Published:Updated:

`கோ-வொர்க்கிங்', `கோ-லிவிங் பில்டிங்'... ரியல் எஸ்டேட் டிரெண்டும் சில புரிதல்களும்!

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

'கோ-வொர்க்கிங்'கில் குறைந்த செலவில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். 24 மணி நேரமும் அங்கே பணியாற்றலாம். உங்கள் அனைத்துத் தேவைகளையும் அந்தக் கட்டட ஆபரேட்டரே பார்த்துக்கொள்வார்

மீரா சிவா: தற்போது பதிவுபெற்ற ரியல் எஸ்டேட் முகவர்கள் அதிகரித்துவருகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அமித் தாமோதர்: சென்னையில் பதிவுபெற்ற முகவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒரு சொத்தை வாங்குவது அல்லது விற்பதில் முகர்களுக்கு 10% பொறுப்பு இருக்கிறது. முகவர்களால்தான் சரியான நேரத்தில், சரியான விலைக்குச் சொத்தை விற்க முடியும். அவர்கள் அந்தச் சொத்தை நல்ல திட்டமாக்கி விற்பனை செய்கிறார்கள். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Pym9Xe

ஒரு முகவரிடம் செல்வதென்பது, ஒரு சிறப்பு மருத்துவரிடம் செல்வதைப் போன்றது. எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் நாம் கூகுளில் தேடுவதில்லை, மருத்துவரிடம்தான் செல்கிறோம். அதேபோல, ஒரு சொத்தை வாங்கும்போது ஆன்லைனில் பார்ப்பதைவிட, அதற்கான முகவரிடம்தான் பலரும் செல்கிறார்கள். முகவர்கள் 2% கமிஷன் பெறுகிறார்கள். பதிவு செய்யப்பட்ட முகவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, ஓரிடத்தில் பத்து வீடுகள் இருக்கின்றன என்றால், அவற்றில் வாங்கப் போகிறவரின் தேவைக்கேற்ப சரியாக வீட்டைத் தேர்வு செய்து தருவார்கள். வீடு வாங்குபவருக்கும் சரியான வீட்டை, சரியான விலைக்கு வாங்கிய திருப்தி ஏற்படும்.

மீரா சிவா: 'கோ-வொர்க்கிங்', 'கோ-லிவிங் பில்டிங்' போன்ற பலரும் இணைந்து குடியிருக்கும் டிரெண்ட் வரும்போது அவற்றை ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும்போது எப்படி விளக்கிப் புரியவைப்பீர்கள்?

ஒருவர் வாடகையே கொடுக்காமல் இழுத்தடித்தால் ஆறு மாத காலத்தில் அந்த வீட்டைவிட்டு அவர் வெளியேறியாக வேண்டும்.

அமித் தாமோதர்: 'கோ-வொர்க்கிங்' என்பது பலர் இணைந்து செலவுகளைப் பகிர்ந்துகொள்வது. ஓர் அலுவலகத்தைத் தனியாகப் பயன்படுத்துவதென்றால் அதற்கான வாடகை, துப்புரவுப் பணியாளர் கட்டணம், பராமரிப்பு, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் அலுவலகத்தைப் பயன்படுத்துவது, பார்வையாளர் பார்க்கிங் எனப் பலவற்றுக்கும் ஒருவரே செலவழித்தாக வேண்டும்.

'கோ-வொர்க்கிங்'கில் குறைந்த செலவில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். 24 மணி நேரமும் அங்கே பணியாற்றலாம். உங்கள் அனைத்துத் தேவைகளையும் அந்தக் கட்டட ஆபரேட்டரே பார்த்துக்கொள்வார். அதேபோல, 'கோ-லிவிங் பில்டிங்' முறையில் நீங்கள் தங்கும் இடத்துக்கான படுக்கை எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். சீனாவில் பல குடும்பங்களே இது போன்ற கோ-லிவிங் பில்டிங்குக்கு மாறிவருகிறார்கள். தனி வீடாக இருந்தால் அதைப் பராமரிப்பது கடினம். எனவே, அவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது. இந்தியாவிலும் இதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

`கோ-வொர்க்கிங்', `கோ-லிவிங் பில்டிங்'...  ரியல் எஸ்டேட் டிரெண்டும் சில புரிதல்களும்!

மீரா சிவா: வீட்டைக் கட்டி விற்பதாக இருந்த ரியல் எஸ்டேட் துறை, வாடகைக்குவிட்டு சம்பாதிப்பதாக மாறும்போது அங்கே குடியிருப்பவர்களுக்கும் பில்டருக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்கும், அதில் எழும் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது?

விஜயகுமார்: இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகத்தான் வாடகைச் சட்டம் தனியே இருக்கிறது. இதன் மூலம் வழக்கு தொடுத்து தீர்வு காணலாம். ஒருவர் வாடகையே கொடுக்காமல் இழுத்தடித்தால் ஆறு மாத காலத்தில் அந்த வீட்டைவிட்டு அவர் வெளியேறியாக வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும். இதில் ஒழுங்குமுறைகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு நிர்வாகத்திறன் மேம்படும். இதில் புதிய வாடகைச் சட்டத்தின் பங்களிப்பு நல்லவிதமாக உள்ளது.

- நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக முக்கியமான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ‘ரியல் எஸ்டேட் துறையின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் அந்தக் கலந்துரையாடல் நடந்தது. அதன் முழுமையான பகுதியை வாசிக்க > ரியல் எஸ்டேட் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? - நிபுணர்கள் அலசல் https://www.vikatan.com/news/general-news/experts-opinion-on-the-current-status-of-the-real-estate-industry

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு