Published:Updated:

வேகமெடுக்கும் அடுக்குமாடி வீடுகள் விற்பனை..!

அடுக்குமாடி வீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
அடுக்குமாடி வீடுகள்

ரியல் எஸ்டேட்

வேகமெடுக்கும் அடுக்குமாடி வீடுகள் விற்பனை..!

ரியல் எஸ்டேட்

Published:Updated:
அடுக்குமாடி வீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
அடுக்குமாடி வீடுகள்

பாலாஜி வெங்கட்

இந்தியாவில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்று முடிக்க சுமார் 55 மாதங்களாகின. இது 2021 டிசம்பர் இறுதியில் 32 மாதங்களாக குறைந்திருக்கிறது. இது 2019-ம் ஆண்டு 30 மாதங்களாக இருந்தது. அதாவது, தற்போதைய இந்திய ரியல் எஸ்டேட் விற்பனை நிலவரம் கோவிட் 19-க்கு முந்தைய நிலையை எட்டி யிருக்கிறது.

டெல்லி – என்.சி.ஆர் பகுதியில் 2020-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்பனை யாகும் காலம் 89 மாதமாக இருந்தது. அது 2021 இறுதியில் 49 மாதங்களாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவிலே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வேகமாக விற்பனையாவது பெங்களூரில்தான். இங்கு, கட்டி முடிக்கப் பட்டு 21 மாதங்களில் வீடுகள் விற்பனையாகி விடுகிறது.

வேகமெடுக்கும் அடுக்குமாடி வீடுகள் விற்பனை..!

ஹைதராபாத்திலும் கட்டப்பட்ட வீடு விற்பனையாகும் காலம் 52 மாதங்களிலிருந்து 30 மாதங்களாகக் குறைந்திருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 2020–ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகும் காலம் 61 மாதங்களாக இருந்தது. அது 2021 இறுதியில் 33 மாதங்களாகக் குறைந்திருக்கிறது.

பொதுவாக, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் 18 - 24 மாதங்களில் விற்றுவிட்டால், அது ஆரோக்கியமான ரியல் எஸ்டேட் சந்தை எனலாம். இந்தியா முழுக்க, 2021 டிசம்பர் மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை 6.38 லட்சம். 2021–ம் ஆண்டில் இந்தியா முழுக்க மும்பை, டெல்லி, உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் மொத்தம் 2.36 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலாண்டில் மொத்தம் 90,000 வீடுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது கடந்த ஆறு மாதங்களில் மிகவும் அதிகம். இந்தத் தகவல் களை சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் (ANAROCK) தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism