Published:Updated:

வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபமா?

வாடகைக்கு வீடு...
பிரீமியம் ஸ்டோரி
வாடகைக்கு வீடு...

சோஷியல் மீடியா

வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபமா?

சோஷியல் மீடியா

Published:Updated:
வாடகைக்கு வீடு...
பிரீமியம் ஸ்டோரி
வாடகைக்கு வீடு...

''வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் தங்களது பதில்களைப் பகிர்ந்திருந்தார்கள்.

“பத்து சென்ட் இடத்தில் ஒரு பெரிய வீடு கட்டி அதிக வாடகை எதிர்பார்ப்பது நஷ்டத்தைத் தரும். ஆனால், அதே பத்து சென்டில் 20 வீடுகளாக (மாடி வீடு சேர்த்து) அடிப்படை வசதிகளோடு, சிறு சிறு வீடுகளாகக் கட்டி, ஒப்பந்தத்தோடு குறைந்த வாடகைக்கு விடுவது லாபம் தரலாம். ஆனால், கடன் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விடுவது நல்லதல்ல” என்று அசத்தல் டிப்ஸ் கொடுத்துருக் காரு பார்த்தசாரதி. நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா..!

“லாபம் கட்டாயம் இல்லை. வாடகைக்கு விட்டு அவர்கள் ஒரு வருடத்தில் வீட்டைப் பாழ்படுத்தியதை மீண்டும் சரிசெய்ய (டைல்ஸ், குழாய், பிளம்பிங் வேலை, டிஸ்டம்பர் & கூலி) அந்த ஒரு வருட வாடகை காலி. அத்துடன் அதிகமாக உயர்த்தப்பட்ட சொத்து வரி, குழாய் வரி, கழிவுநீரை சுத்தம் செய்தல் என்பதை எல்லாம் கணக்குப் போட்டுப் பாருங்கள். வீடு காலி செய்பவர்களிடம் அதிகபட்சம் ரூ.1,000 அல்லது ரூ.2,000கூட அட்வான்ஸில் பிடித்தம் செய்ய முடியாது. வீட்டு ஓனர் அரசியல்வாதி அல்லது ஏரியா ரவுடியா இருந்தா, இந்த எல்லா செலவுக்கும் அட்வான்ஸில் பிடித்துக்கொள்வார். அவர்களிடம் ஒன்றும் பேச மாட்டார்கள். மற்ற சாதாரண மானவர்கள் வாடகைக்கு விட்டால், வீட்டு ஓனர்தான் இந்தச் செலவை செய்தாகணும்’’ என்று குமுறியிருக் காரு சந்துரு ரங்கநாதன். அனுபவம் பேசுது!

வீடு கட்டி வாடகைக்கு விடுவது
உண்மையிலேயே லாபமா?

“இந்தியாவிலா... வேறு நாடு களிலா..? அமெரிக்காவுலே வீட்டு வாடகை பணத்தில் வீட்டையே வாங்கிவிடுகின்றனர்”ன்னு கமென்ட் பண்ணிருக்காரு கோபாலகிருஷ்ணன். அமெரிக்கா அமெரிக்காதான்!

“இல்லைங்க. மெயின்டனன்ஸ் பண்ண முடியல. காசு புகைபுகையா செலவாகுது மெயின்டனஸ்க்கு”னு அலர்ட் பண்ணிருக்காரு அப்துல் மாலிக். கட்டுப்படியாகல மை லார்ட்!

“சிறுசிறு இடங்களாக, நாளைக்கு விற்பனைக்கு உகந்த இடங்களாக வாங்கி பிற்காலத்தில் தங்களுக்குத் தேவையான அளவுக்கு விற்றுவிட்டு, அதில் தங்களுடைய குடும்ப செலவைப் பார்த்துக்கொள்ளலாம். அதிகப் படியான உபரிப்பணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நான் 2010-ல் 720 சதுரஅடியில் 3 அடுக்காக வீடு கட்டி வாடகைக்கு விட்டேன். இன்று எனக்கு டைல்ஸ், பெயின்டிங், ரிப்பேர் செய்ய என ரூ.1.30 லட்சம் செலவாகிறது. நான் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லை. இது தேவை இல்லாத ஒன்று...” - தன்னோட அனுபவக் கணக்கை சமர்ப்பித்திருக்கிறார் ஏழுமலை. சத்தியமான வார்த்தைங்க..!

“நகரமோ, கிராமமோ, வீடுகட்டும் செலவு அதேதான். ஆனால், கிராமத்தைவிட நகரங்களில் அதிக வாடகை கிடைக்கும். சொத்து மதிப்பில் ஆண்டுக்குக் குறைந்தது 3 சதவிகிதமாவது வாடகை வர வேண்டும். அப்படி வரும் வாடகையை எஸ்.ஐபி மூலம் மாதம்தோறும் நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், நீண்ட கால நோக்கில் இன்னும் அதிக லாபம் பார்க்கலாம்”னு புதிய முதலீட்டு ஃபார்முலாவைச் சொல்லியிருக்காரு ஹரிஷ்நாராயண். இது டபுள் டமாக்காவா இருக்கே!

“லாபமான முதலீடு என்பது தவறானது. முதலீடானது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தருவதாக இருந்தால் நல்லது. ஆனால், வீடு கட்டி வாடகைக்கு விட்டால் உங்களுக்குக் குறைவான வருமானமே கிடைக்கும்”னு சொல்லிருக்காரு ஶ்ரீதர் சாரதி. சூப்பர்பு...

ஆக மக்களே, இனியும் வீட்டைக் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் நீங்கள் இறங்குவீங்களா..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism