூலதனத்துக்காக அதை அடமானமாக வைத்து கடன் பெற்றிருக்கிறார். இதற் கிடையில் ராஜாவின் வாரிசுகள், ஒரிஜினல் பத்திரம் இல்லா மலேயே இன்னொரு வருக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய, அந்த வீட்டை வாங்கிய வரை அடமானக் கடன் தந்த நிதி நிறுவனம் சுற்றி வளைத்தது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் இது மாதிரியான தவறுகளில் இருந்து வெளியில் வர பெரும்பாடும்பட வேண்டி யிருக்கும்.

ஒரிஜினல் ஆவணங்கள் என்பது ஒருவருடைய சொத்தின் மீதான உரிமை ஆகும். அதைப் பிறரிடம் கொடுக்கிறீர்கள் எனில், உங்களுடைய உரிமையை இன்னொருவருக்கு வழங்குகிறீர்கள் என்று அர்த்தம். அந்த உரிமையை வைத்து, அதைப் பெற்றுக்கொண்ட நபரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எனவே, சொத்தின் மீதான எந்த ஆவணங்களையும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களிடம் கொடுப்பது கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம்கூட அவசியம் எனில் மட்டுமே வழங்க வேண்டும். சொத்துப் பத்திரத்தை வங்கி லாக்கரிலோ, உங்களுக்கென்று இருக்கும் பாதுகாப்பான இடத்திலோ வைத்திருப்பதுதான் நல்லது.

இன்றைய நிலையில், ஒரிஜினல் பத்திரங்களைப் அடமானமாக வைத்து வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் அதிகம். இதுவும் பிரச்னைக்குரிய விஷயம்தான். ஒருவேளை, அந்த சொத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் சொத்து பத்திரத்தின் நகலைக்கூட இன்னொரு வரிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது” என்றார் தெளிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு