Published:Updated:

சொத்து வில்லங்க விவரங்களை இனி இணையத்திலேயே பார்க்கலாம்!

 வில்லங்கச் சான்று
பிரீமியம் ஸ்டோரி
News
வில்லங்கச் சான்று

வில்லங்கச் சான்று

வீடு, மனை, தோட்டம் போன்றவற்றை வாங்குபவர்கள், அது தொடர்பாக ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். இதற்கு முன் பொது மக்கள், வில்லங்கச் சான்றுக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும்; ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். அது கிடைக்க சில நாள்கள் அலைய வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இணையதளம் மூலம் வில்லங்கச் சான்று பார்க்கும் வசதி கொண்டு வரப்பட்டது.

முதலில் 1987-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்கள் முதலில் கணினிமயமாக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, 1975-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்களைப் பெறும் வசதி, 2018-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. வில்லங்க விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் பார்ப்பதுடன் பிரதி எடுத்துக் கொள்ளும் வசதியும் வந்தது.

சொத்து வில்லங்க விவரங்களை இனி இணையத்திலேயே பார்க்கலாம்!

‘‘இந்த நிலையில், தற்போது 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்துக்குரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் டி.சி.எஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் பதிவேற்றம் செய்யும் ஆவணங் களை 100% சார்பதிவாளர்களும், 5% மாவட்ட பதிவாளர்களும், 2% டி.ஐ.ஜி-களும் சரிபார்க்க வேண்டும்.

இந்த ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இணையதளம் மூலம் இந்த ஆவணங்களைப் பெறுவதற்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும்’’ என அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆன்லைனில் வில்லங்கச் சான்று பார்க்க: https://tnreginet.gov.in/portal/

ரியல் எஸ்டேட் துறையில் இது நல்ல முன்னேற்றம்தான்!