Published:Updated:

தேக்க நிலையில் ரியல் எஸ்டேட்... சொத்து வாங்க இது சரியான நேரமா?

சி.சரவணன்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளமும் முன்புபோல பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. இதனாலும், பலரும் வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை சுறுசுறுப்பாக இல்லை. வீடு மற்றும் மனைகளின் விலை அபாரமாக உயரும் என்கிற நோக்கில் முதலீடு செய்தவர்கள், விலை உயராமல் தேக்க நிலையில் இருப்பதைக் கண்டு குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு வந்த பணமதிப்பு நீக்கம் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி வேகத்தைப் பெருமளவில் குறைத்துவிட்டது என்றாலும், அதுதவிர பிற காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் வீடு வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ளதாக அண்மையில் வெளியான ஆர்.பி.ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேக்க நிலையில் ரியல் எஸ்டேட்... சொத்து வாங்க இது சரியான நேரமா?

உதாரணமாக, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஒருவர் வீடு வாங்க வேண்டும் எனில், அவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 2.90 மடங்கு பணம் தேவைப்பட்டது. இது 2019 மார்ச் மாதத்தில் 3.30 மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, அவர்களின் கடன் சுமை சுமார் 13% அதிகரித்துள்ளது. இதனால் வீடு வாங்கும் சக்தி குறைந்து, சொத்து வாங்குவதும் குறைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களில் வீட்டுமனை மதிப்பு சுமார் 2-3% குறைந்திருக்கிறது.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, நிறுவனங்களின் வளர்ச்சியானது குறைந்தது போன்ற காரணங்களால் நம் நாட்டில் புதிய வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகவில்லை. தவிர, பல துறைகளில் வேலை இழப்பு என்பதும் அதிகரித்திருக்கிறது.

மேலும், தனியார் துறை ஊழியர்களின் சம்பளமும் முன்புபோல பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. இதனாலும், பலரும் வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவும் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து தேக்கத்திலேயே இருக்கிறது.

தேக்க நிலையில் ரியல் எஸ்டேட்... சொத்து வாங்க இது சரியான நேரமா?

வாடகைக்கு விடாமல், தாங்களே குடியிருக்க வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணமாகும். சொத்தின் விலை, முன்பைவிடக் குறைந்திருக்கிறது. மேலும் வீட்டுக்கடன் வட்டி 8.6% அதிகம் என்று சொல்ல முடியாது. இந்த வட்டி விகிதமானது இனிவரும் காலத்தில் குறைந்தாலும் மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங் ரேட்) கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில், நாம் கட்டுகிற இ.எம்.ஐ தொகையும் குறையவே செய்யும்.

> ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை இருப்பது ஏன், வீடு மற்றும் மனைகளின் விலை ஏறாமல் இருப்பதற்கான 8 காரணங்கள் என்னென்ன என்பதை அறிய நாணயம் விகடன் இதழில் வெளிவந்துள்ள 'தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... விலை ஏறாததற்கு என்ன காரணம்?' எனும் கவர் ஸ்டோரியை வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/