Published:Updated:

`உதவி தேவை!' - மத்திய அரசிடம் ரியல் எஸ்டேட்துறை கோரிக்கை

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

இதையடுத்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி சபை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் ரியல் எஸ்டேட்துறை கொரோனா பாதிப்பிலாருந்து மீள சில உதவிளைக் கேட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியப் பொருளாதாரமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் மக்களிடையே கொரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சம் காரணமாக வீடுகள் விற்பனையும் தேக்கமடைந்துள்ளது. இதையடுத்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் (National Real Estate Development council) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் ரியல் எஸ்டேட் துறை கொரோனா பாதிப்பில் இருந்து மீள சில உதவிளைக் கேட்டுள்ளது.

DRT
DRT

இதுகுறித்து சபையின் தலைவர் மற்றும் சூப்பர் டெக் நிறுவனத்தின் தலைவருமான ஆர்கே ஆரோரா கூறுகையில், "கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீடுகள் எதுவும் விற்பனையாகவில்லை. சந்தையில் வீடுகளை வாங்குவதற்கு யாரும் இல்லாததால் வீடுகளின் மதிப்பும் பூஜ்ஜியத்தில் உள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சரிடமிருந்து சில நிவாரணங்களைக் கேட்டுள்ளோம்" என்றார்.

அஷ்வின் செய்த மன்கட் விக்கெட் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும்..? - காரணம் `கொரோனா’

ரியல் எஸ்டேட் திட்டங்களுக்காக வங்கிகள் கொடுத்த கடனை இரண்டு ஆண்டுக்காலம் கழித்து கொடுப்பதற்கான அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளது. மேலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படாத சொத்துகளாக அறிவிக்கப்படக் கூடாது என்றும், பயனாளர்களிடம் உடனடியாகப் பணத்தைத் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதோடு, ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, தேசிய கம்பெனி தீர்ப்பாயம் (NCLT) அல்லது கடன்கள் மீட்பு தீர்ப்பாயத்தில் (DRT) உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. சில்லறை வீடு வாங்கியவர்களுக்கும் கொரோனா பாதிப்பால் கடனைச் செலுத்துவதற்கு போதுமான வசதி இருக்காது. இதனால் இவர்கள் மாதாந்திர இஎம்ஐ கட்டுவதற்கும் பன்னிரண்டு மாதம் அவகாசம் கேட்டுள்ளது.

NCLT
NCLT

ஏற்கெனவே, ஹரியானாவுடைய க்ரடாய் அமைப்பு மாநில அரசிடம் ரியல் எஸ்டேட் துறைக்கு விதிகளைச் சற்றே தளர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் குசகர் அன்ஸால் கூறுகையில். "ரியல் எஸ்டேட் துறை நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் 10 சதவிகிதம் பங்களிப்பு அளிக்கிறது. நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்ச வேலையாட்களைக் கொண்ட துறையும் இதுவே. இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் அரசிடமிருந்து சலுகைகளும் உதவிகளும் கிடைக்கவில்லை எனில் ரியல் எஸ்டேட் துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும்" என்றார் .

கொரோனா தொற்று காரணமாக அனைத்துக் கட்டுமான தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், வீடு கட்டுவதற்கான தேவையான பொருள்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாநில எல்லைகளும், மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளதால் தேவையான பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளன. இதனால் வீடு கட்டுமானத் துறை பெரும் தேக்க நிலையைச் சந்தித்துள்ளது.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்
கொரோனா அலர்ட்... உங்கள் நிதி நலனைக் காப்பது எப்படி?

இதற்கிடையில் தனி நபர் வீட்டுக் கடன்களையும் அடைக்க அரசு சலுகைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு மற்றும் சம்பள பிடித்தம் ஆகிய காரணங்களால் இவர்களாலும் இஎம்ஐ கட்டுவது சிரமமே. இதைக் கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கும் உதவி செய்தல் அவசியம். இதனால் சற்றே அவர்களால் நிதி நெருக்கடியிலிருந்து ஆறுதல் அடைய முடியும். கொரோனா தெற்றால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க வேண்டியது மத்திய ,மாநில அரசுகளின் தலையாய கடமை என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

அடுத்த கட்டுரைக்கு